Published:Updated:

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை
ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

வெற்றிப் பாதையில் பயணிக்கும் நேரம் இது.


மனிதநேயம் உள்ளவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை



சூரியன் லாப வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மகனுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ராசிநாதன் செவ்வாய் 12-ல் இருப்பதால், எதிலும் ஒரு தடுமாற்றம் வந்து செல்லும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் இருக்காது. ஆனால், கேது லாப வீட்டில் தொடர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில், வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எதிலும் நிதானம் அவசியம். விலையுயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கணிசமாகக் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் நேரம் இது.


இலவசங்களை விரும்பாதவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

செவ்வாயும் சுக்கிரனும் லாப வீட்டில் இருப்பதால், சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். விலகிச்சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சூரியன் 10-ல் இருப்பதால், புது வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். புதிதாக வாங்கப்போகும் சொத்துக்குப் பாதி பணம் மட்டும் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? இப்போது, மீதி பணத்தையும் கொடுத்து பத்திரப்பதிவு செய்து கொள்ளும் சூழல் கனியும். ராகு பகவான் 4-ல் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனம் மற்றும் வீட்டுப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எலெக்ட்ரானிக் சாதனங்கள் மீது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி பதவி மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

நண்பர்களால் மறுமலர்ச்சி ஏற்படும் காலம் இது.

புதுமையை விரும்புபவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை



16-ம் தேதி முதல் புதன் சாதகமாக இருப்பதால், பணவரவு கூடும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருமானத்தை உயர்த்துவதற்காகக் கடுமையாகப் போராடுவீர்கள். செவ்வாய் 10-ல் இருப்பதால், கடினமான காரியங்களையும் தைரியமாக எடுத்துச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய திட்டங்களுக்கு உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சொத்துச்சேர்க்கை உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். பழைய கடனில் ஒரு பகுதியைத் திருப்பித் தருவீர்கள்.

9-ல் சூரியன் இருப்பதால், சோர்வு-களைப்பு வந்து நீங்கும். சிறிய அளவில் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சனி வலுவாக இருப்பதால் வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில், மேலதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் சக ஊழியர்களால் மன இறுக்கம் உண்டாகும்.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும் நேரம் இது.

மனதில் உள்ளதைப் பேசுபவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் வீட்டை விரிவு படுத்திக் கட்டுவீர்கள். சூரியன் 8-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும்; பணப்பற்றாக்குறை ஏற்படும். திடீர்ப் பயணங்களும் வந்து போகும்.

செவ்வாய் 9-ல் இருப்பதால், தந்தையின் உடல்நலன் பாதிக்கும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை; முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். கண், காது, மற்றும் பல் வலி வந்து நீங்கும். சிலருக்குச் சிறுநீரகத்தொற்று ஏற்படலாம். வியாபாரத்தில் பற்று-வரவு கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகம் அடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்கவேண்டி இருக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறியே நீடிக்கும்.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் காலம் இது.


அமைதியாக இருந்து சாதிப்பவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை



சூரியன் 7-ல் இருப்பதால், ஒருவித பதற்றத்துடன் திகழ்வீர்கள்.முன்கோபம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். ஆனால், புதன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட சிந்தனைகள் உண்டாகும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். யதார்த்தமாகச் சிந்தித்து செயல்படுவீர்கள்.  `தன் கையே தனக்கு உதவி' என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

செவ்வாய் 8-ல் இருப்பதால், சொத்துப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படும் என்பதால் பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். அவசரப்பட்டு முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். அவர்களுடன் மனக்கசப்பும் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் கோபம் நீங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கலகலப்பாகப் பேசி காரியம் சாதிக்கும் காலம் இது.

தோல்வியைக் கண்டு துவளாதவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

சூரியன் 6-ல் இருப்பதால், முடியாது என்று நினைத்த பிரச்னைகளுக்கும் சுமுகமான தீர்வு கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ராசிநாதன் புதன் 16-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் மறைவதால் நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாகப் பழகவும். செவ்வாயும் சுக்கிரனும் 7-ல் இருப்பதால், உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்; வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மனதில் இருந்துவந்த எதிர்மறையான எண்ணங்கள் விலகும். கணவன்-மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கேது 6-ல் தொடர்வதால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். பங்குதாரர்களுடன் இருந்த கருத்து        வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். புது வாய்ப்புகள் தேடிவரும்.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் நேரம் இது.

நடுநிலை தவறாமல் பேசுபவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை



ராசிக்கு 5-ல் சூரியன் இருப்பதால், உங்கள் பிள்ளைகளின் உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்படலாம். எனினும், கவலை வேண்டாம். அவர்கள் விஷயத்தில் அனுசரித்துப் போகவும். புதன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள்.

செவ்வாய் 6-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவது மற்றும் விற்பதில் மிகுந்த கவனம் தேவை. உங்களின் வாழ்க்கைத் துணைவருக்கு வேலைச் சுமையும் அலைச்சலும் அதிகரிக்கும். ராகு பகவான் 11-ல் இருப்பதால், இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் யாவும் இனி விரைவாக முடியும். வழக்குகளில் சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்;  சமையல் அறையை நவீனப்படுத்துவீர்கள். வியாபாரத்தில், பாக்கிகளைப் போராடி வசூலிக்கவேண்டி இருக்கும். என்வே, வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது அவசியம். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

அனுசரித்துச் செல்லவேண்டிய நேரம் இது.

மற்றவர்களிடம் கனிவாகப் பேசுபவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

ராசிநாதன் செவ்வாய் 5-ல் இருப்பதால், அடிக்கடி முன்கோபம் வந்து நீங்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். ஜன்மச் சனி தொடர்வதால், பெரிய நோய்கள் இருப்பதுபோன்ற பிரமை ஏற்பட்டு நீங்கும். சூரியன் வலுவாக இருப்பதால், நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும்.

கேது 4-ல் தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்; அவரின் உடல் நலன் சற்று பாதிக்கப்படக்கூடும். சுக்கிரன் 5-ல் இருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமண முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில், பதவி மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

பிள்ளைகளால் பெருமை கூடும் நேரம் இது.

அநியாயங்களைத் தட்டிக்கேட்பவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை



சூரியனும் 16-ம் தேதி முதல் புதனும் 3-ம் வீட்டில் நிற்பதால், நீங்கள் பரபரப்பாகக் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். தடைப்பட்ட காரியங்கள் விரைவாக முடியும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

செவ்வாய் 4-ல் இருப்பதால், பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சுமுகமாக முடியும். சகோதரர்களிடையில் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். 9-ல் ராகு இருப்பதால், அடிக்கடி தோல்வி மனப்பான்மை உண்டாகும். தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.

அனுபவ அறிவு நிரம்பப்பெற்றவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

செவ்வாய் 3-ல் இருப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சொத்து ஒன்றை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, புதிதாக வீடு-மனை வாங்குவீர்கள். புது வேலை அமையும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சூரியன் 2-ல் அமர்ந் திருப்பதால் கண் எரிச்சல், பல் வலி வந்து போகும்.

லாப வீட்டில் சனி நிற்பதால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க புது வழி பிறக்கும்.  பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். பங்குதாரர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளும், சிறுசிறு அவமானங்களும் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடினமாக உழைப்பீர்கள்.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

எண்ணியவை நிறைவேறும் தருணம் இது.

மன்னிக்கும் குணம் கொண்டவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை



ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்பதால், பேச்சில் நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். ராசியிலேயே சூரியன் இருப்பதால், கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி,    சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

16-ம் தேதி முதல் புதனும் ராசிக்குள்ளேயே அமர இருப்பதால், செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு பணவரவு உண்டாகும்.  உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அந்நியோன்யம் பாதிக்காது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும் என்றாலும், சக ஊழியர்களின் ஆதரவு பெருகும்.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தருணம் இது.

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதவர்களே!

ராசிபலன் - பிப்ரவரி 14 முதல் 27 வரை

ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால், அடிக்கடி கோபம் வந்து செல்லும். குடும்பத்திலும் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகக்கூடும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். சொத்துப் பிரச்னையை சுமுகமாக பேசி முடிப்பது நல்லது. ஆனால், சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சூரியன் 12-ல் இருப்பதால், பழைய கடன்கள், வழக்குகள் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசாங்க காரியங்கள் சற்று தடைப்பட்டு முடியும். சனி 9-ல் இருப்பதால், மனப்பக்குவம் உண்டாகும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு