Published:Updated:

ராசிபலன்கள்

நவம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

 மதிப்பு, மரியாதை... ஓஹோ!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! 8-ல் மறைந்திருந்த சுக்கிரன் இப்போது 9-ல் நுழைந்திருப்பதால், இதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவர், உங்களின் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன்  கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். 25, 26 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமையுடன் பாராட்டும் உண்டு.

அநாவசியப் பேச்சு வேண்டாமே!

ராசிபலன்கள்

ரிஷபம்: விடாமுயற்சியால் முதலிடம் பிடிப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும்... ராகுவை விட்டு விலகியதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். நட்பால் ஆதாயம் உண்டு. 7-ல் ராகுவும், சூரியனும் நிற்பதால் திடீர் செலவு களால் திணறுவீர்கள். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும். 27, 28 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை ஏற்படலாம்.

ஆடை, ஆபரணம் சேரும்!

ராசிபலன்கள்

மிதுனம்: படிப்பறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே! சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இதுவரை 6-ல் அமர்ந்து கணவருக்கு அலைச்சலையும், அவருடன் உரசலையும் தந்த சுக்கிரன், இப்போது 7-ல் நுழைந்ததால், கணவர் நல்லவிதமாக நடந்து கொள்வார். ஆடை, ஆபரணம் சேரும். 29-ம் தேதி முதல் 1-ம் தேதி நண்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.

கறார் பேச்சால் காரிய வெற்றி!

ராசிபலன்கள்

கடகம்: ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர்களே! யோகாதிபதி செவ்வாய் வலுவடைந்திருப்பதால், கறாராகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால், சுக்கிரன் 6-ல் நுழைந்திருப்பதால்... உறவினர்கள் உங்களை விமர்சிப்பார்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். 1-ம் தேதி நண்பகல் 1 மணி முதல் 3-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

எதிர்பார்த்த பணம் கையில்!

ராசிபலன்கள்

சிம்மம்:  சிகரத்தைத் தொட்ட போதும் தலைக்கனம் கொள்ளாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால்,  எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்களின் ராசிநாதன் சூரியன், ராகுவுடன் நிற்பதால்... உடல் உபாதை வந்து நீங்கும். பாதச் சனி நடைபெறுவதால், யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். 4-ம் தேதி முதல் 6-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், திட்டமிட்டவை தாமதமாகவே முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனை யைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.

அயல்நாடு செல்ல வாய்ப்பு!

ராசிபலன்கள்

கன்னி: இயற்கையை அதிகம் நேசிப்பவர்களே! சூரியன் 3-ல் வலுவாக நிற்பதால், புது முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 6-ம் தேதி காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. புதன் வக்ரமாவதால், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், உறவினர் வகையில் பிரச்னை, தூக்கமின்மை ஏற்படலாம். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை விமர்சித்துப் பேச வேண்டாம்.

மூளை பலத்தால் முன்னேற்றம்!

ராசிபலன்கள்

துலாம்: பணம், காசு வந்தாலும் மனம் மாறாதவர்களே! சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த உறவினர்களை சந்திப்பீர்கள். 2-ல் சூரியன், ராகு நிற்பதால், பேச்சில் கடுமையைத் தவிர்க்கவும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

நல்லது நடக்கும் நேரம்!

ராசிபலன்கள்

விருச்சிகம்: நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால், உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். கணவரை தைரியப்படுத்துவீர்கள். பிள்ளைகள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள். ராசிக்குள் சூரியனும், ராகுவும் நிற்பதால்... டென்ஷன், உடல் உபாதை வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி விமர்சனங்கள் செய்யப்பட்டால்... அமைதி காக்கவும்.

அடடா மழைடா... பாச மழைடா

ராசிபலன்கள்

தனுசு: உண்மைக்கு முக்கியத்துவம் தருபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தாமதமான விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். சகோதரர் பாசமழை பொழிவார். சூரியன், ராகு வுடன் நிற்பதால், வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் அவசரம் வேண் டாம். வியாபாரத்தில் அதிரடியான செயல்பாட்டால் போட்டிகளைச் சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

தடைகள் தகர்ந்து போகும்!

ராசிபலன்கள்

மகரம்: மனிதநேயத்தின் மறு உருவமாக விளங்குபவர்களே! சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த அயல் நாட்டுப் பயணம் அமையும். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், வீண் கவலை வந்து விலகும். கணவருக்கு அலைச்சல், வாகனப் பழுது ஏற்படலாம். கணவர் வழி உறவினர்கள் கோபப்படுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள், வேலையாட்களால் நிம்மதி இழக்க நேரிடலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.

புதிய எண்ணங்கள் உதயம்!

ராசிபலன்கள்

கும்பம்: கடந்து வந்த பாதையை மறவாதவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய எண்ணங்கள் தோன்றும். வீடு கட்டும் பணி முழுமையடையும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ஆனால், 7-ல் செவ்வாய் நிற்பதால்... அவருக்கு உடல் உபாதை, அசதி வந்து போகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தொட்டது துலங்கும்!

ராசிபலன்கள்

மீனம்: மிதமாக யோசித்து, வேகமாக செயல்படுபவர்களே! செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணபலம் உயரும். இங்கிதமான பேச்சால் உறவினர் களைக் கவர்வீர்கள்.  புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சனி சாதகமாக இல்லாததால்...  பயம், மன இறுக்கம் வந்து செல்லும். நீண்ட நாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள்.      23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு.