தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

பணவரவு அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைமேஷம்: மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உங்களுக்கு சூரியன் லாப வீட்டில் இருப்ப தாலும் பிப்ரவரி 26-ம் தேதி முதல் செவ்வாய் வலுப்பெறுவதாலும், பணவரவு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் காலம் இது. 

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

புதிய முயற்சிகள் வெற்றி பெறும்!

ரிஷபம்:
சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் உங்களுக்கு சூரியன் 10-ல் இருப்பதால், அதிகாரத்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் உங்களுக்குத் தெரியவரும். கௌரவப் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிபெறும் வேளை இது. 

நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைமிதுனம்: மற்றவர்களுக்கு உதவும் உள்ளம்கொண்ட உங்களுக்கு குரு சாதகமாக இருப்பதால், உங்களின் நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். பிரச்னைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். புதுப் பொறுப்புகள் தேடிவரும் தருணம் இது.

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

புதிய வாகனம் வாங்குவீர்கள்!

கடகம்:
விட்டுக்கொடுக்கும் மனம்கொண்ட உங்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கி உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களிடம் கேட்கும் உதவிகள் கிடைக் கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக முடிவெடுத்து போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு!

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைசிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கும் உங்களுக்கு சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். 26-ம் தேதி முதல் செவ் வாய் வலுப்பெற்று அமர்வதால், கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

புதிய திட்டம் தீட்டுவீர்கள்!

கன்னி:
தன்னடக்கம்மிக்க உங்களுக்கு குரு 2-ல் இருப்பதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும்.
 
பிள்ளைகளின் தனித்திறமையைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் தேவையான மாற்றம் செய்வீர்கள். ஃப்ரிட்ஜ், ஏ.சி போன்ற சாதனங்களை வாங்குவீர்கள்.

அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைதுலாம்: கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நீங்கள் இதுவரை சோர்ந்து காணப்பட்டீர்கள். இனி, சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். மனதில் தைரியம் கூடும். அதிகாரிகளின் தொடர்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தூரத்து உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வீடு, மனை வாங்கும்  யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு!

விருச்சிகம்:
மற்றவர்களின் நன்மைக்காக பாடுபடும் உங்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி முதல் செவ்வாய் வலுப்பெற்று அமர்வதால், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பு மரியாதை கூடும். பாக்கி பணத்தைத் தந்து சொத்தை உங்கள் பெயருக்கு பத்திரப் பதிவு செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 

பூர்வீகச் சொத்து கைக்கு வரும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைதனுசு: பிரச்னைகளுக்கு அனுபவபூர்வமாகத் தீர்வுகாணும் உங்களுக்குச் சூரியன் வலுவாக இருப்பதாலும், 26-ம் தேதி முதல் செவ்வாய் வலுப்பெற்று அமர்வதாலும், இதுவரை இருந்த இழுபறி நிலைமை மாறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். விலகி இருந்த சகோதரர்கள் மீண்டும் வந்து உதவுவார்கள். எதிலும் வெற்றி கிடைக்கும் தருணம் இது.

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

மகரம்: சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வி.ஐ.பி-க்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். அடகில் இருந்த நகைகளை மீட்கும் அளவுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். செவ்வாய் சாதகமாக இருப்ப தால்... வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

தாய்வழி சொத்து கிடைக்கும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைகும்பம்: சுய உழைப்பால் முன்னேற விரும்பும் உங்களுக்கு குரு வலுவாக இருப்பதால், எதிர்பார்க் கும் பணம் கைக்கு வரும். பெரிய மனிதர்களின் அறிமுகமும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். வீடு வாங்க, கட்ட வங்கி கடனுதவி கிடைக்கும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.

ராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை

வீட்டு மனை வாங்குவீர்கள்!

மீனம்: பகைவர்களையும் நண்பர்களாக மாற்றிக்கொள்ளும் உங்களுக்கு ராகு வலுவாக இருப்பதால், நிர்வாகத்திறன் கூடும். கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். வழக்குகளில் வழக்கறிஞரைக் கலந்து பேசி முடிவு எடுப்பது நல்லது. சக பணியாளர்கள் உதவுவார்கள்.