Published:Updated:

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

உழைப்பால் உயரும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைஅமைதியாக இருந்து காரியம் சாதிப்பவர்களே!

லாப வீட்டில் கேது வலுவாக நிற்பதால், வசதி வாய்ப்புகள் பெருகும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். வழக்கு சாதகமாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், அனுபவ அறிவு பளிச்சிடும்.

சூரியன் 12-ல் மறைவதால், திடீர்ப் பயணங்களும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அஷ்டமத்தில் சனி நீடிப்பதாலும் குரு 6-ல் மறைந்திருப்பதாலும், யாருக்கும் அநாயாசமாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பழைய கடன்களால் மனதில் கலக்கம் உண்டாகும். சிறு சிறு மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழக்கூடும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்துபோகும். கலைத் துறையினரே! புதிய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் தருணம் இது.

காலம் நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே!


ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

புதன், சுக்கிரன், சூரியன் சாதகமாக இருப்பதால், நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். அரசு அதிகாரி களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் சாதகமாக இருக்கும்.

ஆனால், சனியால் அடிக்கடி அசதியும் சோர்வும் உண்டாகும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால், சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.  வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள், பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். அலட்சியப்படுத்தியவர்களும் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். கலைத் துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

விருப்பங்கள் நிறைவேறும் தருணம் இது.


எதிரிகளுக்கும் நன்மையே செய்பவர்களே!

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைசனியும் ராகுவும் வலுவாக இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பண வரவு கணிசமாக அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டிலோ, வெளி மாநிலத்திலோ வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகள் நெருக் கினாலும் இங்கிதமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். செவ்வாயும் சூரியனும் வலுவாக இருப்பதால், மதிப்பு கூடும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குரு 4-ல் தொடர்வதால், மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு, அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறும் நேரம் இது.


உதவும் மனப்பான்மை உடையவர்களே!


ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

செவ்வாய் வலுவாக இருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். புதுப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். சுக்கிரனும் புதனும் 9-ல் இருப்பதால், தைரியம் கூடும். பணப் பற்றாக்குறையை பக்குவமாகச் சமாளிப்பீர்கள். எதிர்பார்க்கும் நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். 

ராகுவும் கேதுவும் சரியில்லாததால், வாகன விபத்து, டென்ஷன், பண நஷ்டம் ஏற்படக்கூடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்கவும். சூரியன் 9-ல் இருப்பதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில், சக ஊழியர்களால் வீண் பிரச்னைகள் வரக்கூடும். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள்.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

பொறுமையால் சாதிக்கும் தருணம் இது. 

நேர்மறையாகச் சிந்திப்பவர்களே!

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைகுரு 2-ல் சாதகமாக இருப்பதால், மனதில் புதிய திட்டங்கள் தோன்றும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் 9-ல் வலுப்பெற்று இருப்பதால், சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்.

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனி 4-ல் தொடர்வதாலும், ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததாலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாயாருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். புது வாய்ப்புகள் தேடி வரும்.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

எதிலும் வெற்றி பெறும் காலம் இது.

துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே!


ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

சனி 3-ல் இருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழுதான வாகனத்தை சீர்செய்வீர்கள் அல்லது புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சூரியன் 7-ல் இருப்பதால், வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஜன்ம குரு தொடர்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வீண் பகை உண்டாகும். செவ்வாய் 8-ல் இருப்பதால், சகோதர வகையில் செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத் துறையினரே! புது வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பீர்கள்.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

அறிவைப் பயன்படுத்தி முன்னேறும் வேளை இது.


எதிலும் தனித்துவமாக இருப்பவர்களே!

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைராகு வலுவாக இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். சூரியன் 6-ல் இருப்பதால், தைரியம் கூடும். மன வலிமை அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கேது 5-ல் இருப்பதால், பிள்ளைகளால் பிரச்னைகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தாமதமாகும். புதனும், சுக்கிரனும் 6-ல் மறைந்திருப்பதால், வீண் பழி, டென்ஷன், அலைச்சல் வந்து போகும். ஏழரைச் சனி தொடர்வதால், யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். கலைத் துறையினரே! வதந்திகள் இருந்தாலும் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள்.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சவால்களைச் சமாளிக்கும் தருணம் இது.

எதிலும் ஒளிவு மறைவு இல்லாதவர்களே!


ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்துகொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும்.

குருபகவான் வலுவாக இருப்பதால், திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் 5-ல் இருப்பதால், அரசாங்கக் காரியங்கள் தாமதமாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், முயற்சிகள் பலிதமாகும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்துகொள்வார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் வேளை இது.


தன்னலமற்ற மனம் கொண்டவர்களே!

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைசூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணம் கூடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். குரு பலவீனமாக இருப்பதால், வேலைசுமையால் டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத் துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

தன்னம்பிக்கையுடன் சாதிக்கும் தருணம் இது.


மற்றவர்களுக்கு நன்மை செய்பவர்களே!


ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

சூரியன் ராசிக்கு 3-ல் இருப்பதால், திடீர் யோகம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலை களை சிரமப்பட்டாவது முடிப்பீர்கள். கேட்கும் இடத்தில்  பணம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால், உறவினர்கள் வலிய வந்து உதவி செய்வர். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குருபகவானும் சாதகமாக இருப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத் துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும்.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

சிரமப்பட்டு முன்னேறும் வேளை இது.

காலத்தை அனுசரித்து நடந்துகொள்பவர்களே!

ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரைபுதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளைப் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்க கடனுதவி கிடைக்கும்.

செவ்வாய் 3-ல் நிற்பதால், உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களிடையே சலசலப்பு வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அச்சம் நீங்கி அதிகாரம் பெருகும் நேரம் இது.


பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர்களே!


ராசிபலன் - மார்ச் 14 முதல் மார்ச் 27 வரை

புதன் ராசிக்குள் இருப்பதால், இதமாகப் பேசி கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணவரவு திருப்தி தரும். சூரியன் சாதகமாக இல்லாததால், மன உளைச்சல், வீண் டென்ஷன் வந்து நீங்கும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

குருவும் சனியும் சாதகமாக இருப்பதால், வருமானம் உயரும். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மை உண்டாகும். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சிலர் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் பாதியில் நிற்கும் வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்கள் சில நுணுக்கங்களைக் கற்றுத் தருவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism