Published:Updated:

பூமிக்கு மிக அருகில் செவ்வாய்... மாற்றங்கள் நிகழுமா? - ஜோதிடம் சொல்வதுஎன்ன? #Astrology

பூமிக்கு மிக அருகில் செவ்வாய்... மாற்றங்கள் நிகழுமா? - ஜோதிடம் சொல்வதுஎன்ன? #Astrology

பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதால் மாற்றங்கள் நிகழுமா இல்லையா என்பதைச் சொல்லும் கட்டுரை.

பூமிக்கு மிக அருகில் செவ்வாய்... மாற்றங்கள் நிகழுமா? - ஜோதிடம் சொல்வதுஎன்ன? #Astrology

பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதால் மாற்றங்கள் நிகழுமா இல்லையா என்பதைச் சொல்லும் கட்டுரை.

Published:Updated:
பூமிக்கு மிக அருகில் செவ்வாய்... மாற்றங்கள் நிகழுமா? - ஜோதிடம் சொல்வதுஎன்ன? #Astrology

ண்டுக்கு இருமுறை நிலவு பூமிக்கு அருகில் நெருங்கி வரும். மிகப் பிரகாசமாக, பிரமாண்ட வடிவில் காட்சியளிக்கும். இதை `சூப்பர் மூன்' என்கிறார்கள். அதேபோல் இப்போது செவ்வாய் கிரகம் பூமிக்கு வெகு அருகில் வந்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு வரும் செவ்வாய் கிரகம் 2003-ம் ஆண்டு பூமிக்கு அருகில் வந்தபோது, கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்து வியப்பை அளித்தது. 

செவ்வாய் கிரகம் சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும் நிகழ்வை வானியல் அறிஞர்கள் `பெரிஹெலிக் அப்போசிஷன்' (Perihelic Opposition) என்கிறார்கள். இந்த நிகழ்வு, வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி மிகத் துல்லியமாக நிகழவிருக்கிறது. மேலும், இந்த ஜூலை மாதம் முழுவதும் செவ்வாய் கிரகம் பிரகாசமாகவும் பெரிதாகவும் காணப்படும். அப்போது செவ்வாய் `வழக்கத்தைவிட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும்’ என்கிறார்கள். ஆகாயத்தில் தென்கிழக்கு திசையில் தெளிவாக இருக்கும் சூழலில் `சாஜிட்டேரியஸ்' (Sagittarius) என்ற நட்சத்திரக் கூட்டத்துக்குக் கீழே செவ்வாய் காட்சி தரும். இதை எல்லோரும் வெறும் கண்களால் பார்க்க முடியும். அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய வட கோளப் பகுதியில் வசிப்பவர்கள் செவ்வாயைக் காண வாய்ப்பில்லை. 

அதே நேரத்தில், தென் அரைக்கோளத்தில் வசிப்பவர்கள் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். ஐரோப்பா, ஆசியா, தெற்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் செவ்வாயைத் தெளிவாகக் காணலாம். சூரியக் குடும்பத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தக் கோள், ஜாதகரீதியாகப் பெரும் பலம் வாய்ந்த கிரகம். துணிவுக்குப் பெயர் பெற்ற இந்த செவ்வாய், பூமியை நெருங்குவதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்... இது நல்லதா, கெட்டதா? என்ற ஐயங்கள் பலருக்கும் ஏற்பட்டிருப்பதுடன், அச்சமூட்டும் தகவல்களும் பரவி வருகின்றன. இது குறித்து, `ஜோதிடத் திலகம்’ முத்து குருக்களிடம் கேட்டோம்.

``ஸ்ரீவிளம்பி வருடம், ஆடி மாதம், கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். ஜூலை 27 பௌர்ணமியன்று, சந்திர கிரகணமும் சேர்ந்துவருகிறது. செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள் சஞ்சரிப்பார். சந்திரனும் செவ்வாயும் கூடும் இந்த நாளில் (27-7-18) சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் சகலருக்கும் நன்மையே உண்டாகும். செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. செவ்வாய் பூமியை நெருங்கி வரும் இந்த நிகழ்வால் இயற்கையில் பெரும் மாறுதல் உருவாகும். `மங்களகாரகன்’, `பூமிகாரகன்’ என்று போற்றப்படும் செவ்வாய் பகவானால் நன்மையே நடைபெறும் என்பதால் கவலைப்பட வேண்டாம். எனினும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம், பூராடம், திருவோணம், ரோஹிணி, அஸ்தம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருள் பெறுவது நல்லது. முக்கியமாக திருவோண நட்சத்திரக்காரர்கள் `கிரகண சாந்தி' செய்து கொள்வது நலம். கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் இந்த நாளில் (ஜூலை 27) வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான முருகப்பெருமானை வணங்கி பூஜித்தால், எந்த தோஷங்களும் இன்றி சுக வாழ்வைப் பெறலாம். அன்றைய தினம் வாஸ்து நாளாகவும் வருவதால் முருகப்பெருமானோடு, பூமாதேவியையும் வழிபட்டால் நன்மைகள் பெருகும். 

`தரணீ கர்ப்ப சம்பூத:' - என்ற வாக்கின்படி பூதேவியின் திருமகனாக அவதரித்தவர் செவ்வாய் என்பதால், அவரால் பூமிக்கு எந்தக் கெடுதலும் உருவாக வாய்ப்பில்லை. ரத்த அழுத்தம், மன அழுத்தம், கடுமையான உஷ்ணம், கோபம் போன்றவற்றிலிருந்து நம்மை விடுவிப்பவர் செவ்வாய் பகவான். எனவே, பூமியை நெருங்கி வரும் இந்த நேரத்தில் செவ்வாய் பகவானை வணங்கி நன்மைகளைப் பெற வேண்டும். மற்றபடி வதந்திகளை நம்ப வேண்டாம். பகவான் துணையிருக்க மற்றவற்றுக்குப் பயப்படத் தேவையில்லை" என்றார்.  
`செவ்வாய் வருவாய்!' என்பது ஆன்றோர் வாக்கு. நன்மையே அருளும் மங்களகாரகன் செவ்வாயை வழிபட்டு எந்நாளும் நலமே அடைவோம். வீண் அச்சங்களைத் தவிர்ப்போம்.