தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

முன்னேறும் நேரம்!

மேஷம்: அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் உங்களுக்கு கேது லாப வீட்டில் இருப்ப தால், எதிர்பார்ப்புகள்

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

நிறைவேறும். ஓரளவு பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். சூரியனும் சுக்கிரனும் 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோ கத்தில் சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள்.

எதிர்பாராத பணவரவு!

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

ரிஷபம்: எதையும் திட்டமிட்டுச் செய்யும் உங்களுக்கு லாப வீட்டில் சூரியனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள்.  குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை கூடும்.

இல்லறம் இனிக்கும்!

மிதுனம்:
நெருக்கடியிலும் நேர்மை தவறாத உங்களுக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால்,

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

நினைத்ததை முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.  அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் விரைவில் சாதகமாக முடியும். மார்ச் 30-ம் தேதி முதல் புதன் வக்கிரமாவதால், சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

புத்திசாலித்தனம் வெளிப்படும்!


ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

கடகம்: கலையுணர்வு கொண்ட உங்களுக் குச் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பழைய இடத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். தாமதமான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியனால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். ராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இல்லாததால், யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான மதிப்பு குறையக்கூடும்.

உறவினர்களால் ஆதாயம்!

சிம்மம்:
`எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்று நினைக்கும் உங்களுக்கு சுக்கிரன் சாதகமாக

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

இருப்பதால், உற்சாக மாகப் பல வேலைகளை முன்னெடுத்துச் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.  அர்த்தாஷ்டமச் சனியால், பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் துரத்தும். 8-ல் சூரியன் மறைந்திருப்பதால், காரிய தாமதம், முன்கோபம் வந்து செல்லும். செவ்வாய் 9-ல் நிற்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

எதிலும் வெற்றி!

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

கன்னி: பகைவர்களுக்கும் உதவும் மனம்கொண்ட உங்களுக்கு சனியும் கேதுவும் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். திருமண முயற்சிகள் சாதகமாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சூரியன் 7-லும் செவ்வாய் 8-லும் இருப்பதால், உடல் உஷ்ணத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சகோதரர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். ஜென்ம குரு தொடர்வதால், பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கண்டிப்பாகப் பேசி, பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பற்றி வெளியில் பேச வேண்டாம்.

கோரிக்கை நிறைவேறும்!


துலாம்:
எவரிடமும் பாரபட்சம் பார்க்காத உங்களுக்கு ராகு வலுவாக இருப்பதால், மனவலிமை கூடும்.

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புது வேலை கிடைக்கும். சுக்கிரனும், மார்ச் 29-ம் தேதி வரை புதனும் 6-ல் மறைந்திருப்பதால், கணவன் - மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை உயர் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.

மரியாதை கூடும்!

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

விருச்சிகம்: எப்போதும் சமாதானத் தையே விரும்பும் உங்களுக்கு குரு பகவான் சாதகமாக இருப்பதால்,  தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் உதவி யால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகளுடன் வாக்குவாதம், மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து எதிர்பார்க்கும் லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

திட்டம் தீட்டும் நேரம்!

தனுசு: எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உங்களுக்கு சூரியனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில்

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

செல்வதால், மனதில் புதிய திட்டங்கள் உதயமாகும். புது வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். ராசிநாதன் குரு சாதகமாக இல்லாததால், பணிச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் சவால்களைச் சமாளிக்கவேண்டி வரும்.

திடீர் யோகம் உண்டாகும்!

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

மகரம்: மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத உங்களுக்கு சூரியனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், திடீர் யோகம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். புது சொத்து வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வருவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

சொத்து வாங்குவீர்கள்!

கும்பம்:
மற்றவர்களுக்கு உதவும் மனம்கொண்ட உங்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால், விலை

ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சோர்வு  நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சிறப்பாக அமையும். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சூரியன் 2-ல் இருப்பதால் உடல் உபாதை, பேச்சால் பிரச்னை வரக்கூடும். குரு 8-ல் தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.

தடைகள் நீங்கும்!


ராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை

மீனம்: கற்பனை ஆற்றல்மிக்க உங் களுக்கு குரு வலுவாக இருப்பதால்,  தடைப்பட்ட காரியங்கள் விரைவில்  நல்லபடியாக  முடியும். வீட்டை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். கோயில் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால், முன்கோபம், அலைச்சல், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். அரசுக் காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.