Published:Updated:

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

Published:Updated:
இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

துர்முகி வருடம் நிறைவடைந்து, புதிய தமிழ் வருடமான ஹேவிளம்பி வருடம் பிறக்கிறது. 13/14.4.17 - வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த வியாழனன்று நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை) 12 மணி 43 நிமிடத்துக்கு, கிருஷ்ண பட்சம் திருதியை திதி, விசாக நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகம், பத்தரை நாமகரணத்தில், புதன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த... பஞ்சபட்சிகளில் காகம் வலுவிழந்த காலத்தில், குரு மகா தசையில், சுக்கிர புத்தி - சுக்ரன் அந்தரத்தில், சுப மங்களகரமான ஹேவிளம்பி வருடம் பிறக்கிறது. 

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

ஹேவிளம்பி வருட வெண்பா

ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்

பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்

ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்

வேகுமே மேதினி தீ மேல்


டைக்காடர் சித்தர் பெருமான் அருளிய இந்தப் பாடலின்படி, இந்த வருடத்தில் மழை குறையும். விலைவாசி குறையும். அதேநேரம், உணவு உற்பத்தியாகிய விளைச்சலும் குறையும். விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் அதிகமாகும். நாடாளுபவர்கள் மனதில் போர்க்குணம் அதிகமாகும். போர் மூளும். உலகெங்கும் தீ விபத்துகளும் அதிகமாகும்.

சித்தர் பெருமானின் பாடலுடன் இந்த வருடப் பிறப்பின் நட்சத்திர கிரக நிலைகளை ஆராய்ந்துப் பார்க்கும்போது, ஐப்பசி மாதம் வரை சுக்ரன் கிழக்கு திசையில் நிற்பதால், போதிய மழை பொழியும்; விளைச்சல் அதிகமாகும். ஹேவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் வருவதாலும், அவர் வருடப்பிறப்பு ஜாதக லக்னத்துக்கு 5-ல் நிற்பதாலும், சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் மறைவதாலும், நாட்டை ஆளும் மந்திரிகள் நிம்மதி இழப்பார்கள். கறுப்புப் பணம் புதிய வழிகளில் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தீர்க்கவும், ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளைக் காக்கவும் புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும். குதிரைகளை வினோத நோய்கள் தாக்கும். மந்திரியாக சுக்ரன் வருவதாலும், அவர் உச்சம்பெற்று வலுவடைவதாலும், வீட்டாதிபதி குருவின் சமசப்தம பார்வையைப் பெறுவதாலும் தலைமைப் பொறுப்புக்கு அடுத்துள்ளவர்கள் வலுவடைவார்கள். யானைகளைக் காப்பாற்ற அரசு அதிக அக்கறை காட்டும். தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் திகழும். வைரம், வைடூரியம், மரகதப் பச்சை ஆகியவற்றின் விலை உயரும். துணி உற்பத்தி அதிகரிக்கும். வாகனங்கள் மற்றும் ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்அர்க்காதிபதியாக குருபகவான் வருவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையும். பித்தளை, செம்பு, ஈயம், இயந்திர உதிரி பாகங்களின் விலை குறையும். ஸஸ்யாதிபதியாக சூரியன் வருவதால், உலகின் தட்பவெப்பநிலை மாறுபடும். சாலை விபத்துகள் அதிகரிக்கும்.

தான்யாதிபதியாக சனி வருவதால் எண்ணெய் வித்துக்களின் விலை குறையும். எள், உளுந்து ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கும்.  புதிய நிலக்கரி படிவங்கள், எரிபொருள்கள் கண்டறியப் படும். சேனாதிபதியாக குரு வருவதால் ராணுவத் தளவாடங்கள் நவீனமாகும். புதிய அணு உலைகள் அமைக்கப்படும். எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிக்கும். திடீர் தாக்குதல்களும் நிகழும். காவல் மற்றும் ராணுவத் துறைகளில் பணியாற்று பவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். ரஸாதிபதியாக செவ்வாய் வருவதால், சர்க்கரை, வெல்லம் போன்றவற்றின் விலை குறையும். இந்தியப் பொருளாதாரம் வலுவடையும். திடீர் தேர்தலைச் சந்திக்க நேரிடும். வங்கிகளின் வாராக் கடன்கள் வசூலாகும்.

9.3.18 முதல் 26.5.18 வரை, சனியும், செவ்வாயும் சமசப்தமமாக பார்ப்பதால், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

புதனும், குருவும் பரிவர்த்தனை அடைந்தி ருப்பதால், படிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறைய சலுகைகளை அறிவிக்கும். பொறியியல், மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளின் நுழைவுத் தேர்வுகளுக்கான விதிமுறைகள் கடுமையாகவே இருக்கும். தனியார் கல்வித் துறை நிறுவனங்கள் பாதிப்படையும்.

இந்த வருடம் இப்படித்தான்! - `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டுப் பொதுப்பலன்கள்

சுக்கிரன் உச்சமாகி நிற்பதாலும், புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதாலும் கணினித் துறை சார்ந்து வெளிநாட்டில் வேலை தேடுவதைக் காட்டிலும் உள்நாட்டில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கேற்ப இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வங்கிகள்,  மருத்துவம், விளம்பரம் ஆகிய துறைகள் தொடர்பான படிப்புகளுக்கு மதிப்பு கூடும்.

இந்த வருடம் மகர லக்னத்தில் பிறப்பதால், மத்திய அரசின் கை ஓங்கும். பல புதிய திட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்படும். கறுப்புப் பணத்தைத் தடுக்கக் கடுமையான சட்டம் வரும். சனியும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாடெங்கும் இனக் கலவரம் அதிகரிக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் அந்நிய நிதி கட்டுப்படுத் தப்படும். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையும். பஞ்சாப் மாநிலத்தில் மோதல்கள் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு, சுக்கிரனின் ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறப்பதால், பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கும் வலிமை சேர்ப்பதாக இருக்கும்.செல்வந்தர்களுக்குச் சொத்துச் சிக்கல்கள் ஏற்படும். இளைய தலைமுறையினருக்கு தொழில் தொடங்குவதில் ஈடுபாடு அதிகரிக்கும். மேகாதிபதியாக குரு வருவதால் இந்த ஆண்டு மழை உண்டு. விவசாயம் செழிக்கும். அதிகாலை நேரத்திலும், அஸ்தமன நேரத்திலும் மழைப் பொழிவு அதிகமாகும். வேர்க்கடலை, கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் உற்பத்தி பெருகும்.

மொத்தத்தில் இந்த ஹேவிளம்பி வருடம், மக்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை விதைப்பதாகவும், குலத்தொழிலில் ஆர்வம் அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: சுக்கிரனின் துலாம் ராசியிலும் சனி பகவானின் மகர லக்னத்திலும், புதனும், சுக்கிரனும் வலுவடைந்திருக்கும் நேரத்திலும், போர்க் கிரகமான செவ்வாய், சனியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்திலும் ஹேவிளம்பி பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் சகல நலன்களும் கைகூட, சனிக்கிழமைதோறும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரைத் தரிசித்து வழிபட்டால்,  தொட்டதெல்லாம் துலங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism