Published:Updated:

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

திட்டமிட்டு சாதிக்கவேண்டிய நேரம் இது.

புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைசெவ்வாய் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் நல்லபடியாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. ஆனால், சூரியனும் 12-ல் இருப்பதால், பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களால் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில், சக ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டாம். அவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கலைத் துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுதப் போராடவேண்டி இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

மாறுபட்ட சிந்தனை தேவைப்படும் தருணம் இது.

கொள்கைப்பிடிப்புடன் வாழ்பவர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

சூரியனும் புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

பூர்வீகச் சொத்தில், நீங்கள் விரும்பியபடி சீர்திருத்தம் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சர்ப்பக் கிரகங்களும் சனியும் சாதகமாக இல்லாததால், வீண் சந்தேகம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களது செல்வாக்கு உயரும். மூத்த அதிகாரிகள் உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினரே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

பிரபலங்களால் பாராட்டப்படும் தருணம் இது.

ஒளிவுமறைவு இல்லாத அன்பர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைசெவ்வாய் வலுவாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்திய மாகப் பேசி முடிப்பீர்கள். எதிர்பார்த்தப் பணம் கைக்கு வரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புது வேலை கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வீடு, மனை விற்பது வாங்குவது லாபகரமாக இருக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

சூரியனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், புகழ், கௌரவம் உயரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், குரு 4-ல் தொடர்வதால், வேலைச் சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் மனவருத்தம் உண்டாகும்.  வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். சக பணியாளர்கள் உங்களை ஆதரிப்பார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் உதவி கிடைக்கும்.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

உழைப்பால் முன்னேறும் காலம் இது.     

தன்னம்பிக்கை மிகுந்தவர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர் உடல்நலம் சீராகும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். செவ்வாய் 10-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சூரியன் 9-ல் இருப்பதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். வரவுக்கும் அதிகமாக செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாட்களால் பிரச்னை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் அளவாகப் பழகவும். கலைத் துறையினரே! வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள்.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரம் இது. 


தர்மத்தைப் பெரிதும் போற்றுபவர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைகுரு 2-ல் தொடர்வதால், உங்களின் நீண்டகால திட்டங்கள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் பிடிவாதம் மாறும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் 9-ல் இருப்பதால், உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததால், பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சனி 4-ல் இருப்பதால், சின்னச் சின்ன இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படும். அவ்வப்போது தர்மசங்கடமான நிலைமையைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். கலைத் துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

வேலைச்சுமை அதிகரிக்கும் தருணம் இது.


அன்பால் சாதிக்கும் அன்பர்களே!

சனியும் கேதுவும் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தடைப்பட்ட திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்களால் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.

ராசிநாதன் புதன் 7-ம் தேதி முதல் வக்கிரமாகி 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். செவ்வாய் 8-ல் நீடிப்பதால் பணப் பற்றாக்குறை, சொத்துப் பிரச்னை, மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து செல்லும். ஜன்ம குரு தொடர்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். பங்குதாரர் களுடனான மோதல்கள் விலகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துப் போகவும். கலைத் துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப்போகும்.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

கோபத்தை அடக்கி மகிழ்ச்சி பெறும் காலம் இது.

ரசிப்புத்தன்மை அதிகம் கொண்டவர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைசூரியன் 6-ல் வலுவாக இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.  வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், வீண் செலவு, ஏமாற்றம், சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. சப்தமாதிபதி செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று இருப்பதால், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் சாதகமாகும். சகோதரிக்குத் திருமணம் கூடிவரும். எனினும், ஏழரைச் சனி நடப்பதால், வீண் கவலை, விரக்தி வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத் துறையினரே! மறைமுகப் போட்டிகள் இருக்கும்.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சமயோசித அறிவால் சாதிக்கும் தருணம் இது.

எப்போதும் நியாயத்துக்குக் கட்டுப்படுபவர்களே!


ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

ராசிநாதன் செவ்வாய் 6-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதரர்களிடம் ஒற்றுமை வலுப்படும்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால், திருமண விஷயங்கள் சாதகமாக முடியும். சூரியன் 5-ல் இருப்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். சர்ப்பக் கிரகங்கள் சாதகமாக இல்லாததால், சந்தேகத்தால் நல்லவர்களது நட்பை இழக்க நேரிடும். குரு வலுவாக இருப்பதால், பழைய கடன் பிரச்னை தீரும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். ஏற்றுமதி - இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதுப் பொறுப்புகள் தேடி வரும். கலைத் துறையினரே! உங்களது படைப்புகளுக்கு மரியாதை கூடும்.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைமுற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரம் இது.


நேசமும் பாசமும் மிகுந்த பண்பாளர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், தைரியம் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். எதிர்காலத்துக்கான முக்கிய திட்டங் களைத் தீட்டுவீர்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்.

செவ்வாய் 5-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், மதிப்பு மரியாதை கூடும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். சூரியன் 4-ல் இருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். தந்தையின் உடல்நலம் சீராகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கடன் பிரச்னை தீரும். குரு 10-ல் நீடிப்பதால், மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கடையை ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். கலைத் துறையினரே! வெளிநாட்டில் உள்ள புது நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

நீண்டகால விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது.


புதிய முயற்சிகளால் சாதிக்கும் அன்பர்களே!

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

சூரியனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பெரிய பதவியில் இருப்பவர் களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்குக் கூடும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள், உங்களின் அன்பைப் புரிந்துகொள்வார்கள். தாயாருடன் இருந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். குரு வலுவாக இருப்பதால், ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராக இருந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரைதடைகளைத் தகர்க்கும் காலம் இது.


அறிவுக்கூர்மையும் பொறுமையும் உள்ளவர்களே!

செவ்வாய் 3-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், திடீர் யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு தளரும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

புதன் சாதகமாக இருப்பதால், நயமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ஆனால், சூரியன் 2-ல் தொடர்வதால், சில நேரங்களில் கண் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால், வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். கலைத் துறையினரே! வசதி வாய்ப்புகள் அதிகரித்தாலும் வீண் வதந்திகளும் வரக்கூடும்.

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

வெற்றிக் கனியைப் பறிக்கும் தருணம் இது.


மற்றவர்களின் வெற்றிக்காகவும் பாடுபடுபவர்களே!


ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால், லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ராசிக்குள்ளேயே சூரியன் இருப்பதால், முன்கோபம், வீண் வாக்குவாதம், சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.

செவ்வாய் 2-ல் தொடர்வதால், சகோதர வகையில் உதவிகள் உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். ராகு வலுவாக இருப்பதால், வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கேது 12-ல் மறைந்திருப்பதால், அவ்வப்போது மனவருத்தம் உண்டாகும். வியாபாரத்தில் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். புது பங்குதாரர்கள் அறிமுகம் ஆவார்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! உங்களின் புகழும், கௌரவமும் உயரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism