Published:Updated:

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)
பிரீமியம் ஸ்டோரி
‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

Published:Updated:
‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)
பிரீமியம் ஸ்டோரி
‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)
‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

சந்தோஷம் பெருகட்டும்!

ப்ரல் - 14 அன்று ‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த வருடம் முதல், நமது சங்கடங்கள் அனைத்தும் அகன்று வாழ்வில் சந்தோஷம் பெருகிட, ஆனைமுகனை வழிபட்டு வரம் பெறுவோம். மேலும், ஹேவிளம்பி வருடத்தின் ராஜாதிபதி செவ்வாய். ஆகவே, இவ்வருடத்தில் அங்காரக சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடுவதால், செவ்வாய் தோஷ குறைபாடுகள் நீங்கும். வாழ்வு செம்மையாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

பிள்ளையார் துதி

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்
பான்மைமிகு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவி அஞ்சலிசெய் கிற்பாம்


- சேக்கிழார்ப் புராணம்

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



சுக்கிரன் ராசிக்கு 12-ல் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தேவையான வங்கிக் கடனும் கிடைக்கும். குருபகவான் 1.9.17 வரை 6-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகளும் கடன் பிரச்னைகளும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைபட்டே முடியும்.

ஆனால், 2.9.17 முதல் 13.2.18 வரை குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். 14.2.18 முதல் 13.4.18 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்வதால், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். 26.7.17 வரை உங்களுடைய ராசிக்கு 11-ல் கேது இருப்பதால், பிரபலங்களின் உதவியால் முன்னேற்றம் காண்பீர்கள். கணிசமான பணவரவு உண்டு.

26.7.17 வரை ராகு 5-வது வீட்டிலேயே அமர்ந்திருப்ப தால், பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங் களும் இருந்துகொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் அவசரம் வேண்டாம். 27.7.17 முதல் ராகு 4-ல் தொடர்வதால், தாயாரின் உடல்நலன் பாதிக்கப் படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், பிரச்னைகளும் வரும். 27.7.17 முதல் வருடம் முடியும் வரை கேது 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும்.

18.12.17 வரை சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது மனச்சலனமும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் - வாங்கலில் எச்சரிக்கை தேவை. 19.12.17 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 9-வது வீட்டில் வந்து அமர்வதால், காரியத் தடைகள் விலகும். மனக் கவலைகள் நீங்கும். எனினும், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

14.4.17 முதல் 26.5.17 வரை சனியும், செவ்வாயும் நேருக்கு நேர் பார்வையிடுவதாலும், 12.7.17 முதல் 30.8.17 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி இருப்பதாலும், 20.1.18 முதல் 10.3.18 வரை செவ்வாய் எட்டில் மறைவதாலும், 11.3.18 முதல் 13.4.18 வரை சனியும், செவ்வாயும் ஒன்று சேருவதாலும்  இந்தக் காலக் கட்டத்தில் வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை தேவை.சகோதரர்களுடன் மோதல்கள் எழலாம்.சிலருக்கு சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அனுமனை வழிபடுவது நல்லது.

10.10.17 முதல் 5.11.17 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6-வது வீட்டில் சென்று மறைவதால், கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வந்து போகும். 17.11.17 முதல் 15.12.17 வரை சூரியனும் சனியும் 8-ல் சேர்ந்திருப் பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளிலும், பிள்ளைகளின் திருமண விஷயத்திலும் பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் 2.9.17 முதல் குரு பகவான் 7-ல் அமர்வதால், புதிய முதலீடுகள் செய்வீர்கள். பங்குதாரர் களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பெரிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உணவு, கெமிக்கல், வாகனம், கன்ஸ்ட்ரக்‌ஷன் வகைகளில் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் பதவி, சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கும் முயற்சி செய்யலாம்.

மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் முதல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். கலைத் துறையினருக்குத் தடைப்பட்டிருந்த வேலைகள் செப்டம்பர் முதல் விரைந்து முடியும். வேற்றுமொழிப் பட வாய்ப்பு களால் புகழ் பெறுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி பணவரவைத் தருவதாகவும், இறுதிப்பகுதி சுபச் செலவுகளை ஏற்படுத்துவதாகவும்  அமையும்.

பரிகாரம்


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டு வாருங்கள்.  நீங்கள் தொட்டது துலங்கும்.

ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களே!


‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-வது வீட்டிலேயே தொடர்வதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளைகளுடைய உயர்கல்வி அல்லது உத்தியோகம் குறித்த முயற்சிகள் வெற்றியடையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆனால், 2.9.17 முதல் குரு 6-ல் மறைவதால், சேமிப்புகள் குறைந்து கடன்சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

14.2.18 முதல் 13.4.18 வரை குரு அதிசாரத்திலும் வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பும், பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வும் கிடைக்கும்.

18.12.17 வரை சனி 7-வது வீட்டில் இருப்பதால், வாழ்க்கைத்துணைக்குச் சிறிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். மேலும் 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். வழக்குகளில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி தீர்க்கவும்.

26.7.17 வரை ராகு 4-ல் இருப்பதால், தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். தாய்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 27.7.17 முதல் ராகு உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். 26.7.17 வரை கேது 10-ல் தொடர்வதால், வேலைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தேவையில்லாத இடமாற்றம் ஏற்படக் கூடும். 27.7.17 முதல் கேது 9-ல் சென்று அமர்வதால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும்.

11.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை அவசியம். சகோதரர் களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். பணம் கொடுக்கல் - வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் புதன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பிள்ளைகள் சாதிப்பார்கள்.

வியாபாரத்தில் ஆகஸ்ட் மாதம் வரை லாபம் அதிகரிக்கும். ஆனால், சனி 7-லும் தொடர்ந்து 8-லும் தொடர இருப்பதால், வியாபார ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளா தீர்கள். பங்குதாரர்களுடன் மனத் தாங்கல் ஏற்படக் கூடும். ஒரு சிலருக்கு தனியாக வியாபாரம் செய்யவேண்டிய நிலையும் உண்டாகும். உங்களுக்கு அனுபவம் இல்லாத துறைகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் 6 முதல் குரு 6-ல் மறைவதால், எதிலும் எச்சரிக்கை தேவை. வாகனம், போர்டிங், லாட்ஜிங், கமிஷன் வகை களால் லாபம் அதிகரிக்கும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை சலுகைகள் கிடைக்கக்கூடும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செப்டம்பர் முதல் பிப்ரவரி முற்பகுதி வரை வேலைச் சுமையும் அலைச்சலும் இருக்கும். பிப்ரவரி மாதக் கடைசி முதல் ஏப்ரல் வரை பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடர்வதால், வேலை அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்று நம்பி எவரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.

சனி பகவான் 7-ல் இருப்பதால், மாணவ - மாணவிகள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வும். நல்ல வாய்ப்புகள் வரும். பாதியில் நின்றிருந்த பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தியாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செலவுகளைத் தருவதாக இருந்தாலும், வருடத்தின் இறுதிப்பகுதி மகிழ்ச்சி தருவதாக அமையும்.

பரிகாரம்

தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதீர்த்த கிரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

நேருக்குநேராகப் பேசுபவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எனினும், செவ்வாய் 12-ல் இருப்ப தால், சகோதரர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம்.வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் செலவுகள் அதிகரிக்கும். ஆவணி முதல் மகிழ்ச்சி உண்டாகும்.

1.9.17 வரை குரு 4-ல் இருப்பதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் உண்டு. தாயாரின் உடல்நலன் பாதிக்கும். 2.9.17 முதல் குரு 5-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். ஆனால், 14.2.18 முதல் 13.4.18 வரை குரு வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் 6-ல் சென்று மறைவதால், பணத் தட்டுப்பாடும் சிறுசிறு கடன் பிரச்னைகளும் வந்து நீங்கும்.

18.12.17 வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஆனால், 19.12.17 முதல் சனிபகவான் 7-ல்அமர்வதால், கணவன் - மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.

26.7.17 வரை ராகு 3-ல் தொடர்வதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், கேது 9-ல் இருப்பதால், தந்தை வழி உறவினரோடு சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். 27.7.17 முதல் ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், கணவன் - மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.மற்றவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

15.10.17 முதல் 2.12.17 வரை செவ்வாய் 4-ல் அமர்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 10.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாயும் சனியும் 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் செப்டம்பர் முதல் பற்று, வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். ஆனால், 19.12.17 முதல் சனி பகவான் 7-ல் மறைவதால், பங்குதாரர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபட வேண்டாம். பெரிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வியாபாரம் நன்றாக நடக்கும். உணவு, துணி, ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செப்டம்பர் முதல் குரு பகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

மாணவ-மாணவிகள் திறமை களை வளர்த்துக்கொள்வார்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப் பிரிவுகளில்- விரும்பும் பள்ளி, கல்லூரி களில் சேரும் வாய்ப்பு உண்டு. உங்களால் பெற்றோருக்கு புகழும் கௌரவமும் கூடும். 

கலைத் துறையினரே! உங்களுடைய யதார்த்தமான படைப்பு கள் அனைவராலும் பாராட்டப்படும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. சம்பள பாக்கி கைக்கு வரும். புகழ்பெற்ற கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும்.  
   
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முற்பகுதி செலவுகளையும், ஆரோக் கியக் குறைவுகளையும் தருவதாக அமைந்தாலும், வருடத்தின் மையப் பகுதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சியை யும் பணவரவையும் உண்டாக்கும்.

பரிகாரம்

கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகைக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு  பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும்.

செவ்வாய் 11-ல் அமர்ந்திருப்பதால், பெற்றோருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு, நல்ல வேலை கிடைக்கும். ராசிக்கு 9-ல் சுக்கிரனும் புதனும் அமர்ந்திருப்பதால், வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். 

1.9.17 வரை குரு 3-ல் தொடர்வதால், பணத்தட்டுப் பாடும் தவிர்க்கமுடியாத செலவுகளும் இருக்கும். சின்னச் சின்ன வேலைகளும் தடைப்பட்டு முடியும். 2.9.17 முதல் குரு பகவான் 4-ல் அமர்வதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் ஏற்படும். தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 14.2.18 முதல் 13.4.18 வரை குருபகவான் வக்கிரத்திலும் அதிசாரத்திலும் 5-ல் அமர்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் திருமணம் கூடிவரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள்.

18.12.17 வரை சனி பகவான் 5-ல் இருப்பதால், உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால், அவர்களை அனுசரித்துச் செல்லவும். எந்த விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். 19.12.17 முதல் சனி 6-ல் அமர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். வழக்கு சாதகமாகும். வருமானம் உயரும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்ப தால், பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் செய்து முடிப்பது நல்லது. கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

27.7.17 முதல் ராகு 1-லும் கேது 7-லும் தொடர்வதால், உணவு விஷயத் தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணைவர் உங்களது குறைகளைச் சுட்டிக்காட்டினால், பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

26.5.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 12-ல் மறைவதால், சிறு சிறு விபத்துகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். சகோதர - சகோதரிகளுடன் மனவருத்தம் உண்டாகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 22.12.17 முதல் 14.1.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சலசலப்புகள் எழும்; வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் தொடர்பால் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும்.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வருவார்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனி, மாசி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. உங்களை தரக் குறைவாக நடத்திய அதிகாரியின் மனம் மாறும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். கணினி துறையைச் சேர்ந்தவர் களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யுங்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் கடந்து முன்னேறுவார்கள். உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு. திரைக்கு வரமுடியாமல் இருந்த உங்களின் படைப்புகள் வெளியாகி வெற்றி பெறும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கை யாலும் உங்களைச் சாதிக்கவைப்பதாக  அமையும்.

பரிகாரம்


அறந்தாங்கிக்கு அருகிலுள்ளது துரையரசபுரம். இங்குள்ள ஸ்ரீகாதமறவர் காளியம்மன் ஆலயத்துக்கு, வெள்ளிக் கிழமைகளில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். மகிழ்ச்சி கூடும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்,)

பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், முடியாத காரியத்தையும் முடித்துக்காட்டுவீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். செவ்வாய் 10-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக  சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும்.

18.12.17 வரை சனி பகவான் அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகும். வீண் பழிகள் ஏற்படக்கூடும். 19.12.17 முதல் சனி 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் வருங்காலம் கவலை தரக்கூடும். மகளின் திருமணத்துக் காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பாகப்பிரிவினை விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

12.7.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 12-ல் மறைவதால், பணத் தட்டுப்பாடு, சகோதர சகோதரி களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். 14.1.18 முதல் 7.2.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஈகோ பிரச்னையால் கணவன் - மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படும் என்பதால், பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியம்  பாதிக்கப்படக்கூடும்.

குரு 1.9.17 வரை 2-ல் தொடர்வதால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை திருப்பித் தருவீர்கள். ஆனால், 2.9.17 முதல் குருபகவான் 3-ல் அமர இருப்பதால், காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்க வேண்டி இருக்கும். இளைய சகோதரர் உதவி யாக இருப்பார். எனினும், பணத் தட்டுப் பாடு அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாய்வழியில் கிடைக்கவேண்டிய சொத்துகளைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம்.

26.7.17 வரை 1-ல் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், முன்கோபம், மன சஞ்சலம் ஏற்படக்கூடும்.வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 27.7.17 முதல் 12-ல் ராகு அமர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து செல்லும். மன அமைதி இல்லாமல் தவிப்பீர்கள். தன்னம்பிக்கை குறையக்கூடும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால், 27.7.17 முதல் கேது 6-ல் அமர்வதால், வி.ஐ.பிக்களால் நன்மை உண்டாகும். உங்களை ஏமாற்றியவர் களைப் புரிந்துகொள்வீர்கள். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாபாரத்தில் குறைவான லாபம் வைத்து அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். புரட்டாசி மாதத்தில் இருந்து வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலா கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நபர் புது பங்குதாரராக இணைய வாய்ப்பு இருக்கிறது. கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக இருக்கும். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில், புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவர். சில கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். சக பணியாளர்களது ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவ - மாணவிகள், நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார் கள். ஆசிரியர்களது பாராட்டுகளைப் பெறுவார்கள். பெற்றோர் மூலம் தேவைகள் நிறைவேறும். இலக்கியப் போட்டிகளில் முதலிடம் பெறுவார்கள்.
கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவ அறிவாலும், இங்கிதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்

வேலூர் மாவட்டம் தக்கோலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதீஸ் வரரை வில்வார்ச்சனை செய்து வணங்கிட நினைத்தது நிறைவேறும்.

கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)

தொலைதூர சிந்தனை கொண்டவர்களே!


‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

சந்திரன் 2-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

எனினும், வருடம் பிறக்கும்போது செவ்வாய் 9-ல் இருப்பதால், தந்தையுடன் கருத்து மோதல்கள் தோன்றி மறையும். தந்தை வழி சொத்துகளைப் பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் பணம் விரயமாகும். 18.12.17 வரை சனி 3-ல் இருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். 19.12.17 முதல் சனி 4-ல் அமர்வதால், தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப் படக்கூடும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். அக்கம்பக்கத்தவரது ஆதரவு கிடைக்கும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே இருப்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காதுவலி வரக்கூடும். கௌரவக்குறைச்சலான சம்பவங்கள் நடைபெறும். ஆனால், 2.9.17 முதல் குரு பகவான் 2-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைப்பட்டு கிடக்கும் வீட்டுப்பணியைத் தொடர, வங்கிக்கடன் கிடைக்கும்.

14.2.18 முதல் 13.4.18 வரை குரு வக்கிரத்திலும் அதிசாரத்திலும் உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், மூச்சுத்திணறல், தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

26.7.17 வரை ராகு 12-ல் நீடிப்பதால், உடல்நலம் சீராகும். கேது 6-ல் இருப்ப தால், திடீர் பணவரவு உண்டு. கடன் பிரச்னை தீரும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக் குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 27.7.17 முதல் ராகு 11-ல் அமர்வதால், செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடிவரும். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஆனால், 27.7.17 முதல் கேது 5-ல் அமர்வதால், மகளின் திருமணத்துக் காக கடன் வாங்க நேரிடும். பிள்ளை களின் கல்வி, உத்தியோகம் போன்ற முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும்.

7.2.18 முதல் 2.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படக் கூடும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல் நலம் பாதிக்கும்.

28.8.17 முதல் செவ்வாயின் போக்கு சாதகமாக இல்லாததால், பூர்விகச் சொத்து பிரச்னைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பது நல்லது. சகோதரர்களுடன் மனவருத்தம் உண்டாகும். மனம், அமைதி இல்லாமல் தவிக்கும்.

வியாபாரத்தில், புது ஏஜென்சி எடுப்பீர்கள். செப்டம்பர் மாதம் முதல் சிலர் புதிய துறையில் முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களது ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். சினிமா, சிமென்ட், பெட்ரோ புராடக்ட்ஸ், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். நவம்பர் மாதம் முதல் அதிரடியான முன்னேற்றம் உண்டு. பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். 19.12.17 முதல் சனி 4-ல் அமர்வதால், சக ஊழியர்களால் பிரச்னை உண்டாகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன், சட்ட நிபுணர்களை ஆலோசிக் கவும். மாணவ - மாணவிகளுக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கமும் பாராட்டும் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு, வேற்று மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். விமர்சனங்களைக் கடந்து சாதிப்பார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைச் சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அங்கமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தாவை வணங்கிட, நன்மை உண்டாகும்.

துலாம் (சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)

மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



ராசிக்கு 11-ல் ராகு இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், செல்வம், செல்வாக்குக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படு வீர்கள். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசியில் சந்திரன் இருப்பதால், வேலை அதிகரிக்கும். மற்றவர் களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

சனி பகவான் 18.12.17 வரை 2-ல் பாதச் சனியாகத் தொடர்வதால், குடும்பத்தில் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. குடும்ப விஷயங் களை வெளியில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம். ஆனால், 19.12.17 முதல் சனி 3-ல் அமர்வதால், பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்பார்த்தத் தொகை கைக்கு வரும்.

1.9.17 வரை குரு பகவான் 12-ல் இருப்பதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். அவ்வப்போது உடல்நலனும் பாதிக்கப்படக்கூடும்.  2.9.17 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஜன்ம குருவாக அமர்கிறார். முன்கோபத்தால் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குருவின் பார்வை பலத்தால் சில அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

14.2.18 முதல் 13.4.18 வரை வக்கிரத்திலும் அதிசாரத்திலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். செலவுகளைக் கட்டுப்படுத்து வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

26.7.17 வரை கேது 5-ல் தொடர்வ தால், தூக்கம் குறையும். பிள்ளைகளைப் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் மனவருத்தம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 27.7.17 முதல் கேது 4-ல் அமர்வதால், தாயாரின் உடல்நலம் பாதிக்கும். காரியங்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். மேலும் 27.7.17 முதல் ராகு 10-ல் அமர்வதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வழக்குகளில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

2.3.18 முதல் 26.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக் கூடும்; கவனம் தேவை.

14.4.17 முதல் 27.5.17 வரை செவ்வாய் 8-லும், பிறகு 15.10.17 முதல் 4.12.17 வரை செவ்வாய் 12-லும் மறைவதால், சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும். வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்கவும். அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வெளியூர்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில், எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர் களுடன் சுமுகமான உறவு ஏற்படும். புதிய திட்டங்களை செயல்படுத்து வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். வெளிநாடு, வெளி மாநிலங் களில் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள். ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆனாலும், அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஒருபக்கம் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் பிரச்னைகளும் ஏற்படவே செய்யும்.

மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விச் சுற்றுலா சென்று வருவார்கள். பழைய நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். சாதனைகள் தொடரும்.  கலைத் துறையினருக்கு, இந்தப் புத்தாண்டில் வருமானம் உயரும். அவர்களது படைப்புகள் பரிசு, பாராட்டுகள் பெறும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு,   இதுவரையிலும் விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்


காரைக்குடிக்கு அருகில் உள்ளது இலுப்பைக்குடி. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீதான்தோன்றி ஈஸ்வரரையும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரையும் வழிபட்டு வந்தால், வெற்றி உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை)

உழைத்து உயர விரும்புபவர்களே!


‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

ராசிக்கு 5-ல் சுக்கிரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

வருடம் பிறக்கும்போது சந்திரன் 12-ல் இருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவு களைக் கட்டுப்படுத்துவது அவசியம். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

1.9.17 வரை குரு பகவான் 11-ல் இருப்பதால், திடீர் யோகம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் பிடிவாதப்போக்கு மாறும். ஆனால், 2.9.17 முதல் குருபகவான் 12-ல் மறைவதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் காரணமாக அவர்களைப் பிரிய நேரிடும். 14.2.18 முதல் 13.4.18 வரை வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் குறையும். பேச்சில் பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் அவசியம்.

சனி பகவான் 18.12.17 வரை உங்கள் ராசிக்குள்ளேயே இருப்பதால், தடுமாற்றம், மறதி, ஏமாற்றங்கள் ஏற்படக் கூடும். மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். கடனை நினைத்து கவலை உண்டாகும்.வழக்கு விஷயத்தில் தகுந்த ஆலோசனையுடன் செயல்படுங்கள். 19.12.17 முதல் சனி 2-ல் அமர்வதால், பணம் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மற்றவர்களுக்கு உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.

26.7.17 வரை ராகு 10-லும் கேது 4-லும் இருப்பதால், மனதில் இனம் தெரியாத கலக்கம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். எடுத்த வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். சிக்கலான காரியங் களில் ஈடுபடவேண்டாம். மற்றவர் களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம்.

27.7.17 முதல் கேது 3-ல் அமர்வ தால், தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டைச் சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் இப்போது வலிய வந்து பேசுவார்கள்.

ஆனால், ராகு 9-ல் அமர்வதால், அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். அடிக்கடி டென்ஷன் உண்டாகும். தந்தையின் உடல் நலனில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

26.5.17 முதல் 30.8.17 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய அச்ச மும் உண்டாகும். எந்த ஒரு காரியத்தை யும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். சகோதரர்களால் அலைச்சல் உண்டாகும்.

வியாபாரத்தில், ஆவணி, புரட்டாசி மாதங்களில் விற்பனை அதிகரிக்கும். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்ளவும்.

தை, மாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் வெளிநாட்டுத் தொடர்புடைய நபர் பங்குதாரராக இணைவார். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆவணி மாதம் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில சிறப்பு பொறுப்புகளையும் ஒப்படைப் பார்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மாணவ - மாணவிகளுக்குத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக் கும். போட்டிகளில் பரிசு உண்டு. கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை மேலும் மேலும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்

கரூர் மாவட்டம் வெண்ணெய் மலையில் அருளும் ஸ்ரீபால சுப்ரமணியரை, சஷ்டி திதி அல்லது பூசம் நட்சத்திர நாளில் வணங்கி வாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு (மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

நன்மை தீமைககளைப் புரிந்துகொள்பவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது சந்திரன் பிறப்பதால், கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை வலுப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்களுக்குப் புதிய அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

18.12.17 வரை சனி பகவான் விரயத்தில் இருப்பதால், வீண் சந்தேகங்களைத் தவிர்க்கவும். செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். 19.12.17 முதல் சனி உங்கள் ராசிக்குள்ளேயே அமர்வதால், பெரிய நோய்கள் இருப்பது போல் நினைத்து கவலைப்படுவீர்கள். பயணங்களால் அசதியும் மனச்சோர்வும் உண்டாகும்.
 
1.9.17 வரை குரு பகவான் 10-ல் தொடர்வதால், வேலைச்சுமையின் காரணமாக பதற்றம் ஏற்படும். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதி எதுவும் தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 2.9.17 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் அதிர்ஷ்டம், யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன், கௌரவமும் உயரும். இதுவரை உங்களைத் தாழ்வாக நினைத்தவர் களும் இனி உங்களைப் பாராட்டுவார்கள். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக நிறைவேறும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

14.2.18 முதல் 13.4.18 வரை வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் குரு 12-வது வீட்டில் அமர்வதால், சிக்கனம் அவசியம். பழைய கடன்களை நினைத்துக் கலங்குவீர்கள்.

26.7.17 வரை கேது 3-ல் இருப்பதால், சவாலான விஷயங்களை யும் எளிதாக முடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். ராசிக்கு 9-ல் ராகு தொடர்வதால், தந்தையுடன் மன வருத்தம் உண்டாகும். தந்தைக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக் கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். 27.7.17 முதல் ராகு 8-லும் கேது 2-லும் தொடர்வதால், பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க விஷயங்கள் தாமதமாகும்.

12.7.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால், கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இருவரும் அனுசரித்துச் செல்லவும். சகோதர வகையிலும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்விகச் சொத்துகள் விஷயத்தில் செலவுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கை தேவை. 28.6.17 முதல் 26.7.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், பேச்சால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் பற்று வரவு அதிகரிக்கும். புதிய நபர்களுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். பெரிய வாய்ப்புகளும் தேடி வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். பங்குதாரர்களை மாற்றவேண்டி வரும். வியாபார விஷயம் எதுவானாலும் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளுவது நல்லது. துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு இனங் களால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலையின் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மார்கழி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வரும்.
மாணவ - மாணவிகளுக்கு  ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். கலைத் துறையினருக்கு விருதுகள், அரசாங்க கெளரவம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் தலைநிமிர வைப்பதாக அமையும்.

பரிகாரம்

திருநெல்வேலிக்கு அருகிலுள்ளது ஆறுமுகமங்கலம். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஆயிரத்தெண் விநாயகரை, சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)

மற்றவர்களை விமர்சிக்க விரும்பாதவர்களே!


‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதி சுக்கிரன் உச்சம் அடைந்திருக்கும் வேளையில் இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கும். நல்ல சம்பளத் துடன் புது வேலை அமையும். சிலருக்கு அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.

1.9.17 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-வது வீட்டில் தொடர்வதால் உங்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். ஆனால், 2.9.17 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் அமர்வதால், சிறுசிறு அவமானங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் குற்றம், குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். 14.2.18 முதல் 13.4.18 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் லாப வீட்டில் அமர்வதால், அது முதல் தொட்டது துலங்கும். 

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நிற்பதால், அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். பேச்சில் கனிவு தேவை. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம். 27.7.17 முதல் இந்த வருடம் முடியும் வரை ராசிக்கு 7-ல் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் அமர்வதால், ஆன்மிக விழாக் களில் முதல் மரியாதை கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 18.12.17 வரை லாப வீட்டில் தொடர்வ தால், திடீர் பணவரவால் பழைய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.  19.12.17 முதல் சனி 12-ல் மறைந்து விரயச் சனியாக வருவதால், வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். எந்த விஷயத்திலும் பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

26.7.17 முதல் 21.8.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். 28.8.17 முதல் 15.10.17 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும்.

வியாபாரத்தில் தொட்டது துலங் கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  வேலையாட்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.  வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி  மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். சந்தை நுணுக்கங் களை கற்றுக்கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். மார்கழி, தை மாதங்களில் லாபம் குறையும். பங்குதாரர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். கூட்டுத் தொழில் வேண்டாம்.   

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். வைகாசி, ஆனி மாதங் களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். இழந்த சலுகைகளை, பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மார்கழி, தை மாதங்களில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். மேல் அதிகாரியிடம் வளைந்துகொடுத்துப் போகவும்.

மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

கலைத் துறையினர், புதிய வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பார்கள்.வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள். விருது கிடைக்கும். 

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்


கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வழிபடுங்கள். எதிலும் வெற்றி உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி  1,2,3-ம் பாதம்)

விவாதம் செய்வதில் வல்லவர்களே!

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)



உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். செலவுகளுக்கு ஏற்ற வருமானம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரனும், 3-ம் வீட்டில் சூரியனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இருப்பதால், வீண் கவலையும் அலைச்சலும் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 2.9.17 முதல்  9-ம் வீட்டில் குரு அமர்வதால்,  இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ஆனால், 14.2.18 முதல் 13.4.18 வரை உள்ள காலக்கட்டத்தில் குரு வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் 10-வது வீட்டில் செல்வதால், தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மறதியால் விலை உயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் தொடர்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். 27.7.17 முதல் ராகு 6-ல் அமர்வதால், அரைகுறையாக நின்று போன வீடு கட்டும்பணி முழுமை அடையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். 27.7.17 முதல் 12-ல் கேது நிற்பதால், அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும்.

21.8.17 முதல் 15.9.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால்,  வாகனம் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். 15.10.17 முதல் 1.12.17 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாய் 8-ல் மறைவதால், கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். சொத்துக்கு உரிய ஆவணங்கள் தொலைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு குறையும்.

உங்களின் ராசிநாதனாகிய சனி பகவான் உங்கள் ராசிக்கு 18.12.17 வரை 10-வது வீட்டில் தொடர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 19.12.17 முதல் வருடம் முடியும் வரை சனி லாப வீட்டில் அமர்வதால், செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். வேலையாட்களின் குறைநிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். வைகாசி, ஐப்பசி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங் கள், கெமிக்கல், என்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
   
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. கார்த்திகை, மாசி மாதங்களில் உங்கள் நிலை உயரும். 

மாணவ-மாணவியர்களுக்கு அதிக உழைப்பு தேவைப்படும் காலம் இது. விரும்பிய பாடப்பிரிவில் சேர்வதற்குச் சிரமங்கள் ஏற்படலாம்.

கலைத் துறையினர், விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களது படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். திரைக்கு வர இயலாமல் முடங்கிக்கிடந்த உங் களுடைய திரைப்படங்கள் விரைவில் வெளியாகி வெற்றி பெறும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, ஆடி மாதம் வரை உங்களுக்கு பல்வேறு சோதனைகளைத் தந்து அலைக் கழித்தாலும், ஆவணி மாதம் முதல் எதிர்பாராத யோகங்களை அள்ளித் தந்து உங்களை உயரவைப்பதாக அமையும்.

பரிகாரம்


பட்டுக்கோட்டை, பேராவூரணிக்கு அருகிலுள்ளது பாலதள்ளி எனும் ஊர். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, செவ்வாய்க் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள்; சொத்தும் சுகமும் உண்டாகும்.

மீனம் (பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உயர்ந்த லட்சியத்துடன் வாழ்பவர்களே!


‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

ராகு 6-ம் வீட்டில் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ஆனால், சந்திரன் 8-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், எளிதாக முடிய வேண்டிய விஷயங் களைக் கூட கொஞ்சம் சிரமப்பட்டு முடிப்பீர்கள்.

1.9.17 வரை உங்களின் ராசிநாதனாகிய குரு 7-வது வீட்டிலேயே தொடர்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். 2.9.17 முதல் 13.2.18  வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக நடத்துக் கொள்ளுங்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.

14.2.18 முதல் 13.4.18 வரை 9-ம் வீட்டில் குரு அமர்வதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

16.9.17 முதல் 10.10.17 வரை சுக்கிரன் 6-ல் அமர்வதால், கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். 1.12.17 முதல் 20.1.18 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால், சகோதரர்களுடன் கருத்துமோதல்கள் வரும். செலவுகள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

26.7.17 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்ப தால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக் கும். ஆனால், 27.7.17 முதல் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது அமர்வதால், எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலமாக சில காரியங் களை சாதிப்பீர்கள். ஆனால் 5-ல் ராகு நிற்பதால், பூர்வீகச் சொத்தில் சட்டச் சிக்கல் வரும்.

சனி பகவான் 18.12.17 வரை 9-ம் வீட்டில் நீடிப்பதால், வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். சிலருக்கு, தந்தையுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

19.12.17 முதல் 13.4.18 வரை 10-ம் வீட்டில் அமர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரங் களிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களது செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.  பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போகவும். மார்கழி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டுத் தொடர்புடைய புது பங்குதாரர்கள் உங்களுடன் இணைய வாய்ப்பு உண்டு. உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.  

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவ-மாணவிகளுக்கு  தேர்வில் வெற்றியும் அதிக மதிப்பெண் ணும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் அதிகரிக்கும். கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வார்கள்.
கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களின் சாதனைகளை அதிகப் படுத்துவதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்


திருச்சி, லால்குடிக்கு அருகிலுள்ளது மணக்கால். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை, சஷ்டி திதி நாள்களில் சென்று தரிசித்து  வழிபடுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

நவகோள்களும் நன்மையே அருளட்டும்!

ஜா
தகத்தில் நவகோள்களின் குறைபாடுகளை நீக்கி, நாளும் நலமே உண்டாக மிக அற்புதமான துதிப்பாடல்களை அருளியிருக்கிறார்கள் மகான்கள். அவற்றில் இரண்டு துதிப்பாடல்கள் இங்கே உங்களுக்காக...

‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! (எளிமையான பரிகாரங்களுடன்)

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
    சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே!

- திருஞான சம்பந்தர்

நாளென் செய்யும் வினைதானென்செய்யுமெனை நலியவந்த
கோளென் செய்யும் கொடுங்கூற்றென் செய்யும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே!


- அருணகிரிநாதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism