Published:Updated:

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!
ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

புதிய தமிழ் வருடமான ஹேவிளம்பி வருடம் 13/14.04.2017 விடிந்தால் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.43க்கு கிருஷ்ணபட்சத்து திருதியை திதி, விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசி, மகர லக்னம், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகத்தில் பத்தரை நாமகரணத்தில் நேத்திரம், ஜீவனம் கூடிய நன்னாளில் பஞ்சபட்சிகளில், குரு தசையில், சுக்ர புத்தியில், சுக்ர அந்தரத்தில், புதன் ஓரையில் சிறப்பாக பிறக்கிறது.

மேஷம்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைமைப் பண்புமிக்க உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள்களாக தள்ளிப் போன விஷயங்கள் நல்லவிதமாக முடியும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில், செல்வாக்கு உயரும். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால், அதுவரை பணப்பற்றாக்குறையும், கணவன்-மனைவிக்குள் மனத்தாங்கல்களும் வந்து மறையும். வீண் செலவுகளும் இருக்கும். ஆனால், 2.09.2017 முதல் குரு 7-ம் வீட்டுக்கு வருவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். புது வீடு கட்டி மகிழ்ச்சியாக குடிபுகுவீர்கள். வேலையும் கிடைக்கும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. ஆவணி, தை மாதங்களில் பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

வெற்றிக் கனிகளை சுவைக்கத் தொடங்கும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சனிக்கிழமைதோறும் செல்லுங்கள். ஆதரவற்றப் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். 

ரிஷபம்

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்கிற உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். 1.9.2017 வரை குரு பகவான் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் வருமானம் ஒருபடி உயரும். புதிய வேலையில் அமர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால், 2.9.2017 முதல் குரு 6-ம் இடத்தில் மறைவதால், கொஞ்சம் அலைச்சல்கள் இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. 27.7.2017 முதல் ராகு, உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்வதால், புது வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர் வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரியின் ஆதரவு பெருகும்.

தொடர் உழைப்பால் வெற்றி பெறும் வருடமாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குத் திங்கட்கிழமைதோறும் செல்லுங்கள்.எளியோருக்கு உதவுங்கள்.

மிதுனம்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

 நகைச்சுவையாகவும், நாசூக் காகவும் பேசும் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சனி பகவான் நிற்கும்போது, இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆனால், 19.12.2017 வரை சனி 7-ம் இடத்தில் வந்து அமர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் பிறப்பதால், உங்களின் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். 2.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் குரு பகவான் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். ஆனால்,19.12.2017 முதல் கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். ஆனாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு பகவான் சாதகமாவதால், எதிர்ப்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த ஆண்டு வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ நாளில் வில்வ தளத்தால் நந்தி பகவானையும், சிவபெருமானையும் வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

கடகம்

‘காலம் உயிர் போன்றது’ என்பதை உணர்ந்த உங் களுக்கு சுக்கிரனும், புதனும் சாதகமாக இருக்கும்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பழுதான மின் சாதனங்களை மாற்றுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க  ராகுவும், கேதுவும் சரியில்லாததால், எவரிடமும் நிதானமாகப் பேசுங்கள். சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாகப் பேசப் போய் அது விபரீதமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க குருவின் போக்கு சரியில்லாததால் பணப்பற்றாக்குறை இருக்கும். 19.12.2017 முதல் சனி பகவான் 6-ம் இடத்தில் அமர்வதால், வழக்குகள் சாதகமாகும். பண வரவு அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். வைகாசி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு தன்னம்பிக்கையாலும், தொலை நோக்குப் பார்வையாலும் வெற்றிபெற வைக்கும். 

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

சிம்மம்

கனவு காண்பதோடு நனவாக்கு வதிலும் வல்லவர்களான உங் களுக்கு குரு பகவான் 2-ம் இடத்தில்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். 27.7.2017 முதல் கேது சாதகமாக இருப்பதால், மகனின் திருமணத்தை ச்சிறப்பாக முடிப்பீர்கள். 18.12.2017 வரை சனி பகவான் 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.உத்தியோகத்திலே புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். அலுவலகத்தில் உங்களின் திறமையை நிரூபித்துக் காட்டுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

வளைந்துக்கொடுத்துப் போவதால் முன்னேற வைக்கும் வருடம்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

கன்னி

பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவுபவர்களாகிய உங்களின் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

சந்திரன் நிற்கும்போது   இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பண வரவு கூடும். வீடு கட்டுவீர்கள். இனி உற்சாகமாக வலம் வருவீர்கள். இந்த ஆண்டு பிறக்கும்போது செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையாருடன் கருத்துமோதல்கள் வந்து போகும். 2.9.2017 முதல் குரு பகவான் சாதகமாவதால் குடும்பத்தில் நிலவி வந்த நிம்மதியற்ற போக்கு மாறும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புது வேலை அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  19.12.2017 முதல் சனி 4-ம் இடத்தில் அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.

சாதுர்யமான பேச்சால் சாதிக்க வைக்கும்  ஆண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலிலுள்ள ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை வணங்குங்கள். கண் பார்வை இழந்தோருக்கு உதவுங்கள்.

துலாம்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

சொன்ன சொல்லை நிறைவேற்று பவர்களான உங்களுக்கு, இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில், ராகு சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாடு, வெளி மாநிலத்திலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். 19.12.2017 முதல் சனி 3-ம் இடத்தில் அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆடி, ஆவணி, மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. உங்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். 

சிக்கனமும் பொறுமையும் தேவைப்படும் வருடமாக அமையும்.

பரிகாரம்: அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவரை தீபமேற்றி வணங்குங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

விருச்சிகம்

தீவிரமாகவும், தெளிவாகவும் சிந்திக்கின்ற உங்களுடைய ராசிக்கு சுக்கிரன் 5-ம் இடத்தில் அமர்ந்திருக்கும்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

நேரத்தில், இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். ஆனால், உங்கள் ராசிக்கு 12-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஒரு பக்கம் துரத்தினாலும், வருமானம் குறையாது. குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். 27.7.2017 முதல் கேது பகவான் 3-ம் இடத்தில் அமர்வதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். ஏழரைச் சனி தொடர்வதால், அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆவணி, தை மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும்.

அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும் வருடம் இது.

பரிகாரம்: சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானை நெய் தீபமேற்றி வணங்குங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவுங்கள்.

தனுசு

ஊர்நலம், உலகநலம் பற்றி யோசிக்கின்ற உங்களுக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது  இந்தப்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். வீடு, மனை வாகனம் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட  சாதனங்களை மாற்றுவீர்கள். 19.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு, ஜென்மச் சனியாக வருவதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். நடைபயிற்சியை மேற்கொண்டு உடல் எடையைக் குறையுங்கள். 02.09.2017 முதல் 13.02.2018 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 27.7.2017 முதல் ராகு, கேது சரியில்லாததால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

அதிகாரப் பதவியும், பணவரவும்  தேடிவரும் ஆண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள்.

மகரம்

ஆளுமைத் திறன் அதிக முள்ளவர்களே... உங்கள் யோகாதி பதியான சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்னைகள் விலகும். ஆனால், 2.9.2017 முதல் குரு பகவான் 10-ம் இடத்தில் அமர்வதால் சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் ராசிக்கு 10-ம்  இடத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் ராசிநாதனாகிய சனி பகவான் 18.12.2017 வரை ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். ஆனால், 19.12.2017 முதல் சனி 12-ம் இடத்தில் மறைந்து விரயச் சனியாக வருவதால் வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். தூக்கம் குறையும். சித்திரை, ஆனி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். அதிகாரிகளிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

முற்பகுதி முன்னேற்றத்தையும் பிற்பகுதி அலைச் சலையும் தரும் ஆண்டு.

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோயிலிலுள்ள ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

கும்பம்

மன்னிக்கும் குணம் அதிக முள்ள உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ம் இடத்தில் இந்தப்

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். 1.9.2017 வரை குரு 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், 2.9.2017 முதல் 9-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நீண்ட நாள்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 18.12.2017 வரை உங்களின் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்தில் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 19.12.2017 சனி லாப வீட்டில் அமர்வதால் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். 19.12.2017-க்குப் பிறகு, அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும்.

 குடும்பத்தில் அமைதியையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் ஆண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை எலுமிச்சைப் பழ தீபமேற்றி வணங்குங்கள். திருநங்கை களுக்கு உதவுங்கள்.

மீனம்

அடுத்தவர்களின் உள்மனதை ஊடுருவிப் பார்ப்பவர்களே...உங்கள்  ராசியை குரு பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்  இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற

ராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

வேலைகளெல்லாம் முடியும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். உங்கள் ராசிக்கு 8-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். 27.7.2017 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆனால், 2.9.2017 முதல் குரு ராசிக்கு 8-ம் இடத்தில் அமர்வதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர் பயணங்கள் இருக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். ராகு 5-ம் இடத்தில் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுப்படுத்துவீர்கள். பணியில் சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

இந்த ஆண்டு புது அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் படித்து வணங்குங்கள். வேப்பமரக் கன்று நட்டு பராமரியுங்கள்.