திருத்தலங்கள்
தொடர்கள்
இளைஞர் சக்தி
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை

கனிவான விசாரிப்பால் மற்றவர்களைக் கவர்பவர்களே!

உங்கள் சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால்,  பணவரவு உண்டு. பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கேது வலுவாக அமர்ந்திருப்பதால் சவால் களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க புது வழி பிறக்கும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்து பிரச்னை தீரும். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். ராசிநாதன் செவ்வாய் 2-ல் அமர்வதால், அடுத்தடுத்து பயணங்கள் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், அரசு காரி யங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர் கள். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். கலைத்துறையினரே! எதிர்பார்த்தபடி புது வாய்ப்புகள் தேடி வரும்.

சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

எதிரிக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்டவர்களே!

குரு பகவான் வலுவாக இருப்பதால், நீண்ட கால எதிர்பார்ப்பு கள் நிறை வேறும். பிரபலங்கள் நண்பர்களா வார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சிலருக்குச் குழந்தை பாக்கியம் கிடைக் கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் விசேஷங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

செவ்வாய் ராசிக்குள் அமர்வதால், முன்கோபம், ரத்த அழுத்தம், அடிவயிற்றில் வலி வந்து போகும். ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால், தூக்க மின்மை, டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும்.

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசுபவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரைசூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்தத் தொகை கைக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக் கும். பிள்ளைகளின் கல்யாணம், உயர் கல்வி முயற்சிகள் கூடி வரும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திருப்பணிகளில் பங்கேற்பீர்கள்.

சனியும், ராகுவும் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த கௌரவப் பதவி கிடைக்கும். பாதி பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். 4-ல் குரு தொடர்வதால், தாயாருக்கு கை கால் வலி வந்து நீங்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தி யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்  கும். நிரந்தரமற்ற சூழல் உருவாகும். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும்.  

விஸ்வரூபம் எடுக்கும் தருணம் இது. 

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை


உங்களின் யோகாதிபதி செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். கம்பீரமாக பேசுவீர்கள். முடிக்க முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசு வேலைகள் வேகமாக முடியும். உறவினர்கள் உதவி செய்வார்கள். 13-ம் தேதி வரை சூரியன் 9-ல் நிற்பதால், தந்தையுடன் கருத்து மோதல்கள், அலைச்சல் வந்து நீங்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசித்து முடிவு எடுக்கவும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றியடைவீர்கள்.

தடைகள் எல்லாம் உடைபடும் காலம் இது.  

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

உண்மையான அன்புக்கு மட்டுமே கட்டுப்படுபவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரைகுரு வலுவாக இருப்பதால், புது முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக்கொள்வீர்கள். நீண்ட நாள்களாக சந்திக்க நினைத்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளி மாநிலத்தவர்களால் ஆதாயம் உண்டு.

ராசிக்குள் ராகு நிற்பதால், மன நிம்மதி குறையும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். சூரியனின் போக்கு சரியில்லாததால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னு ரிமைத் தருவார்கள். கலைத்துறை யினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

திறமைகள் வெளிப்படும் தருணம் இது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

அளவுக்கு அதிகமாக ஆசைப்பட விரும்பாதவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை


சனி 3-ம் இடத்திலேயே வலுவாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தி யில் மதிக்கப்படுவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வீடு, வாகனம் சேரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைவதால், உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். ஜன்ம குரு தொடர்வதால், காய்ச்சல், மஞ்சள் காமாலை, கை கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலை யாட்கள், பங்குதாரர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! புதுமையான படைப்புகளை வெளியிட்டு அனை வரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

முயற்சிகளில் வெற்றி பெறும் வேளை இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி,  விசாகம் 1,2,3-ம் பாதம்

நம்பி வந்தவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரைலாப வீட்டில் ராகு தொடர்ந்து கொண்டிருப்பதால், போராட்டங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். பிள்ளை களின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். பூர்வீகச் சொத்தை விற்று சில        பிரச்னைகளில் இருந்து வெளி வருவீர்கள். மாற்றுமொழியினரால் திடீர்த் திருப்பம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

13-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால், அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால், முன்கோபம், வேனல் கட்டி, உடல் உஷ்ணம் வந்து போகும். சுக்கிரனும், புதனும் 6-ல் மறைந்திருப்பதுடன், செவ்வாயும் 8-ல் மறைவதால், கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் எழும்.

காத்திருந்து சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

வருங்காலத்தைப் பற்றி திட்டமிட்டு வாழ்பவர்களே!

குரு பகவான் வலுவாக உள்ளதால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணபலம் உயரும். வீடு, வாகன வசதி பெருகும். 14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 6-ல் நுழைவதால், திடீர் யோகம் உண்டாகும். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். செவ்வாய் 7-ல் அமர்வதால், திடீர் கோபம், டென் ஷன் வந்து போகும். உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள் வார்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், தலைச்சுற்றல், அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.

மூலம்,  பூராடம்,  உத்திராடம் 1-ம் பாதம்

பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்பவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரைசெவ்வாய் 6-ல் நுழைவதால், மனோபலம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர் கள். புதன் சாதகமாக இருப்பதால், வாழ்க்கைத்துணை வழியில் ஆதாய மடைவீர்கள்.

13-ம் தேதி வரை சூரியன் 4-ல் இருப்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால், வீண் டென்ஷன், பிள்ளைகளால் செலவுகள் வந்து செல்லும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். ஏழரைச் சனி தொடர்வதால், படபடப்பு, எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள் உங் களைப் புரிந்துக்கொள்வார்கள். உத்தி யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

நினைத்ததை நடத்திக் காட்டும் வேளை இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை


குருவும், சூரியனும் சாதகமாக இருப்பதால், பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர் கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவி னர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணம் வரும். நிலம், வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. அனுபவம் உள்ள நல்ல வேலையாட்களை பணி யில் அமர்த்துவீர்கள். பழைய பங்கு தாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத் தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார். கலைத் துறையினரே! அலட்சியம் செய்த நிறுவனமே அழைத்துப் பேசும்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் தருணம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

மற்றவர்களைக் கெடுத்து வாழ்வதை விரும்பாதவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரைபுதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மதிப்பு, மரியாதை கூடும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சித்தர்களின் ஆசி கிட்டும்.

8-ல் குரு தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் மீண்டு வெளியே வருவீர்கள். 13-ம் தேதி வரை சூரியன் 2-ல் நிற்பதால், கண் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். ஆனால், 14-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் நுழைவதால், புது வேலை அமையும். செவ்வாய் சாதகமான   வீடு களில் செல்வதால், உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கி கள் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

கடின உழைப்பால் கரையேறும் காலம் இது.

பூரட்டாதி  4-ம் பாதம்,  உத்திரட்டாதி, ரேவதி

எந்த நிலையிலும் அறிவு பூர்வமாகச் சிந்திப்பவர்களே!

ராசிபலன் - ஏப்ரல் 11 முதல் 24 வரை


 ராசிக்கு 3-ம் இடத்தில் செவ்வாய் அமர்வதால், தடைகள் நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை, மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால், வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் உங்களுடைய ராசியை விட்டு விலகுவதால், தடைப் பட்டு வந்த அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ராகு 6-ம் இடத்தில் வலுவாக நிற்பதால், பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வியா பாரம் தழைக்கும். சிலர் புதுக் கிளை கள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கலைத் துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவீர்கள்.

பணிவால் சாதிக்கும் தருணம் இது.