தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

உங்கள் கை ஓங்கும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைமேஷம்:
அதர்மத்துக்குத் தலை வணங்காதவர்களே! சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் கை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கசப்புணர்வுகள் நீங்கும். புதிய வேலை கிடைக்கும்.  பிள்ளைகளிடம் உங்களுடைய எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். இடம் பொருள் ஏவலறிந்துப் பேசுவது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் ஓயாது உழைக்க வேண்டிவரும். வளைந்து கொடுத்து காரியம் சாதிக்கும் வேளையிது.

சக்தி கிடைக்கும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை


ரிஷபம்: தொடங்கியதை முடிக்கும் வரை துவளாதவர்களே! குரு வலுவாக இருப்பதால், நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதாலும், செவ்வாய் ராசிக்குள் நிற்பதாலும் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.

வேலைகள் எளிதாகும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைமிதுனம்: நெருக்கடி நேரத்திலும் பொறுமை இழக்காதவர்களே! சூரியன் வலுவாக இருப்பதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சிலருக்குத் திருமணம் கைகூடி வரும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். பிள்ளை களின் தனித்திறமைகளை இனம் காண்பீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 4-ம் இடத்தில் குரு இருப்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.உயர் அதிகாரிகளால் ஆதரிக்கப்படுவீர்கள்.

சவாலில் வெற்றி பெறுவீர்கள்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை


கடகம்: பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்டறிபவர்களே! செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்தக் கட்டட வரை படத்துக்கு அரசு அனுமதி கிடைக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அரசு வகையில் அனுகூலம் உண்டு. நட்பு வட்டம் விரியும். குரு மற்றும் ராகு, கேது சாதகமாக இல்லாததால், யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். குழப்பம் நீங்கிக் குதூகலிக்கும் நேரமிது.

செல்வாக்குக் கூடும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைசிம்மம்:
மற்றவர்களை மதிப்பீடு செய்வதில் வல்லவர்களே! குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு ,மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். செல்வாக்குக் கூடும் வேளையிது.      

தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை


கன்னி: கால நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே! புதனும் சுக்கிரனும் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் ,பலவீனத்தை உணர்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பங்குச்சந்தை மூலமாக பணம் வரும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  தன்னம்பிக்கையால் சாதிக்கும் தருணமிது.  

கனவு இல்லம் நனவாகும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைதுலாம்:
எதிலும் புதுமையை விரும்புபவர்களே! ராகு வலுவாக இருப்பதால், துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த, வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து, அதற்கேற்ப வழிநடத்துவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

பயணம் இனிதாகும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை


விருச்சிகம்:
நியாயத்தைப் பேசு பவர்களே! சூரியன் 6-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும். நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள.் 

நினைத்தது நிறைவேறும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைதனுசு:
இரக்கக் குணம் மிகுந்தவர் களே! செவ்வாய் 6-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். வராது என்றிருந்த பணம்  உங்கள் கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போனத் திருமணம் கூடி வரும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். விலை உயர்ந்தப் பொருள்கள் வாங்குவீர்கள். நீண்ட நாளாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவுவார்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழுதான வாகனத்தைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.

உற்சாகம் பிறக்கும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை


மகரம்: பரம்பரைப் பழக்கங்களை விட்டுக்கொடுக்காதவர்களே! சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களுடைய பலம், பலவீனம் உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். உழைத்து முன்னேறும் தருணமிது.  

முயற்சிகள் வெற்றியாகும்!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைகும்பம்: கூடிவாழ ஆசைப்படுபவர் களே! சூரியன் 3 - ம்  இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். மனபலம் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். பிள்ளைகளின் மற்ற திறமைகளைக் கண்டறிந்து அதை வளர்ப்பீர்கள். சொத்துச் சிக்கல்கள் சுமுகமாக முடியும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும்.

எங்கும் வரவேற்பு!

ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை


மீனம்:அனுபவ அறிவால் அடுத்தவர்களை ஆக்கிரமிப்பவர்களே! ராசிநாதன் குரு பகவான் வலுவாக இருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்த்தப் பணம் வரும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். ராசிக்கு 2-ம் இடத்தில் சூரியன் நிற்பதால், காது, பல் அல்லது கண் வலி வந்து நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள்.