Published:Updated:

பிறந்த தேதி பலன்கள்!

பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!

பிறந்த தேதி பலன்கள்!

நீங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!

Published:Updated:
பிறந்த தேதி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பிறந்த தேதி பலன்கள்!
பிறந்த தேதி பலன்கள்!

வடமேற்கும் தென்மேற்கும் திருப்பம் தரும்!

சந்திரனின் குளுமையும், செவ்வாயின் சீற்றமும் ஒருங்கிணைந்த அம்சமாகத் திகழ்வது எண் 29. சந்திரனும்

பிறந்த தேதி பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செவ்வாயும் சேர்ந்திருப்பதை ஜோதிட நூல்கள் சந்திர மங்கள யோகம் என்கிறது.
செவ்வாயும் சந்திரனும் தண்டவாளங்களைப் போல் இணையவும் மாட்டார்கள்; விட்டு விலகவும் மாட்டார்கள். ஆனால், இருவரும் ஒருசேர ஆட்டிப்படைப்பார்கள். எனவே, இந்தத் தேதியில் பிறந்தவர்களை அவர்களுடைய உணர்வுகள் ஆட்டிப்படைத்துக்கொண்டே இருக்கும்.

தாங்கள் சொல்வதை ஊரார் கேவலமாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் இவர்கள் எதையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அதன் காரணமாகவே இயல்பான தங்கள்

பிறந்த தேதி பலன்கள்!

உணர்வுகளையும் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம் என்பதால், தைரியம் குறைவாகவே இருக்கும். தன்னையும் நம்ப மாட்டார்கள்; மற்றவர்களையும் நம்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு உடனே யோசனை சொன்னாலும், தனது காரியத்துக்கு மட்டும் பலமுறை யோசிப்பார்கள்.

பல சாம்ராஜ்யங்கள் உருவாகக் காரணமாக இருப்பார்கள். இவர்கள் மனதுக்கு உரிய சந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது தன்னம்பிக்கை, வளர்ச்சி எல்லாமே இருக்கும். போர் கிரகமான செவ்வாய் ஆட்டிப் படைக்கும்போது சர்வாதிகாரிகளாக இருப்பார்கள். தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தியே தீருவார்கள். மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், எதிரி வலிமையானவர் என்றால் உடனே வெள்ளைக் கொடி காட்டிவிடுவார்கள். கடிவாளம் கட்டிய குதிரைபோல கண்மூடித்தனமான ஒழுங்குமுறையைப் பின்பற்றுவார்கள். மூச்சு சீராக இருக்காது. அதனால் மூச்சு சம்மந்தமான நோய்கள், வாத நோய்கள் வந்து நீங்கும்.

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் இறுக்கமான ஆடை அணிவார்கள். சிறிய கறை இருந்தால்கூட அந்த ஆடையை அணிய மாட்டார்கள். நேரம் தவறாமையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். சுலபத்தில் கடும் வார்த்தையைச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால், எதிராளி நிச்சயம் தவறு செய்திருப்பார். இவர்கள் உடல் அழகை பராமரிப்பதில் கவனம் செலுத்துவார்கள். அடுத்தவரை நிமிர்ந்து பார்க்க வைப்பார்கள். அலங்காரப் பிரியராக இருப்பார்கள். வாழ்க்கையில் மெதுவாக முன்னேறுவதையே விரும்புவார்கள். 

பிறந்த தேதி பலன்கள்!

2, 6, 7, 11, 24, 25 ஆகிய தேதிகள் இவர்களுக்கு ராசியானது. ரோஸ், க்ரீம், வெளிர் நீலம் ஆகிய நிறங்களும் வடமேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளும் இவர்களுக்குத் திருப்பத்தைக் கொடுக்கும். க்ரீன் ஜெட் ரத்தினத்தை அணிந்தால் வெற்றி விரைவாக வந்து சேரும்.

சந்திரன் - செவ்வாய் கூட்டு என்பது ஒரு கலவை. ஆகவே, இந்தத் தேதியில் பிறந்தவர்களிடம் திறமை மண்டிக் கிடக்கும். ஆனால், உபயோகிக்கத் தெரியாது. முகஸ்துதிக்கு மயங்கி ஏமாந்துவிடுவார்கள். இவர்கள் ஒரு வட்டத்துக்குள் இருக்க நினைத்தாலும், செவ்வாய் இவர்களைச் செயல்படத் தூண்டிக்கொண்டே இருப்பார்.

அறக்கருணையுடன் மறக் கருணையும் கொண்டு திகழும் தெய்வமும், சந்திரனோடு தொடர்புள்ள ஆலயங்களும் இவர்களுக்கு ஏற்றது. அப்படிப்பட்ட ஒரு தலமே திருவக்கரை வக்ரகாளியம்மன் ஆலயம்.
இந்தத் தலத்தை ஒட்டி ஓடும் சங்கராபரணி நதி சந்திரனின் அம்சத்தையும், கோயிலருகே உள்ள சிறு சிறு குன்றுகள் செவ்வாயின் அம்சத்தையும் பெற்றவை. தலத்தின் தெய்வம் வக்ரகாளி. வக்ராசுரனை வதம் செய்ததில் இவள் சந்திரனின் வீரத்தையும் புன்னகையில் செவ்வாயின் செம்மையையும் வெளிப்படுத்துகிறாள். குங்குமமும், மஞ்சளும் கலந்த ஒரு சுகந்தம் அந்தச் சந்நிதியில் வீசும். அபிஷேகம் முடித்து, அலங்காரக் கோலத்தில் அம்பாளைத் தரிசிக்க, உள்ளம் சிலிர்க்கும்.

29-ம் தேதிக்காரர்களுக்கான அற்புதத் தலமே இதுதான். இந்தத் தலத்தின் ஈசனின் பெயர் சந்திரமௌளீஸ்வர். 29-ம் தேதிக்காரர்களும் சந்திரனின் ஆதிக்கத்தில் இருப்பதால், இவர்களுக்கான தலம் இதுதான். உயர்ந்த லட்சியங்கள் வெற்றியடையவும் பலவீனங்கள் பலமிழந்து, பன்மடங்கு பலம் பெற திருவக்கரை வக்ரகாளியையும் சந்திரமௌளீஸ்வரரையும் தரிசிப்பது நல்லது.

மத்திம வயதில் செல்வாக்கும் சுகவாழ்வும் அமையும்!

பிறந்த தேதி பலன்கள்!

சத்புத்திரனுக்கும், வங்கிகளுக்கும் உரிய கிரகமான குருவின் 3 எனும் எண்ணின் ஆதிக்கத்தில் உதித்தவர்கள் இவர்கள். தம்மைத் தாமே வழிநடத்திக்கொள்ளும் திறமை பெற்றிருப்பார்கள். குருவின் ஆதிக்கத்தில் இருப்பதால், முகத்தில் இயல்பாகவே சாந்தம் குடி கொண்டிருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் குருவின் நிலையாக உச்சம், நட்பு, பகை, நீசம், வக்கிரம், அஸ்தங்கம் என்று பல்வேறு அம்சங்களைச் சொல்வார்கள். இதில் 30 என்ற எண், உச்ச வக்கிர குருவை, அதாவது எல்லா விஷயத்தையும் அறிந்திருப்பதையும், தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும் குறிக்கிறது. அதிலும் இவர் தனித்த குரு. இந்தத் தேதியில் பிறந்தவர்கள் அனைத்தையும் அறிந்திருந்தாலும் அதை காசாக்கத் தெரியாது. பலருக்குப் படிப்புக்குத் தகுந்த வேலை அமையாது.

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து, பல சந்தர்ப்பங்களில் ஏமாந்து விடுவார்கள். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். ஆரம்பக் காலங்களில் கொஞ்சம் அல்லல்பட்டாலும், மத்திம வயதில் பிரமாண்டமாக வருவார்கள். தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மற்றவர்களைக் காரணம் சொல்ல மாட்டார்கள்.

எதையும் நன்றாகத் திட்டமிட்டு செயல்படுவார்கள். சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், கேட்பவரின் மனநிலை அறிந்து, பக்குவம் அறிந்து பேசுவார்கள். இவர்களின் மூளைத் திறனை அனைவரும் வியந்து பாராட்டினாலும், இவர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது ஒருவரும் உதவ முன்வர மாட்டார்கள். அப்போதுதான் இவர்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்வார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் இவர்களுக்கு ஈடுபாடு இருக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

மத்திய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைவார்கள். சமூகத்தில் செல்வாக்குக் கூடும். புகழ் பெருகும். வாழ்க்கையின் முதல் பாதியில் வரும் வாய்ப்பை இழக்காமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். பலரும் இவர்களுடைய ஆலோசனை கேட்டு வருவார்கள். இவர்கள் சிறிய வயதிலேயே கொள்கை கோட்பாடெல்லாம் வைத்திருப்பார்கள். விவாதம் என்று வந்துவிட்டால், வேகமாகப் பேசுவார்கள். தந்தையை மிகவும் போற்றுவார்கள்.

கலா ரசனை மிக்க இவர்கள் பாரம்பர்ய இசையில் ஆர்வம் காட்டுவார்கள். வங்கி, ஃபைனான்ஸ், நகைக் கடை, ஆசிரியர், பத்திரிகைத் துறை, சாட்டர்ட் அக்கவுன்ட்ஸ், வழக்கறிஞர், உளவுப் பிரிவு, ஆவணப் பாதுகாப்புப் பிரிவு என்று பல துறைகளில் பணியாற்றுவார்கள். 

தெற்கு, வட கிழக்கு ஆகிய திசையில் இருக்கும் நகரங்கள், நாடுகள் இவர்களுடைய முன்னேற்றத்துக்கு உதவும். வெளிர் மஞ்சள், மெரூன், ஆரஞ்சு ஆகிய நிறங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். சிவப்பு மார்க்கா கல்லை அணிந்தால் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும்.

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி, செயல் திறனைக் குறைத்துக் கொள்வார்கள். அதனால் வேகம் தடைப்படும். எந்த வேலையையும் செய்து முடிப்பதற்கு முன்பாக ரகசியங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

இவர்கள் பருவத்தே பயிர் செய் என்பதுபோல காலமறிந்து கச்சிதமாகக் காரியங்களை முடித்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, நரம்புத் தளர்ச்சி, வாமிட்டிங் சென்சேஷன், வயிற்றோட்டம், பித்தத் தலைசுற்றல், ஹீமோகுளோபின் குறைவு போன்ற நோய்கள் வந்து நீங்கும்.

ஏமாற்றங்கள் நீங்கவும் எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் இவர்கள் செல்ல வேண்டிய திருத்தலம் வேதாரண்யம். வேதங்கள் பூஜித்து, காடாகப் பரவியதால் ஈசனுக்கு ‘வேதாரண்யேஸ்வரர்’ என்றும், அந்தத் தலத்தை வேதாரண்யம் என்றும் ஆதி நாளில் வழங்கினர். அழகு தமிழ், அந்தத் தலத்தை ‘திருமறைக்காடு’ என்றும், தல நாயகனை, ‘மறைக்காடர்’ என்றும் கம்பீரமாக அழைத்தது.

இந்தத் தலத்துக்குச் சென்று வழிபடுவதால், குருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இவர்களுக்குள் இருக்கும் ஞானக் கதவு பளீரென்று திறக்கும். வேதநாயகனின் திருவருளால் வேதனைகள் யாவும் நீங்கும்; வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

ராஜதந்திரமும் உழைக்கும் குணமும் வரப்பிரசாதம்!

தங்கத்துக்குரிய கிரகமான குருவும் ராஜ்ஜியத்துக்கு உரிய கிரகமான சூரியனும் இணைந்து உதவி புரிய,

பிறந்த தேதி பலன்கள்!

ராகுவின் ஆட்சி பெற்ற 31-ம் தேதியில் பிறந்தவர்கள், சூரியனும் குருவும் ஒன்றாக சேரும் சிவராஜ யோகத்தைப் பெற்றவர்கள் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

இந்தத் தேதியில் பிறந்தவர்கள் அதிகாரப் பதவியும் ராஜ தந்திரமும் பெற்றவர்களாக விளங்குவார்கள். தன்னலம் இல்லாமல் மற்றவர்களுக்குச் சேவை செய்வார்கள். மற்றவர்களை வேலை வாங்கும் பொறுப்பில் இருப்பார்கள். அரசாங்கத்துக்கே ஆலோசனை சொல்லும் ராஜகுருவாகத் திகழ்வார்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். தனிப் பாதையில் செல்வார்கள். மற்றவர்கள் பாதையில் குறுக்கிட மாட்டார்கள். ஆனால், எவரேனும் சீண்டினால் சும்மா விட்டுவிட மாட்டார்கள். வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து பேசுவார்கள். பூகம்பமே ஏற்பட்டாலும் நிலைகுலைய மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பார்கள்.

31-ம் தேதியில் பிறந்தவர்கள் ஆள்பவர்கள் கவனிக்கும்படி நல்ல அறிவுரைகளைத் தருவார்கள். சில தருணங்களில், எதிரிகளின் செயல்பாடுகளும் இவர்களை பிரபலமாக்கும்! ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், லஞ்சம், ஊழல், வரதட்சிணை போன்ற சமூக அவலங்களை அடியோடு அகற்றப் பாடுபடுவார்கள். கடுமையாக உழைத்து பெரிய வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பார்கள்.

தனிமையை விரும்பும் இவர்கள், நண்பர்களை அதிகம் நேசிப்பார்கள். இசைக்கு அடிமையாக இருப்பார்கள். மார்க்கெட்டிங் துறையில் சாதிப்பார்கள். கான்ட்ராக்ட், வழக்கறிஞர், பொருளாதார நிபுணர், விளம்பரத்துறை ஆலோசகர் என்று பணியாற்றுவார்கள். 1, 3, 12, 19, 21 ஆகிய தேதிகளும், வெளிர் நீலம், வெளிர் மஞ்சள், மெரூன் ஆகிய நிறங்களும் சாதகமாக இருக்கும், கோமேதகம் அணிவது விசேஷம்.

பிறந்த தேதி பலன்கள்!

இவர்களிடம் சூட்சுமச் சக்தி நிறைந்து இருக்கும்; புத்திசாலித்தனமும் அதிகம். எனவே, இவர்களுக்கு அதிகாரப் பதவி எளிதாகக் கிடைத்துவிடும். இப்படி பல அனுகூலமான பலன்கள் இருந்தாலும், சூழ்நிலையின் காரணமாகவும், தான் செய்வது எப்படித் தவறாக இருக்க முடியும் என்ற நினைப்பில் தவறு செய்துவிட்டு அவதிப்படுவார்கள். அதேபோல், எங்கு சென்றாலும் இவர்களுக்கு எதிரிகள் உண்டு. சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து, எல்லாவற்றையும் இழந்துவிடுவதும் உண்டு. 26 வயது முதல் 38 வயது வரை உள்ள காலத்தில் இவர்கள் பல தவறான முடிவுகளை எடுக்கக்கூடும்; கவனம் தேவை. 39 வயதுக்குப் பிறகே அனுபவ முதிர்ச்சியின் காரணமாக இவர்கள் பக்குவப்படுவார்கள். அதன் பிறகு இறுதி வரை வசதியோடு வாழ்வார்கள். அடிக்கடி சரும நோய்கள், தொண்டை, மூக்கு, முதுகுத்தண்டு தொடர்பான பிரச்னைகள், கால் வலி, வயிற்றுக் கோளாறுகள் போன்ற ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டாகும்.

இவர்கள், சிவாம்சமும், குருவின் ராஜ அம்சமும், ராகுவின் குண்டலினி அம்சமுமாகத் திகழும் ஒரு கோயிலுக்குச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓர் தலமே திருவாரூர் தியாகராஜர் ஆலயம். தலத்திலேயே ராஜ அம்சம் கொண்ட ஆலயங்கள் இரண்டுதான். ஒன்று நடராஜர். மற்றொன்று தியாகராஜர். மூலவரே உற்சவராக அருள்பாலிக்கும் அரிய தலத்தில் இதுவும் ஒன்று. மேலும் ஒரு ராஜாவுக்கே உரிய அத்தனை உபசாரங்களும் அத்தனை வழிபாடுகளும் தியாகராஜருக்கு உண்டு. இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், ராஜபோக வாழ்க்கை கிடைக்கும்.

இதுவரையிலும் தேதியின் அடிப்படையில் 1 முதல் 31 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களையும் அவர்களுக்கான பலாபலன்களையும் விரிவாக அறிந்தோம். இனி, பிறவி எண் மற்றும் விதி எண் அடிப்படையில், ஒவ்வொருவரும் வழிபட வேண்டிய தலங்கள் குறித்தும், தினமும் அவர்கள் பாராயணம் செய்ய வேண்டிய துதிப்பாடல்களையும் அறிந்துகொள்வோம்.

பிறந்த தேதி பலன்கள்!

 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் பிறந்தவர்களுக்கு... சூரிய பலம் தரும் கோயில்கள்!

பனையபுரம்: இங்கே உறையும் பனங்காட்டீசர், கண்கொடுத்த கடவுளாக வணங்கப்படுகிறார். சென்னை - கும்பகோணம் பாதையில் விழுப்புரத்திலிருந்து வடகிழக்கு திசையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து தொடர்ந்து ஏழு நாள்கள் சூரிய உதயத்தின்போது சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களை, பனங்காட்டீசர் மீது விழச் செய்கிறார். அதே வேளையில் பக்கத்திலுள்ள சத்தியாம்பிகை அம்மன் மீதும் சூரிய கிரணங்கள் விழுகின்றன. 

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சூரியன் நீலமணியால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். சூர்ய தீர்த்தம் உண்டு. ஆதிரத்தினேஸ்வரர், ஆடானைநாதர், ஆகஜேஸ்வரர் என்று பல்வேறு திருப்பெயர்கள் உண்டு. அம்பாள் திருநாமம் அம்பாயிரவல்லி, சினேகவல்லி ஆகியன.

திருப்பரிதி நியமம்: சூரியன் வழிபட்ட தலம். பரிதியப்பர் கோயில் எனப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு செல்லும் பாதையில், உளூர் என்ற ஊரிலிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தல நாயகருக்கு பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர் என்று பெயர்கள். அம்பாள், மங்களநாயகி. சூரிய தீர்த்தமும் உண்டு.

பிறந்த தேதி பலன்கள்!

திருவேதிக்குடி: வேதங்கள் பூஜை செய்ததால் வேதிக்குடி என்றழைக்கப்பட்டது. வேதங்கள் பூஜிக்கும் அழகைக் காண சூரியன் இங்கே வந்தார். தல இறைவன் வேதபுரீஸ்வரர். மங்கையர்க்கரசி என்பது அம்பாளின் திருநாமம். தஞ்சை - திருவையாறு சாலையில் திருக்கண்டியூர் அடைந்து அங்கிருந்து 4 கி.மீ பயணிக்க வேண்டும்.

பலன் தரும் துதிப்பாடல்

பிரச்னைகளிலிருந்து விடுபட 1, 10, 19 மற்றும் 28-ம் தேதிகளில் பிறந்தவர்கள் கீழ்க்காணும் சூரியபகவான் துதிப்பாடலைப் படித்து வழிபட்டு வரம்பெறலாம்.

காசினியிருளை நீக்குங் கதிரொளியாகி எங்கும்
பூசனையுலகோர் போற்றப் புசிப்பொடு சுரத்தைநல்கும்
வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்வந்த
தேசிகா ரெட்சிப்பாய் நீ செங்கதிரவனே போற்றி

 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  மன வலிமை தரும் ஆலயங்கள்

எண் 2-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள் மஞ்சளும் குங்குமமும் மணக்கும் அம்பாள் திருக்கோயிலைத் தரிசிக்கலாம். மேலும், சந்திரன் வழிபட்ட தலங்களுக்கும் சென்று இந்த அன்பர்கள் வழிபட்டு வரம்பெறலாம்.

நீடூர்: மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ளது நீடூர். முனையடுவார் நாயனார் சிவனடியாருக்கு அமுது படைத்த தலம். சந்திரன் பூஜித்த தலம். இறைவன் அருள்மிகு சோமநாதர். அம்பாளின் திருநாமம்  -அருள்மிகு வேயுறு தோளியம்மை.

சோமங்கலம்: சென்னை தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இந்தத் தலத்துக்குச் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சோமங்கலம். இறைவன் அருள்மிகு சோமநாதர் எனும் திருப்பெயரிலும், அம்பிகை காமாட்சியாகவும் அருளும் இந்தத் திருத்தலம், சந்திரன் பூஜித்த இடமாதலால், சந்திரனுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு சென்று வழிபட்டால் மனம் செம்மையாகும்; செயல்கள் வெற்றி அளிக்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

திருப்பழனம்: அமிர்தத்தால் செய்யப்பட்ட லிங்கம் அமைந்த தலம் இது. சந்திரன் இங்கு வந்து வழிபட்டு அருள்பெற்றுள்ளான். இறைவன் - ஆபத்சகாயேஸ்வரர். இறைவி - பிரஹன் நாயகி. தஞ்சாவூரிலிருந்து திருவையாறை அடைந்து, அங்கிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ பயணித்தால், இந்தத் தலத்தை அடையலாம்.

ஓசூர்: பெங்களூருக்கு அருகில் உள்ளது ஓசூர். இவ்வூரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவிலேயே உள்ளது, அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் கோயில். இந்ந ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வருவதால், சிந்தை மகிழ வரமும் வாழ்வும் கிடைக்கும்.

பலன் தரும் மந்திரம்:

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது பிரச்னைகளிலிருந்து விடுபட, கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி அம்பாளை வழிபடுவது விசேஷம்.

பவானீ பாவனாகம்யா பவாரண்ய குடாரிகா
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர் பக்த
  ஸௌபாக்யதாயினே நம:

 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  குருவருள் கைகூடும்

எண் 3-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள் கீழ்க்காணும் திருத்தலங்களைத் தரிசித்து வழிபடுவதால், மலைபோல் வரும் பிரச்னைகளும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகி ஓடும்.

திருப்பூந்துருத்தி: நாவுக்கரசப் பெருமான் வெகுகாலம் திருமடம் அமைத்து தங்கிய தலம். அப்பர், ஞானசம்பந்தருக்காக முத்துச் சிவிகை சுமந்த ஊர். வேறெங்குமில்லாத வகையில் வீணையைக் கைகளில் ஏந்தி நாதப்பிரம்மத்தில் லயிக்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி அருட்காட்சி தரும் அற்புதத்தலம். தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

ஓமாம்புலியூர்: வியாக்ரபாதர் பூஜித்த தலம். சிவபெருமானே குரு தட்சிணாமூர்த்தியாகப் பிரணவத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசம் செய்த தலம். இறைவன் - ப்ரணவபுரீஸ்வரர். அம்பாள் - புஷ்பலதாம்பிகை. அதனாலேயே இத்திருக்கோயிலில் வேறெங்கும் இல்லாத வகையில் மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் குரு தட்சிணாமூர்த்தி உபதேச கோலத்தில் காட்சி தருகிறார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலுக்கு தெற்கே 7 கி.மீ தொலைவில் உள்ளது.

பிறந்த தேதி பலன்கள்!

திருலோக்கி: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை குரு பகவான் வழிபட்டார். இறைவன் அவர் முன் தோன்றி, குரு பகவானின் பாவங்கள் தீர அவரை திருலோக்கி சுந்தரேஸ்வரரை வழிபடச் சொன்னார். குருவும் கைகூப்பி நிற்க, மார்கழி மாதம் திருவாதிரை நாளில் இறைவன் ஆலிங்கன மூர்த்தியாக, அகிலாண்டேஸ்வரியுடன் குருவுக்குக் காட்சி தந்தார். இன்றும் ரிஷபாரூடர் முன்பாக குரு பகவான் கைகூப்பித் தொழுது நிற்பதைக் காணலாம். ஆடுதுறையிலிருந்து தனி வாகனத்தில் செல்லலாம்.

பட்டமங்கலம்: ஈசனே குரு பகவானாகக் காட்சி கொடுத்த தலம். குரு பகவானின் காலடியில் பிரம்மாவை அன்ன பட்சியாகவும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம். இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது.

பலன் தரும் மந்திரம்:

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்பிரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:

 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  நல்லன எல்லாம் கிடைக்கும்!

நான்காம் தேதியில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டுத்தொகை, விதியெண் `நான்கு' வரும் அன்பர்களும் காளிதேவியை வழிபடுவது சிறப்பு. தனியாகவும், சிவாலயங்களில் பரிவார தெய்வமாகவும் காளிதேவி அருளும் ஆலயங்களுக்குச் சென்று, அவளை வழிபடுவதால், அனைத்துத் தடைகள் நீங்கும்; விசேஷ பலன்கள் கைகூடும்.

உறையூர்: திருச்சி நகரில் உள்ள இத்தலத்தில் வெட்டவெளியில் அமர்ந்திருக்கும் வெக்காளி அம்மனை வழிபடலாம். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இந்தக் கோயிலுக்குப்பேருந்து வசதி உண்டு. அம்பாளுக்கு உகந்த நாட்களில், இந்த அம்மனைத் தரிசித்து வழிபட்டு வந்தால், தீவினைகள் யாவும் நீங்கும், சத்ரு பயம் நீங்கும், சந்தோஷம் பெருகும்.

பிறந்த தேதி பலன்கள்!

திருவொற்றியூர்: சென்னையின் வடபுறத்தில் இருக்கும் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலின் உட்பிராகாரத்தில், வடக்கு நோக்கிய வண்ணம், வட்டப்பாறையம்மனாக தனிக்கோயில் கொண்டுள்ளாள், காளிதேவி. இங்குள்ள வட்டப்பாறையின் வடிவமே காளியாக வணங்கப்படுகிறது. இந்தச் சந்நிதியின் குங்குமப் பிரசாதம் விசேஷமானது. இன்கு சென்று அம்பாளைத் தரிசித்து வழிபட்டு வந்தால், நல்லன யாவும் கைகூடும்.

அம்பர் மாகாளம்: மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில் பூந்தோட்டத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது, இந்தத் தலம்.அம்பரன் எனும் அரக்கனை வதம் செய்ததால், இத்தலத்துக்கு அம்பகரத்தூர் என்று பெயர்.

இங்கே, ஸ்ரீகாளகண்டேஸ்வரர் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் காளியின் சந்நிதி அமைந்துள்ளது. இந்த தேவியைக் கண்ணார தரிசித்து, மனதார வழிபட்டு வந்தால், மகத்தான பலன்கள் கிடைக்கும்.

பலன் தரும் துதிப்பாடல்:

மங்கள ரூபிணி
  மதியணி சூலினி
     மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
  சங்கரி செளந்தரியே
கங்கணபாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கெளரிக்ருபாகரி துக்கநிவராணி காமாட்சி

 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  நாராயணரின் திருவருள் கிடைக்கும்!

எண் 5-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள், ஸ்ரீமகாவிஷ்ணு பக்தர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு ஞானமருளிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபடலாம். அவ்வாறான சில திருத்தலங்களை இங்கே காண்போம்.

திருவல்லிக்கேணி: சென்னையில் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதிப் பெருமாள், கேசவ சோமயாஜி எனும் பக்தருக்குக் காட்சிகொடுத்து அருள்பாலித்தார். அத்துடன் அந்த அன்பருக்கு, ஸ்ரீராமானுஜரை மகனாகப் பெறும் பாக்கியத்தையும் வரத்தையும் அருளிய திருத்தலமும் இதுதான். பகவான் கிருஷ்ணர், குடும்ப சகிதமாக அருள்கோலம் காட்டும் திருவல்லிக்கேணிக்குச் சென்று வழிபட்டு வந்தால், வாழ்வு வளம்பெறும்.

பிறந்த தேதி பலன்கள்!

நாச்சியார்கோவில்: கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கு மூலவராக எழுந்தருளியுள்ள திருநறையூர் நம்பியே, திருமங்கை ஆழ்வாருக்கு குரு ரூபமாக பஞ்ச சம்ஸ்காரங்கள் எனப்படும் வைணவ நெறிகளை உபதேசித்தருளினார். 5-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

திருக்கோவிலூர்: விழுப்புரத்திலிருந்து சுமார் 34 கி.மீ தொலைவில் உள்ளது. பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர், எம்பெருமானைப் பாடிப் பரவி அருள்பெற்ற திருத்தலம் இது. அறியாமையும், வறுமையும் நீங்க இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வரலாம்.

ஆழ்வார்திருநகரி: திருநெல்வேலி - திருச்செந்தூர் பாதையில் உள்ளது. பிரம்மா, நம்மாழ்வார் ஆகியோருக்கு ஸ்ரீஆதிநாதர் உபதேசம் அளித்த தலம். இங்கு சென்று வழிபட்டால் மனக்குறைகள் நீங்கும்.

பலன் தரும் துதிப்பாடல்:

வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிவை
பயந்தவனே! எனக்கருள் புரியே!

 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  இந்திர போகம் கிடைக்கும்!

ஆறாம் எண்ணுக்குரியவனான சுக்கிரனின் பிரதான தேவதையாக இந்திரன் விளங்குகிறார். எண் 6-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள், இந்திரன் வழிபட்ட தலங்களைத் தரிசித்து வழிபடுவது, விசேஷம்.

திருநாவலூர்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு வடகிழக்கில், சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள தலம் இது. இங்குள்ள ஸ்ரீபக்தஜனேசுவரர் ஆலயத்தில் மூலவரை வணங்குவதோடு, நவகிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிரே உள்ள சுக்கிர லிங்கத்தையும் (பார்கவ ஈஸ்வரர்) வழிபட்டு வரம்பெற்று வரலாம்.

திருக்காரவாசல்: திருவாரூருக்குத் தெற்கே சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள தலம் இது. இந்திரன் தனது பழி நீங்க, இத்தலத்து இறைவனைப் பூஜித்தான் என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீகண்ணாயிரநாதர் என்பது இறைவனின் திருநாமம். அம்பாள் - ஸ்ரீகயிலாசநாயகி. அருளும் பொருளும் அள்ளி வழங்கும் அற்புத தலம் இது.

பிறந்த தேதி பலன்கள்!

சுசீந்திரம்: நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் சுசீந்திரம். இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள தவம் புரிந்த ஊர்.

இன்றும், இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீதாணுமாலயனுக்கு அர்த்தஜாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம். 6-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள், இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், எதிர்காலம் சிறக்கும்.

கிணார்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து வடகிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் இது. சாப விமோசனம் பெற்ற தேவேந்திரன், மூலவர் ஸ்ரீவீரவனநாதருக்கும் நந்திக்கும் நடுவில், தனது ஐராவதத்தின் மேல் அமர்ந்தபடி தரிசனம் செய்யும் காட்சியை இங்கே காணலாம். இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், இந்திரபோக வாழ்வைப் பெறலாம்.

பலன் தரும் துதிப்பாடல்:

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை 
  ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வர்க்கும் வாக்கிறந்த  
  பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து      
  பவத்தொடக்கை வெல்வாம்

 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  ஏற்றம் தரும் திருத்தலங்கள்!

பொதுவாக ஏழாம் எண்காரர்கள், ஞானமளிக்கும் தலங்களின் இறைவனையும், மகான்களின் ஜீவ சமாதிகளையும் வணங்குவது சிறப்பாகும். அவ்வகையில், எண் 7 -ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள், கீழ்க்காணும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரம்பெற்று வரலாம்.

ஆவுடையார் கோவில்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். மாணிக்கவாசகருக்கு அருள் வழங்கிய ஆத்மநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம், வாழ்வில் ஏற்றங்களை அருள்வது.

பிறந்த தேதி பலன்கள்!

திருப்பெரும்புலியூர்: சிதம்பரம் போலவே வியாக்ரபாதரால் பூஜிக்கப் பட்ட பெருமை கொண்டது, திருப்பெரும்புலியூர். எல்லா சிவ கலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்கும் என்பார்கள். இவ்வூரும் அந்தத் தலத்துக்கு இணையானது. இந்தத் தலத்தின் பெருமான் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். திருவையாறு சென்று, அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தை அடையலாம்.

மன மகிழ்ச்சியும், செயல்கள் சிறக்கவும் 7-ம் எண்காரர்கள், இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

கோவிந்தபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்து, இணையற்ற மகானாக விளங்கியவர் போதேந்திர ஸ்வாமிகள். அவருடைய அதிஷ்டானம் கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சென்று, அமைதியாக ராமநாமம் சொல்லி, தியானம் செய்வது அளவிலா அமைதியைத் தரும்.

பலன் தரும் துதிப்பாடல்:

அப்பர் பெருமான் அருளிய கீழ்க்காணும் பதிகத்தைப் பாடி, அனுதினமும் வழிபட்டுவந்தால், துன்பங்கள் நீங்கி, வாழ்க்கை ஒளிபெறும்.

சொற்றுணை வேதியன் சோதி யானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது  நமசிவாயவே

- அப்பர்

 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  திருமால் திருவருள் கைகூடும்!

எண் 8-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள், எட்டெழுத்து நாயகனாம் பெருமாளை வழிபடுவது சிறப்பு. அதிலும் அவர் சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஆலயங்களைத் தரிசிப்பது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

பிறந்த தேதி பலன்கள்!

ஆவராணி: திருமங்கையாழ்வார் தரிசித்த தலம். இங்கு உறையும் அரங்கனுக்கு ஆபரணதாரி எனும் திருநாமம். இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில், சிக்கலிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருலோக்கி: மகாலட்சுமியின் பிராண சக்தியிலிருந்து வில்வதளங்கள் உருவான தலம். இதே தலத்திலுள்ள சுந்தரேஸ்வரரை தாயார் பூஜித்து, எப்போதும் திருமாலின் திருமார்பில் குடிகொள்ளும் பாக்கியமுற்றாள். வில்வதளங்களால் மகாலட்சுமியை அர்ச்சிக்க, வேண்டுவன எல்லாம் அளிக்கும் அருட்தலம். கும்பகோணத்தி லிருந்து பேருந்து வசதி உண்டு. அல்லது ஆடுதுறையிலிருந்து சூரியனார் கோயில், கஞ்சனூர் வழியாகவும் தனி வாகனம் வைத்துக்கொண்டு செல்லலாம்.

திருக்கடல்மல்லை: சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருக்கோயில் இது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ளது. இந்த ரங்கநாதருக்குப் பாம்புப் படுக்கையில்லை. தரையில்தான் சயனித்திருக்கிறார். நாபிக் கமலமும் அதன் மேல் பிரம்மனும் இல்லை. ஸ்ரீதேவி - பூதேவி இல்லை. இவர் காலடியில் புண்டரீக மகரிஷி மட்டும் உள்ளார். இந்தப் பெருமாளின் ஒரு கை பக்தர்களை நோக்கி ‘வா’ என்றழைப்பது போலிருக்கும். கடலை நோக்கித் தன் பார்வை படும்படியாக சயனித்திருக்கும் கோலம். கடலலைபோல ஆர்ப்பரிக்கும் உள்ளத்துக்கு, கடல் ஆழம் போல அமைதி தரும் பாவனை.

திருக்கோஷ்டியூர்: மதுரை - காரைக்குடி வழியில் திருப்பத் தூருக்குத் தெற்கே சிவகங்கை சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. உரக மெல்லணையான் என ரங்கநாதருக்குப் பெயர். உற்சவர் சௌமிய நாராயணன்.

பலன் தரும் மந்திரம்:

ஆனந்த ரூபே நிஜபோத ரூபே
பிரம்ம ஸ்வரூபே ஸ்ருதி மூர்த்தி ரூபே
சஸாங்க ரூபே ரமணீய ரூபே
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே

- ஸ்ரீரங்கநாத அஷ்டகத்தில் இருந்து...

 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...  சந்தோஷம் அருளும் கந்தன் கோயில்கள்!

ஒன்பதாம் எண்காரர்களுக்கு ஒப்பிலா வரங்களைத் தருவன கந்தனின் திருத்தலங்கள். ஆகவே, எண் 9-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்கள், முருகனின் திருக்கோயில்களைத் தேடிச்சென்று வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழலாம்.

சென்னிமலை: ஈரோடு - கோவை வழியில், ஈங்கூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது சென்னிமலை.குமரன் இங்கே மலைமீது குடிகொண்டுள்ளார். ஆயிரம் படிகளைத் தாண்டி மலையை அடையலாம். வாகன வசதியும் உண்டு. அக்னி ஜாத சுப்ரமணியர் என்ற திருப்பெயர் இந்த மூலவருக்கு. சஷ்டி மற்றும் கிருத்திகை தினங்களில், விரதம் இருந்து இந்தத் தலத்துக்குச் சென்று கந்தப்பெருமானை வழிபட்டு வந்தால், வினைகள் யாவும் நீங்கும்.

பிறந்த தேதி பலன்கள்!

திருப்போரூர்: சூரபதுமனை எதிர்த்து கந்த பெருமான் போர்புரிந்த களமே திருப்போரூர் என்பார்கள். சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். 9-ம் எண்காரர்கள், வாழ்வில் கஷ்டங்கள் நீங்க, இந்தத் தலத்துக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வரலாம்.

தென்சேரிகிரி: முருகப் பெருமான் தனது தந்தை சிவனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலம் சுவாமிமலை என்பதை அறிவோம். தென்சேரிகிரி, தந்தை சிவபிரான் குருவாக அமர்ந்து முருகனுக்கு உபதேசம் செய்த தலம் ஆகும். சூரபத்மனை அழிப்பதற்காக மந்திரத்தை உபதேசித்ததால் மந்திராசல மூர்த்தி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார் இந்த இறைவன். பொள்ளாச்சி - திருப்பூர் சாலையில் சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ள திருக்கோயில் இது.

அற்புதமான இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், மனத் துயரங்கள் நீங்கும்; கல்வி -கலைஞானம் கைகூடும்.

பலன் தரும் துதிப்பாடல்:

ஆடும் பரிவேலணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவிற்
சாடும் தனியானை சகோதரனே

- இப்பாடலைப் பாடி கந்தனை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.