லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

வசந்தம் தொடங்கும் தருணமிது!
மேஷம்
: விட்டுக்கொடுத்து வெல் பவர்களே! கேது லாப வீட்டில் நிற்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர் களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். திருமணம் கூடி வரும். மே 14-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், அரசு காரியங்கள் முடியும்.  முன்கோபத்தால் பகை உண்டாகும். இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிமுகம் செய்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் வீசும் வேளையிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

திருப்பங்கள் உண்டாகும் வேளையிது!
ரிஷபம்:
கடந்து வந்த பாதையை மறவாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகள் இருந்தாலும் ஓய மாட்டீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தை விற்று, பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். ஆடை, அணிகலன் சேரும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

வெற்றி கிட்டும் வேளையிது!
மிதுனம்:
மனசாட்சிக்குப் பயந்தவர் களே! 3-ம் இடத்தில் நிற்கும் ராகு உங்களைப் பரபரப்பாக செயல்பட வைத்து பல விஷயங்களையும் விரைந்து முடிக்க வைப்பார். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை அமையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

முடிவுகளால் வெல்லும் காலமிது!
கடகம்:
கடமை தவறாதவர்களே! சூரியனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணவரவு அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ராகு, கேது சாதகமாக இல்லாததால், விமர்சனங்கள் வரும். அதைக் கண்டு அஞ்சாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விவேகமான முடிவுகளால் வெல்லும் காலமிது.'

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

புதிய பாதை தென்படும் வேளையிது!
சிம்மம்:
கால நேரம் தவறாதவர் களே! குரு வலுவாக இருப்பதால், எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். புது பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால் மன இறுக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். புதிய பாதை தென்படும் வேளையிது. 

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

தொட்டது துலங்கும் தருணமிது!
கன்னி:
மகிழ்வித்து மகிழ்பவர்களே! சனி வலுவாக இருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வருமானம் உயரும். வருங்காலத்துக்கு உதவக்கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். ஜென்ம குரு தொடர்வதால், மனதில் இனம்புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். தொட்டது துலங்கும் தருணமிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

முயற்சி வெல்லும் காலமிது!
துலாம்:
நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே! லாப வீட்டில் ராகு நிற்பதால் நினைத்ததை முடிப்பீர்கள். இழுபறியான வேலைகள் உடனே முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனியால் சங்கடங்கள் தொடரும். குரு 12-ம் இடத்தில் மறைந்திருப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சிக்கனம் தேவைப்படும் காலமிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

சாதிக்கும் வேளையிது!
விருச்சிகம்:
யதார்த்தமாகப் பேசி சாதிப்பவர்களே! குரு பகவான் வலுவாக இருப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். உற்சாகம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆன்மிக அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு அமையும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமணத் தடை நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் பிரச்னை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். எதிர்ப்புகளை நீந்திக் கடந்து சாதிக்கும் வேளையிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

பொறுப்புகள் தேடி வரும் தருணமிது!
தனுசு:
வாழ்க்கைப் பாடத்தைக் கற்றவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடு வீர்கள். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்க்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ராசிநாதன் குரு 10-ம் இடத்தில் நீடிப்பதால் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு, தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. புதிய பொறுப்புகள் தேடி வரும் தருணமிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

சொல்லைக் காப்பாற்றும் நேரமிது!
மகரம்:
வெளிப்படையாகப் பேசுபவர்களே! ராசிநாதன் சனி வலுவாக இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். முன் கோபம் விலகும். உங்கள் பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்பார்க்காத வகையில் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வீடு கட்டுவீர்கள். செவ்வாய் 5-ம் இடத்தில் நிற்பதால், பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

ஆசைகள் நிறைவேறும் தருணமிது!
கும்பம்:
கனிவானப் பேச்சில் அனைவரையும் கவர்பவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதிப்பீர்கள். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். நீண்ட காலமாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். குரு பகவான் 8-ம் இடத்தில் மறைந்திருப்பதால், அவ்வப்போது வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் தருணமிது.

ராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

தன்னடக்கத்தால் சாதிக்கும் வேளையிது!
மீனம்:
சுற்றத்தாரை அனுசரித்துச் செல்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்களுக்குக் கொடுத்து உதவுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை முன்னேற்றம் தரும். வெளியூர் பயணங் களால் புது அனுபவம் உண்டாகும். கேது 12-ம் இடத்தில் மறைந்திருப்பதால், சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். தன்னடக்கத்தால் சாதிக்கும் வேளையிது.