லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

புதிய முயற்சிகளில் வெற்றி!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைமேஷம்: மற்றவர்களுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகச் செல்ல நினைத்த சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சூரியனும், செவ்வாயும் சாதகமில்லாமல் இருப்பதால் தலைவலி, ஹார்மோன் பிரச்னைகள் வந்துபோகும். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். புதன் சாதகமாக இருப்பதால் விருந்தினர்களின் வருகையால் வீடு, களை கட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் வேளையிது.

எடுத்த காரியத்தில் வெற்றி!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


ரிஷபம்: சிந்தனைத்திறனும், செயல்திறனும் கொண்டவர்களே! புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய, புதிய உதவிகள் கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்குப் பிடிக்காமல் போகும். செவ்வாய் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயமுண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

சொத்துச் சிக்கல் தீர வழி பிறக்கும்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைமிதுனம்: எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்பவர்களே! ராசிநாதன் புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் நல்ல அனுபவம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளிடையே வீண் பகை, சொத்துச் சிக்கல் வரக்கூடும். கவனமாக இருப்பது நல்லது.  பூர்வீகச் சொத்திலிருந்த சிக்கல்களைத் தீர்க்க வழி காண்பீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நேரமிது.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


கடகம்: பிறந்த மண்ணையும் பேசும் மொழியையும் நேசிப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மனப்போராட்டங்கள் ஓயும். சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கனிவாகப் பேசி, கடினமான வேலைகளைக்கூட முடிப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.  வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள்.

பணியில் கூடுதல் கவனம்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைசிம்மம்: நல்லது கெட்டது நான்கையும் அறிந்தவர்களே! சூரியனும், செவ்வாயும் 10-ம் இடத்தில் நிற்பதால் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசியலில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... நல்ல பதில் வரும். அயல்நாடு பயணம் அமையும். எதிலும் ஆர்வமில்லாத நிலை, சகோதரப் பகை நீங்கும். சின்னச் சின்ன விஷயங்கள் கூடத் தள்ளிப்போனதே... இனி முழுமையடையும். சுக்கிரன் 8-ம் இடத்தில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதியுண்டாகும். ஆனால், உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நினைத்ததை முடிக்கும் வேளையிது.

மாறுபட்ட அணுகுமுறையால் லாபம்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


கன்னி:
கள்ளங்கபடமில்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர்களே! சுக்கிரன் சாதக மாக இருப்பதால், பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புதன் 8-ம் இடத்தில் மறைந்திருப்பதால், அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். வி.ஐ.பி-க்களுக்கு நெருக்க
மாவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரத் தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.  சகிப்புத் தன்மையால் முன்னேறும் தருணமிது.

வியாபாரத்தில் கணிசமான லாபம்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைதுலாம்:
சமயோஜித புத்தி அதிகமுள்ளவர் களே! சுக்கிரன் 6-ம் இடத்தில் இருப்பதால், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைப் போராடிப் பெறுவீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் வீண் சண்டை சச்சரவுகள் வரும் வாய்ப்புள்ளது. வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.  ராசிக்கு 7-ம் இடத்தில் புதன் சாதகமாக இருப்பதால், நட்பு வட்டாரம் விரிவடையும்.

மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


விருச்சிகம்:
போராட்டங்கள், ஏமாற்றங் களைக் கண்டு புலம்பாதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் கொஞ்சம் போராடிச் சேர்ப்பீர்கள்.  தொண்டை வலி, கழுத்து வலி, வேலைச்சுமை வந்து போகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் வேளையிது.

சிக்கல்கள் தீரும்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைதனுசு: ஊரே கூடி எதிர்த்தாலும், கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே! சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால், வாகன வசதி பெருகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்பார்கள். சொத்தை விற்று, பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்துச் சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். பழைய சிக்கல்கள் தீரும் தருணமிது.

புதிய நட்பால் முன்னேற்றம்!   

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


மகரம்:
ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களே! சுக்கிரன் 3-ம் இடத்தில் நிற்பதால், விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 5-ம் இடத்தில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமாகச் செல்வதால், தைரியமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். புதிய நட்பால் முன்னேறும் காலமிது.

சகோதர அன்பு வளரும்! 

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைகும்பம்: பட்டம் பதவி, பணத்துக்கெல்லாம் மயங்காதவர்களே! சுக்கிரன் 2-ம் இடத்தில் நிற்பதால், அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். ராசிக்கு 4-ம் இடத்தில் சூரியன் நிற்பதால் மனக்குழப்பங்கள், அலட்சியம் விலகும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சகோதர, சகோதரிகளால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறும் வேளையிது.

வசதி வாய்ப்புகள் பெருகும்!

ராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


மீனம்: நெருக்கடி நேரத்திலும் நிதானம் தவறாதவர்களே! சூரியனும், செவ்வாயும் 3-ம் இடத்தில் நிற்பதால் எதிர்த்தவர்கள் நண்பர் களாவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். மனதிலிருந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். சோர்வு நீங்கி, சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது.