தொடர்கள்
Published:Updated:

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை



வாக்கு தவறாதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சூரியன் 2-ல் நிற்பதால், வார்த்தை களில் நிதானம் தேவை. 26-ம் தேதி முதல் செவ்வாய் 3-ல் வலுவாக இருப்ப தால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில், ஒரு பகுதியைக் கட்டி முடிப்பீர்கள். குரு 6-ல் நீடிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட காரியங்களைப் பேசி முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங் களைச் சரி செய்வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில், வேலைச் சுமை குறையும். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகளுடன் இருந்து வந்த பனிப் போர் விலகும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும் காலம் இது.

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

அனுபவ அறிவு நிரம்பியவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதுப் பதவிகள் தேடி வரும்.

ராசிக்குள் நிற்கும் சூரியனால், தூக்கமின்மை, கோபம், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். குரு பகவான் 5-ல் இருப்பதால், வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்ப தால், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

கண்டகச் சனி தொடர்வதால், வியா பாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்க வும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். அதிகாரி களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கண்டிப்பாக இருப்பது அவசியம்.

புதிய பதவிகள் தேடி வரும் தருணம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை



நேரங்காலம் பார்க்காமல் உழைப்ப வர்களே! சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வீட்டை அழகுபடுத்துவீர்கள். உங்களை அலட்சியம் செய்தவர்களும், இனி உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், அரசு காரியங்கள் இழுபறியாகும். 26-ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் அமர்வதால், உடல் அசதி, சோர்வு, தூக்கமின்மை நீங்கும். முன்கோபம் அதிகரிக்கும்.

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிரியமான வர்களின் சந்திப்பு நிகழும். சனி 6-ல் வலுவாக இருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்று மொழி பேசு பவர்களால் நன்மை உண்டாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் கடந்து லாபம் சம்பாதிப்பீர்கள். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள்.உத்தியோகத்தில், தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். கலைத்துறையினரே! உங்கள் கற்பனைத் திறன் வளரும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் வேளை இது.

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

பொறுமையுடன் இருந்து சாதிப்பவர்களே! தனாதிபதி சூரியன் 11-ம் வீட்டில் இருப்பதால், அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

26-ம் தேதி முதல் யோகாதிபதி செவ்வாய் 12-ல் மறைவதால், அடி வயிற்றில் வலி, மறைமுக எதிர்ப்புகள், வீண் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். சொத்து பிரச்னை தலை தூக்கும். புதன் சாதகமாக இருப்பதால், வீண் செலவுகள், டென்ஷன் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். குரு 3-ல் இருப்பதால், அவ்வப்போது அலைச்சல் ஏற்படும்.

வியாபாரத்தில், வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில், அலட்சியப் போக்கு மாறும். எதிர்பார்த்த புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் வந்து சேரும். கலைத் துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

திடீர்த் திருப்பங்கள் ஏற்படும் தருணம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை



மனதில் உறுதி கொண்டவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்ப தால், அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். வெளிநாட்டுப் பயணம் கூடி வரும்.

26-ம் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். முன்பணம் கொடுத்து வைத்திருந்த சொத்துக்கு, மீதிப் பணத்தையும் தயார் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். சுக்கிரன் 30-ம் தேதி வரை 8-ல் நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். சனி 4-ல் நிற்பதால், ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். குருபகவான் 2-ம் வீட்டில் நிற்பதால், நினைத்த காரியம் முடியும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். பெரிய அளவில் யாருக்கும் முன்பணம் தர வேண்டாம். உத்தியோகத்தில், மூத்த அதிகாரி களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.  கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

திடீர் யோகம் கைகூடும் வேளை இது.

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

மனச்சாட்சிக்கு மதிப்பளித்து நடப் பவர்களே! சூரியன் 9-ல் இருப்பதால், தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 10-ல் அமர்வதால், அப்போது முதல் தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

கமிஷன், ரியல் எஸ்டேட் வகை களால் லாபம் உண்டாகும். 30-ம் தேதி வரை சுக்கிரன் 7-ல் அமர்ந்திருப்பதால், பணம் வரும். புதுத் தெம்பு பிறக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சனி பகவான் 3-ல் வலுவாக இருப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். ஜன்ம குரு தொடர்வதால், உடல்நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருள் களைக் கவனமாகப் பாதுகாக்கவும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வரும் மோதல்கள் நீங்கும். கலைத் துறையினரே! புதுமையான படைப்பு களால் பேசப்படுவீர்கள்.

புகழும் பாராட்டும் பெறும் தருணம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை



மென்மையான குணம் கொண்டவர்களே! சூரியன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள், தலைச்சுற்றல், கண் வலி வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

26-ம் தேதி முதல் செவ்வாய் 9-ல் அமர்வதால், வீண் செலவுகள் குறையும். வழக்குகள் சாதகமாகும். சொத்து வாங்குவது விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். 30-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இல்லாததால், வாகன விபத்து, டென்ஷன், முதுகுவலி, கண்வலி, சளித்தொந்தரவு வந்து செல்லும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் உயரதிகாரிகள் உங்களைக் கடிந்து பேசினாலும், அன்பாக நடந்துகொள்வார். கலைத் துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

தன் கையே தனக்குதவி என்று உணரும் நேரம் இது.

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சீர்திருத்தச் சிந்தனை உள்ளவர் களே! ராசிநாதன் செவ்வாய் 26-ம் தேதி முதல் 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், முதுகு வலி, வயிற்றுக் கடுப்பு, சிறுசிறு விபத்துகள் ஏற்படக் கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் ஏற்படும். 30-ம் தேதி வரை சுக்கிரன் 5-ல் இருப்பதால், பெரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிக்கல்கள் தீரும்.

குடும்பத்தில் மதிப்புக் கூடும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சிந்திப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். 26-ம் தேதி வரை புதன் 6-ல் மறைந்திருப்பதால், களைப்பு, நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். 27-ம் தேதி முதல் புதன் சாதகமாவதால், உறவினர் களிடையே உங்கள் மதிப்பு உயரும். குரு லாப வீட்டில் தொடர்வதால், பணவரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக் கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத் துறையினரே! வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

லட்சியத்தில் வெற்றி அடையும் தருணம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை



தர்மத்தில் இருந்து தவறாதவர்களே! சூரியன் 6-ல் இருப்பதால், எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. 26-ம் தேதி முதல் செவ்வாய் 7-ல் அமர்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு, மனை வகையில் ஆதாயம் உண்டாகும். சகோதரியின் திருமணம் கூடி வரும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணை வழியில் நன்மைகள் நடக்கும். 26-ம் தேதி வரை புதன் 5-ல் இருப்பதால், உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். 27-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவ தால், உறவினர்களுடன் மனஸ்தாபம், தந்தைக்கு  மருத்துவச் செலவுகள் வந்து போகும். குரு 10-ல் தொடர்வ தால், சில நேரங்களில் ஏமாற்றங்கள் ஏற்படும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! தடைகள் நீங்கும்.

அனுபவத்தால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

தோல்வி கண்டும் துவளாதவர்களே! சூரியன் 5-ல் நிற்பதால், முன்கோபம், மனக்குழப்பம், அடிவயிற்றில் வலி வந்து போகும். கர்ப்பிணிகள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 6-ல் அமர்வதால், பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாகும்.

தாய்வழி உறவினர்களிடையே மரியாதை உயரும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், செல்வாக்கு, திடீர்ப் பணவரவு உண்டாகும். கண் வலி, காதுவலி நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால், உங்கள் அறிவால் சாதிப் பீர்கள். நீண்டநாள்களாகச் சந்திக்க நினைத்த உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடை பெறும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில், உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் தடைகள் ஏற்படும்.

சாதிக்கத் தொடங்கும்  தருணம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை



தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! சூரியன் 4-ல் இருப்ப தால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வீடு, மனை வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டு.

குரு பகவான் 8-ல் தொடர்வதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.

வியாபாரத்தில் அதிரடியான செயல்பாடுகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத் துறையினரே! வேற்றுமொழி வாய்ப்பு களால் புகழடைவீர்கள்.
 
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும் நேரம் இது.

ராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

உதவும் மனப்பான்மை மிகுந்தவர் களே! உங்கள் ராசிக்குச் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

சூரியன் 3-ல் நிற்பதால், எதிர்த்தவர்கள் பணிந்து செல்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். 26-ம் தேதி முதல் செவ்வாய் 4-ல் அமர்வதால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். புதன் சாதகமான நட்சத் திரங்களில் செல்வதால், உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். பணப் புழக்கம் உயரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், செயலில் வேகம் தேவை. கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரும்.

அதிரடி முடிவுகளால் சாதிக்கும் காலம் இது.