Published:Updated:

பரணி

பரணி

பரணி
பரணி

நீங்கள் செய்யும் தொழிலில் விசேஷ வளர்ச்சி கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளால் மேன்மை அடைவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு, உங்களின் நண்பர்கள் பக்கபலமாக இருந்து, உதவி செய்வார்கள். வாழ்க்கைத் துணைவரும் வேலையாட்களும் ஆதரவாகச் செயல்படுவார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்களை விட அதிக வயதுக்காரர்களால் நன்மைகள் கிடைக்கும். கறுப்பு மற்றும் கருநீலப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களும் லாபம் தருவதாக அமையும். 2012 மே மாதம் 17-ஆம் தேதி முதல் 2013 மே மாதம் 30-ஆம் தேதி வரை பொருளாதார நிலையில் வளர்ச்சியுண்டு. வீட்டில் திருமணம் முதலான சுபகாரியங்கள் வெகுசிறப்பாக நடந்தேறும். பிள்ளைகளால் உங்களுக்கு நிம்மதியும் பெருமையும் கிடைக்கும்.

##~##
இந்த நட்சத்திரத்தின் தேவதை தர்மதேவன். அனுதினமும் இவரை தியானிப்ப துடன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையை வழிபட்டு வருவதாலும் இன்னல்கள்  நீங்கும்; நன்மைகள் உண்டாகும்.

வழிபட வேண்டிய தலம்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம். இங்கே, ஸ்ரீஞானாம்பிகையும் ஸ்ரீபட்டீஸ்வரரும் அருள் பாலிக்கும் திருக்கோயிலில் ஸ்ரீதுர்காதேவி தரிசனமும் விசேஷம். பரணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய ஆலயம் இது.

பரணி

தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைதீர்த்து, அவர்களது வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்த்தும் தேவி, பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை. செவ்வரளி,  ரோஜா, செம்பருத்தி ஆகிய பூக்களால் இந்த தேவியை அர்ச்சித்து, ஒன்பது நெய்தீபங்கள் ஏற்றி வழிபட்டால், வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவு நிலை மாறி, லாபம் கொழிக்கும் என்கின்றனர்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்தில் நடைபெறும் ராகு கால சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வணங்குவதும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

தொடர்ந்து எட்டு வாரங்கள் ஸ்ரீதுர்கா தேவிக்கு அர்ச்சனை செய்து, ஒன்பதாவது வாரத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத் தடை கள் நீங்கும்; விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். இங்கு வந்து வழிபட்டால், ராகு தோஷமும் விலகும்; சந்தோஷம் பெருகும் எனப்போற்றுகின்றனர் பக்தர்கள்!

நட்சத்திர ஸ்லோகம்

பரணி