Published:Updated:

கிருத்திகை

கிருத்திகை

கிருத்திகை
கிருத்திகை

பொருளாதார ரீதியில் ஏற்றம் காண்பீர்கள். பொறாமைக்காரர்களால் தொழில் ரீதியாகச் சில பிரச்னைகளைச் சந்தித்தாலும் அதனைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 10.10.2012 வரை எதிர்ப்புகள் இருக்கும். ஆனாலும் உத்தியோகம் மற்றும் தொழிலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் செல்வ நிலையில் அபிவிருத்தி, நூதன பொருட்சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. 5.11.2013 முதல், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை உயரும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். 11.10.2012 முதல் நட்சத்திரப்படியும் ராசிப்படியும் சனி அனுகூலமாக இருப்பதால் எங்கும் எதிலும் வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை.

##~##
இந்த நட்சத்திரத்தின் தேவதை அக்னி பகவான். கிருத்திகை  நட்சத்திரக்காரர் கள், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னிபுரீஸ்வரரை வணங்குவதும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதும், அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோமத்தில் பங்கேற்பதும், ஹோமம் நடத்துவதும் கூடுதல் பலனைத் தரும்!

வழிபட வேண்டிய தலம்

திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு . இங்கு ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர், ஸ்ரீகொள்ளிக்காடேஸ்வரர். அம்பாள் - ஸ்ரீமிருதுபாத நாயகி. அதாவது, பஞ்சின் மெல்லடியாள் எனப் போற்றுகின்றனர்.

கிருத்திகை

இந்தத் தலத்தின் சிறப்பு, ஸ்ரீபொங்கு சனைச்சரர் இங்கே தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சனி பரிகார க்ஷேத்திரமாகப் போற்றப்படும் இந்தத் திருத்தலத்துக்கு, சனிக்கிழமைகளில் சென்று வழிபாடு செய்வது, மிகுந்த நன்மை பயக்கும்!

சனிக் கிரக தோஷம் உள்ளவர்கள், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், அந்த நாளில் இங்கு வந்து, நல்லெண்ணெய், எள்ளு, உளுந்து ஆகிய வற்றை வைத்து, இறைவனுக்கு ஊமத்தம்பூ மாலை சார்த்தி, மூன்று அல்லது ஒன்பது எள் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!

பாடல் பெற்ற தலமான திருக்கொள்ளிக்காடு திருக்கோயிலுக்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, பொங்கு சனி பகவான் சந்நிதிக்கு முன்னே, சனிக் கிரக சாந்தி ஹோமம் செய்து வழிபட்டால், வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கப் பெற்று, நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

நட்சத்திர ஸ்லோகம்

கிருத்திகை