Published:Updated:

ரோகிணி

ரோகிணி

ரோகிணி
ரோகிணி

டுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விளையாட்டு முதலான போட்டிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும்  உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் 4.11.2013 வரை பயணத்தின்போது கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள், எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

எவரை நம்பியும் எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். 5.11.2013 முதல் திடீர் பொருள் வரவு உண்டாகும். வீட்டில், சுப காரியங்கள் நிகழும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் உதவுவார்கள். தெய்வப் பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்.

##~##
இந்த நட்சத்திரத்தின் தேவதை பிரம்மதேவன். தினமும் இவரை தியானிப் பதுடன், திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மா மற்றும் கொடுமுடி சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரம்மதேவனை தரிசித்து வழிபட்டு வருவதால், நிம்மதியும் பதவி உயர்வும் பெறலாம்.

வழிபட வேண்டிய தலம்

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து வடக்கில் சுமார் 1 கி.மீ. தூரம் பயணித்தால், ஸ்ரீவேதநாராயண பெருமாள் கோயிலை அடையலாம். இங்கே மூலவராக அழகு ததும்பும் கோலத்தில் ஸ்ரீவேத நாராயண பெருமாள் வீற்றிருந்தாலும், பிரம்மா கோயில் என்றே அழைக்கின்றார்கள் பக்தர்கள்!

ரோகிணி

தமிழகத்தில், ஸ்ரீபிரம்மதேவன் தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் தலங்கள் வெகு குறைவு. திருச்சி உத்தமர்கோவில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயில், கொடுமுடி சிவாலயம் ஆகிய தலங்களைப் போல், இந்தத் தலத்திலும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபிரம்மா.

ரோகிணி நட்சத்திர நாளில், இங்கு வந்து ஸ்ரீபிரம்மாவையும் ஸ்ரீவேத நாராயண பெருமாளையும் வணங்கி வழிபடுவது சிறப்பு. அந்த நாளில், விரதமிருந்து, ஸ்ரீபிரம்மாவுக்கு நைவேத்தியம் படைத்து வணங்கினால், சகல பாவங்களும் விலகும்; கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

அதேபோல், பக்தர்கள் தங்களின் ஜாதக நகலை எடுத்து வந்து, இங்கே யுள்ள ஸ்ரீபிரம்மாவின் திருப்பாதத்தில் வைத்து மனதாரப் பிரார்த்தித்தால், சகல தோஷங்களும் விலகி, வாழ்வில் நல்லதொரு திருப்பம் ஏற்பட்டு, வாழ்வாங்கு வாழலாம் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்!

நட்சத்திர ஸ்லோகம்

ரோகிணி