Published:Updated:

புனர்பூசம்

புனர்பூசம்

புனர்பூசம்
புனர்பூசம்

துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன உறுதியுடன் செயல்படு வீர்கள்.  எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிலபுலன்களின் சேர்க்கை அதிகரிக்கும்; லாபம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் 4.11.2013 - வரையிலான காலகட்டத்தில், வெளிநாட்டுத் தொடர்புகளால் அதிகம் பலன் பெறுவீர்கள். நூதனமான பொருட்களை வாங்குவீர்கள். வேற்று இனத்தவர் தேடி வந்து உதவுவார்கள். பயணங்கள் வெற்றி தரும். ஆராய்ச்சியாளர்களுக்குப் பொருளும் புகழும் சேரும்.  

5.11.2013 முதல் இந்த சனிப்பெயர்ச்சியின் நிறைவு வரை, உழைப்பாலும் திறமையாலும் முன்னேறுவீர்கள். கொடுக்கல் - வாங்கலும் உங்களுக்கு லாபம் தருவதாக அமையும்.

##~##
இந்த நட்சத்திரத்துக்கான தேவதை புனர்வசு தேவி எனும் அதிதி. புனர்பூச நட்சத்திரக்காரர்கள், திருக்கருகாவூர் சென்று ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகையைத் தரிசித்து வழிபட்டு வருவதால், சிறந்த பலன்களைப் பெறலாம்.

வழிபட வேண்டிய தலம்

ஞ்சாவூர், பாபநாசத்துக்கு அருகில் உள்ளது திருக்கருகாவூர். கருணை நாயகியாம் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை குடியிருக்கும் ஒப்பற்ற திருத்தலம் இது. திருமணத் தடையால் கலங்குபவர்கள், பிள்ளைச் செல்வம் இல்லையே

புனர்பூசம்

என மருகுபவர்கள் இங்கு வந்து, ஸ்ரீவிநாயகருக்கும் ஸ்ரீசிவனாருக்கும் தலா ஒரு விளக்கு... ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகைக்கு ஒன்பது விளக்குகள்... ஆக மொத்தம் 11 நெய் விளக்குகள் ஏற்றிவைத்து, வலம் வந்து வழிபட, தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். விரைவில், வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்!

வியாபாரத்தில் நஷ்டம் எனக் கலங்கித் தவிப்பவர்கள், புதிதாகத் தொழில் துவங்க நினைப்பவர்கள், உத்தியோகத்தில் உயர்வு பெற முனைவோர் ஆகியோர், ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால், வியாபாரம் செழிக்கும்; லாபம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து பூஜித்த வெண்ணெயை கர்ப்பிணிகள் தங்களின் வயிற்றில் தடவிக் கொண்டு அவளை மனதாரப் பூஜித்து வந்தால், சுகப்பிரசவம் நிகழும்; குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறந்து வளர்வார்கள் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பெண்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது புனர்பூச நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்குங்கள்; நல்லது நடக்கும்!

நட்சத்திர ஸ்லோகம்

புனர்பூசம்