மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைமேஷம்:
ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கலங்காதவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், எல்லா பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தடைகளைத் தாண்டி சாதிக்கும் நேரமிது.

மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை


ரிஷபம்: நினைத்ததை முடிக்கும் மனோசக்தி கொண்டவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், திடீர்ப் பயணங்கள் ஏற்படும். டி.வி, ஃப்ரிட்ஜ் புதிதாக வாங்குவீர்கள். சிலர் வீடு, மனை வாங்குவார்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிட்டும். புதன் ராசிக்குள் நிற்பதால் அழகு, இளமைக் கூடும். பழைய சொந்த பந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தேங்கிக்கிடந்த பணிகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். மனநிறைவுடன் காணப்படும் காலமிது.

எதிர்ப்புகள் அகலும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைமிதுனம்:
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு வலுவாக நீடிப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். உடல் உஷ்ணத்தால் அவஸ்தை ஏற்படலாம். சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண்வலி, சின்ன சின்ன நெருப்புக் காயங்களெல்லாம் வந்து நீங்கும். பிள்ளைகளின் தேவை யறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை


கடகம்:
ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்ந்தவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், உறவினர்களின் சுப காரியங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். அவர்களின் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். 3-ம் வீட்டில் குரு இருப்பதால் கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை.  சூரியன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சம்பள உயரும்.

உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைசிம்மம்:
நம்பிக்கையுடன் போராடி முதலிடம் பிடிப்பவர்களே! செவ்வாயும், ராசிநாதன் சூரியனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுக்கிரன் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வியாபார ரீதியாகப் பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தொட்டது துலங்கும் நேரமிது.

பணப்பற்றாக்குறை தீரும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை


கன்னி: தன் உழைப்பில் மற்றவர் களை வாழ வைப்பவர்களே! ராசிநாதன் புதன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணப்பற்றாக்குறை தீரும். வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். புறநகரில் இடம் வாங்குவதற்கான முயற்சிகள் பலிதமாகும். ஜென்ம குரு நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். திட்டமிட்டுச் செயல்படவேண்டிய நேரமிது.

வீடு, மனை அமையும் வாய்ப்பு!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைதுலாம்:
எதிலும் புதுமையை விரும்புபவர்களே! ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். மனைவி வழியில் உதவிகள் கிட்டும். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், ஒருபக்கம் செலவினங்கள் இருந்தாலும், மற்றொருபக்கம் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமைய வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். ஆனால் 8-ம் வீட்டில் நிற்கும் சூரியனால் எரிச்சல், படபடப்பு, மனைவியுடன் மனஸ்தாபம் போன்றவை வரக்கூடும். அக்கம்பக்கத்திலிருக்கும்  வீட்டார் ஆதரவு பெருகும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

உத்தியோகத்தில் மனக்கசப்புகள் நீங்கும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை


விருச்சிகம்:
கடுமையாகப் பேசினாலும் ஆழ்மனதில் நேசிப்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், நட்பு வட்டாரம் விரியும். பழைய நண்பர்களும் தேடி வருவார்கள். ராசிநாதன் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால், கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். கவனமாயிருங்கள். ஆனால், 11-ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரியிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

போட்டித் தேர்வில் வெற்றி!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைதனுசு: விருப்புவெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். புது வேலை அமையும்.  போட்டித் தேர்வில் வெற்றி உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். பணபலம் கூடும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். மேலதிகாரியைப் பற்றி, சக ஊழியர்களிடம் விமர்சனம் செய்ய வேண்டாம்.

தன்னம்பிக்கை பெருகும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை


மகரம்: தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! ராசிநாதன் சனி பகவான் வலுவாக இருப்பதால், தடைகளும், ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை நல்லவிதமாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சகோதரர்களுக்கிடையே மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும். வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். சூரியன் 5-ல் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.

மருத்துவ ஆலோசனை முக்கியம்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைகும்பம்:
ஆர்ப்பாட்டமில்லாமல் சாதித்துக் காட்டுபவர்களே! 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் மனக்குழப்பங்கள், அலட்சியம் விலகும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 5-ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படும்  காலமிது.

வரவேண்டிய பணம் வந்து சேரும்!

ராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை


மீனம்:
பிறர் சொத்துக்கு ஆசைப்படாத வர்களே! 12-ம் வீட்டில் கேது மறைந்திருப்பதால், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். ஆனால், ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் வேற்றுமொழி, மதத்தவர்களின் நட்பால்
சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் வந்து சேரும். தடைபட்ட பணிகள் முழுமையடையும். வி.ஐ.பி-க்களின் சந்திப்பால் உதவி கிடைக்கும்.  வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் லாபம் உண்டு.