Published:Updated:

மகம்

மகம்

மகம்
மகம்

புதிய சொத்துக்கள் சேரும் தருணம் இது. பெற்றோர் மற்றும் உடன்பிறந்த வர்கள் உதவுவார்கள். தொலைதூரத் தொடர்பால் பயன் உண்டு. இன்ஜினீயர்கள் மற்றும் இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல், வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டு. பயணத்தால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பிற மொழி மற்றும் இனத்தவரால், ஆதாயம் பெறுவீர்கள். போட்டி மற்றும் பந்தயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் முன்னேற்றம் உண்டு.

##~##
5.11.2013 முதல் பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவர்களால் பெருமையும் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் கவனமாக இருங்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

மக நட்சத்திரத்திற்கான தேவதை பித்ருதேவதைகள். இந்த நட்சத்திரக்காரர்கள் சுக்ர வழிபாடு செய்வது சிறப்பு. சுக்கிர பகவானுக்கு உரிய பரிகாரத் திருத்தலம், ஸ்ரீரங்கம். இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், சுக்கிர பலம் கைகூடும்!

வழிபட வேண்டிய தலம்

மகம்

யோத்தியில், தங்களது இஷ்வாகு குலத்தவர்கள் வணங்கி வந்த ஸ்ரீரங்கநாத மூர்த்தத்தை, ஸ்ரீசீதாதேவியை மீட்பதற்கு உதவிய விபீஷண ருக்குப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார் ஸ்ரீராமபிரான். விபீஷணன் அந்த மூர்த்தத்தை எடுத்துக்கொண்டு காவிரிக் கரைக்கு வந்த போது, இங்கேயே பள்ளிகொண்டிருக்க விரும்பினார் ஸ்ரீரங்கநாதர். சோழ மன்னன் தர்மவர்மனின் வேண்டுகோளும் அதுவாகவே இருக்க, காவிரிக் கரையில், இலங்கையை நோக்கியபடி ஸ்ரீரங்கன் கோயில் கொண்டார் என்கிறது ஸ்ரீரங்க மகாத்மியம்.

ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்; பெரிய பெருமாள், பெரிய தாயார், பெரிய கோயில் எனப் பிரமாண்டமாகப் புகழப்படும் ஸ்ரீரங்கத்துக்கு வந்து அரங்கனை ஸேவித்தால், சுக்கிர பலம் கூடும்; ஆயுள் அதிகரிக்கும்; மோட்சம் கிட்டும் என்கின்றனர் வைணவப் பெரியோர்கள். பெருமாளுக்கு வெண்ணெய், குங்குமம் மற்றும் சந்தனம்  சார்த்தி வழிபட, திருமண வரமும் சந்தான பாக்கியமும் பெறலாம்; கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம்; சகல ஐஸ்வரியங்களும் பெற்று, மோட்சத்தையும் அடையலாம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். மகம் நட்சத்திரக்காரர்கள், மக நட்சத்திர நாளில் இங்கு வந்து, ஸ்ரீஅரங்கநாதரை ஸேவித்தால், ஆயுசுக்கும் குறைவின்றி வாழலாம்!

நட்சத்திர ஸ்லோகம்

மகம்