Published:Updated:

சித்திரை

சித்திரை

சித்திரை
சித்திரை

ந்தக் காரியத்திலும் நன்கு யோசித்து முடிவெடுப்பது சிறப்பு. அவசரப் போக்கு அடியோடு கூடாது. சகோதர நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11-10-2012 முதல், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். பயணம், தோல்பொருட்கள், அயல்நாட்டு வர்த்தகம் போன்ற துறைகளால் வருமானம் அதிகரிக்கும். கறுப்பு நிறப் பொருட்கள் லாபம் தரும்.

5-11-2013 முதல் பொருளாதாரம் தொடர்பான துறைகளில் விழிப்பு தேவை. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும். தெய்வப் பணிகளை நிறைவேற்ற, குறுக்கீடுகள் முளைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

##~##
சித்திரை நட்சத்திரத்துக்கான தேவதை, சுக்கிரனின் மைந்தனான துவஷ்டா; மற்றொருவர் விஸ்வகர்மா. இந்த நட்சத்திரக்காரர்கள் சூரிய வழிபாடு செய்யலாம். மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதாலும், கூடுதல் பலன்கள் உண்டு.

வழிபட வேண்டிய தலம்

குழந்தையில்லாமல் வருந்திய மலையத்துவஜ மன்னனுக்கு, புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக, மீனாட்சியம்மை பிறந்து வளர்ந்த கதையை மதுரை தலபுராணம் வெகுவாகச் சிறப்பிக்கும். 'மீன் போன்ற கண்களை கொண்டவள் என்பதால் அம்பிகைக்கு மீனாட்சி என்று பெயர் வந்ததாக ஆன்மிகப் பெரியோர்கள் விவரிப்பார்கள்!

சித்திரை

பொற்றாமரைக் குளமும், வலது பாதம் தூக்கி ஆடும் ஆடல்வல்லான் தரிசனமும், தாழம்பூ குங்குமமும் இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சங்கள். சித்திரை திருவிழாவுக்கு மட்டுமல்ல, சித்திரை நட்சத்திரத்துக்கும் உகந்த தலம் மதுரை.

சித்ரா பௌர்ணமி போன்ற புண்ணிய தினங்களிலும்  சித்திரை நட்சத்திர நாட்களிலும் மதுரை மீனாட்சியம்மனுக்கும், ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும்  

உரிய அபிஷேக-ஆராதனைகள் செய்து வழிபட, சகல ஐஸ்வரியங்களும் நிறைந்த நிம்மதியான வாழ்வைப் பெறலாம். ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு புதன் கிழமைகளில் தேனபிஷேகம் செய்தால் குரல் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதேபோன்று இந்தக் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் அருளும் விபூதிப் பிள்ளையாரும் விசேஷமானவர். விபூதி அபிஷேகம் செய்து இவரை வழிபட, வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

நட்சத்திர ஸ்லோகம்

சித்திரை