அட்டைப்படம்: மஹிதங்கம்

மனிதனுக்கு மூவகைக் கடன்கள் உள்ளன என்கின்றன ஞானநூல்கள். அவை தேவ கடன், பித்ருக் கடன், ரிஷி கடன். இவற்றை நாம் செய்யவேண்டிய அறங்களாக, கடமைகளாகவே ஏற்க வேண்டும்.

அனுதின பூஜை வழிபாடுகளாலும், வேள்வி ஆராதனைகளாலும், ஆலய தரிசனங்களாலும் தேவ கடனை நிறைவேற்றுகிறோம். முன்னோருக்குச் செய்யவேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலானவற்றை முறைப்படி செய்வதன் மூலம் பித்ருக் கடனை நிறைவேற்றுகிறோம். மகான்களை, சாதுக்களை ஆராதிப்பதன்மூலம் ரிஷி கடனை நிறைவேற்றுகிறோம். இவை யாவும் பெரும் புண்ணியங்களை அளித்து, நமது பிறவியைப் பூரணத்துவமாக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
எனினும் பொதுவில் ‘கடன்’ எனும் சொல், பொருளாதாரப் பற்றாக்குறையால் ஏற்படும் நமது சுமையைக் குறிப்பதாகவே திகழ்கிறது. வேலையில்லாமையால் கடன், படிப்புக்காகக் கடன், வீடுகட்டுவதற்காகக் கடன், பிள்ளைகளின் கல்யாணத்தின் பொருட்டு கடன், மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கடன்... இப்படி தனிமனிதனின் கடன் பிரச்னைகள், அவனுக்குப் பெரும் சுமையாகி அழுத்துகின்றன. கடன் இல்லாத வாழ்க்கைதான் கவலையில்லாத வாழ்க்கை. பொருளாதார ரீதியாக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் கடன் பிரச்னைகள், நமது ஒட்டுமொத்த நிம்மதியையும் அழித்து விடும். திக்கற்றவருக்குத் தெய்வமே துணை. அவ்வகையில் கடன் சுமையால் திக்கற்று தவிக்கும் அன்பர்கள், கடன் சுமையில் இருந்து விடுபடும் பொருட்டு, தெய்வத்தின் திருவருளை நாடுவதற்கான எளிய வழிபாடுகள், கடன் பிரச்னை தீர திருவருள்புரியும் தெய்வ துதிப் பாடல்கள், ஜாதகத்தில் கடன் பிரச்னையைக் குறிக்கும் கிரகநிலைகள், அவற்றுக்கான எளிய பரிகாரங்கள் ஆகியவைக் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கடன்கள் ஏற்படக் காரணமும் பரிகாரங்களும்...

லக்னத்தில் இருந்து 6-ம் இடம் என்பது ருண - ரோக - சத்ருஸ்தானம் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். மேலும் எதிரிகளாலும், நோய்களாலும் துன்பப்பட நேரிடும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் செய்வதன் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.

மேஷ லக்னம்: மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னிக்கு உரிய கிரகம் புதன். புதன் கிரகம் கன்னியிலேயே வலுப்பெற்று அமைந்திருந்தால், ஜாதகருக்குக் கடன் சுமை உண்டாகும். கடன் சுமைகளில் இருந்து விடுபட, திருப்பதிக்குச் சென்று பெருமாளை வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குப் பச்சை நிற வஸ்திரங்கள், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்யலாம்.

ரிஷப லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 6-ம் இடம் துலாம். துலாம் ராசிக்கு உரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரன் துலாமிலேயே வலுப் பெற்றிருந்தால், கடன்கள் ஏற்படும். கடன்கள் தீரவேண்டுமென்றால், ஸ்ரீரங்கத்துக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளைத் தரிசிப்பதுடன், பளபளப்பான வெண்ணிற வஸ்திரம், மொச்சை போன்றவற்றை தானம் செய்தால் கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மிதுன லக்னம்: மிதுன லக்னத்துக்கு 6-க்கு உடைய செவ்வாய் 6-ம் இடமான விருச்சிகத்திலேயே வலுப்பெற்று இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வ முத்துக்குமாரசுவாமியை வழிபடுவதுடன், செந்நிற வஸ்திரம், துவரம்பருப்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.

கடக லக்னம்: கடக லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகமான குரு தனுசு ராசியில் வலுப்பெற்று இருந்தால், திட்டைக்குச் சென்று குரு பகவானை வழிபடுவதுடன், பொன்னிற வஸ்திரத்தையும், கறுப்பு கொண்டைக்கடலையையும் தானம் செய்வது கடன்களில் இருந்து நிவாரணம் தரும்.

சிம்ம லக்னம்: சிம்ம லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-ல் வலுப்பெற்று இருந்தால், குச்சனூருக்குச் சென்று சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குக் கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

கன்னி லக்னம்: கன்னி லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-லேயே வலுப்பெற்று இருந்தால், திருநள்ளாறு சென்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். முன் சொன்னபடியே கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும்.

துலா லக்னம்: துலா லக்னத்துக்கு 6-க்கு உடைய குரு மீனத்திலேயே வலுப்பெற்று இருந்தால், ஆலங்குடிக்குச் சென்று தட்சிணாமூர்த்தியைத் தரிசித்து, பொன்னிற வஸ்திரம், கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்து நிவாரணம் பெறலாம்.

விருச்சிக லக்னம்: விருச்சிக லக்னத்துக்கு 6-க்கு உடைய கிரகமான செவ்வாய் மேஷத்திலேயே வலுப்பெற்று இருந்தால், திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, செந்நிற வஸ்திரம் மற்றும் துவரை போன்றவற்றை தானம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

தனுசு லக்னம்: தனுசு லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், மொச்சை, பளபளப்பான வெண்ணிற வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

மகர லக்னம்: மகர லக்னத்துக்கு 6-க்கு அதிபதியான புதன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், திருவெண்காடு சென்று வழிபடுவதுடன், பச்சை நிற வஸ்திரம், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.

கும்ப லக்னம்: கும்ப லக்னத்துக்கு 6-க்கு அதிபதி சந்திரன். இவர் கடகத்தில் வலுப் பெற்று இருந்தால், திங்களூருக்குச் சென்று சந்திரனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணிற வஸ்திரம், பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

மீன லக்னம்: மீன லக்னத்துக்கு 6-க்கு உரிய சூரியன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், சூரியனார்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் மற்றும் கோதுமை தானம் செய்தால் கடன்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மேலே சொன்ன பரிகாரங்களைச் செய்ய இயலாதவர்கள் ஆறு வாரங்களுக்குப் பசுவுக்கு வாழைப் பழங்களும், அகத்திக்கீரையும் தந்து வந்தால் கடன்களில் இருந்து சிறிது சிறிதாக நிவாரணம் பெறலாம்.

குலதெய்வம் துணையிருக்கும்!

முற்பிறவியில் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் ஏற்படும் கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்கு, குலதெய்வ வழிபாடு துணை செய்யும். மூன்று பெளர்ணமி தினங்கள், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபட்டுவந்தால், கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும்.

குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள், வீட்டிலேயே குலதெய்வத்தின் திருவுருவப் படத்தை வைத்து, அதன் முன்பாகவோ அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கியோ ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, அவரவர் வழக்கப்படி படையலிட்டும், நைவேத்தியங்கள் சமர்ப்பித்தும் வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமி தினங்கள் வழிபட்டு வந்தால், விரைவில் கடன்கள் அடைபடும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கியிருந்தாலும், விரைவில் வசூலாகிவிடும்.

சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்!

நம் சங்கடங்களையெல்லாம் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வம் சக்கரத்தாழ்வார். சனி மற்றும் புதன்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, ‘ஜய ஜய ஸ்ரீசுதர்ஸனா’ என்று மனத்தில் தியானித்தபடி பன்னிரு முறை அவரை வலம் வந்து வழிபடுவதால், கடனால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்; சந்தோஷம் பொங்கிப்பெருகும்.

பசுவை வணங்குங்கள்!

பசு தெய்வாம்சம் நிறைந்தது. தினமும் காலையில் விழித்ததும் பசு மாட்டுக்குப் பழமும் புல்லும் உண்ணக் கொடுப்பதும், பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவதும் விசேஷம். இதனால், வீட்டில் தரித்திரம் தொலையும்; செல்வச் செழிப்பு நீடித்து நிலைக்கும்.

வீட்டில் சில நெறிமுறைகள்...

தினமும் காலை மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றுவது அவசியம். அதேபோல், காலை வேளையில் பூஜையறையில் விளக்கேற்றும் இடத்திலும், அடுப்படியிலும் கழுவி சுத்தம் செய்த பிறகு, கோலமிட்டு மஞ்சள் பொடியால் `அக்ஷயம்' என்று எழுதுவது விசேஷம். இதனால் வீட்டில் அன்னமும் செல்வமும் பல்கிப்பெருகும்.

சுவாமி அறையில் சிறு சொம்பு (தாமிரத்தில் இருந்தால் சிறப்பு) நிறைய நீர் வைக்க வேண்டும். தினமும் நீராடியதும் அதிலுள்ள தீர்த்தத்தை மாற்ற வேண்டும்.

* அதிகாலையில் எழுந்திருக்கப் பழக வேண்டும். மனிதர்களின் மனம் சஞ்சலமின்றி இருக்கும் நேரம் இது. இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுவார்கள். பிரம்ம முகூர்த்த வேளையில் வீதியுலாவாக வரும் மகாலட்சுமி, வீடு மங்களகரமாக உள்ளதென்று, வீட்டுக்குள் வந்துவிடுவாள்!

* வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று, இயன்ற அளவு அவர்களை உபசரித்து, உணவிட்டு, வழியனுப்ப வேண்டும்.

* வீட்டில் வீண் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* அஷ்டமி, வெள்ளி மற்றும் சுப நிகழ்வுகள் நடக்கும் நேரத்தில் முகச்சவரம், முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடாது. இதனால் லட்சுமிகடாட்சம் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

* உதயம், அஸ்தமன காலங்களில் தூங்குவதைத் தவிர்க்கவும்.

* அழுக்குத் துணிகள் அணிவதைத் தவிர்த்து, அனுதினமும் துவைத்த உடைகளையே அணிய வேண்டும். சிலர், ‘அவ்வளவு அழுக்காகத் தெரியவில்லையே’ என்று முதல் நாள் அணிந்த ஆடைகளையே அடுத்த நாளும் உடுத்திக்கொள்வார்கள். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

* இல்லத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தூய்மையாக இருக்கும் இடத்தில் குருவும் மகாலட்சுமியும் நித்யவாசம் செய்வார்கள்.
அதனால் உள்ளம், இல்லம் இரண்டையுமே தூய்மையாக வைப்பதன் மூலம் அபரிமிதமான லட்சுமிகடாக்ஷம் வந்து சேரும்; கடன் பிரச்னைகள் நீங்கும்.

கடன் தீர்ப்பார் தோரணக் கணபதி!

வினைகள் யாவற்றையும் தீர்க்கவல்லது விநாயகர் வழிபாடு. குறிப்பாக திருக்கோயில்களில் வாயிலின் அருகில் அருள்பாலிக்கும் தோரணக் கணபதியைக் கைதொழ பொருள்வளம் ஸித்திக்கும் என்கின்றன ஞானநூல்கள். இந்தப் பிள்ளையாரை துவார விநாயகர் என்றும் சொல்வார்கள்.

இந்தப் பிள்ளையாரை செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசிப்பதும் வழிபடுவதும் சிறப்பு. இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள் தோரணக் கணபதியைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அப்போது, தோரணக் கணபதி மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரணக் கணபதி மந்திரம்:

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல ஸித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா'.

பஞ்சமி வழிபாடு!

பஞ்சமி திதி திருநாள் அம்பாளுக்கு உகந்தது. இந்தத் திருநாளில் சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை மற்றும் பெளர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி.

இந்தத் தினத்தில் ஐவகை எண்ணெய் கலந்து, திருவிளக்கின் ஐந்து முகங்களிலும் தீபமேற்றி வழிபடுவதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆகவே, கடன் பிரச்னைகளும் பொருளாதாரச் சிக்கல்களும் விரைவில் நீங்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக்கொண்டு பஞ்சமி தினத்தில் பராசக்தி தேவியை வழிபடுங்கள். நிறைவாக கற்கண்டு மற்றும் ஐவகை பழங்களை நைவேத்தியம் செய்து அம்பாளைத் துதி செய்யுங்கள். அம்பாள் அருளால் வெகுசீக்கிரமாகவே உங்களின் கடன் பிரச்னைகள் விலகும்.

வழிபாட்டின்போது கீழ்க்காணும் துதிப்பாடலைப் பாடி வழிபடுவது விசேஷம்.
தனம் தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே!

அதிர்ஷ்ட தேவி அருள்புரிவாள்!

பெரியோர்கள் கதையொன்று சொல்வார்கள். அடியவன் ஒருவன் இருந்தான். சிறந்த பக்தனான அவன் வறுமையில் வாடித் தவித்தான். அவன்பொருட்டு ‘அவனது வறுமையை அகற்றியருளக் கூடாதா’ என்று சிவனாரிடம் வேண்டிக்கொண்டாளாம் பார்வதி தேவி. சிவனாரோ, ‘‘அவனுக்கு அதிர்ஷ்ட நேரம் கைகூடி வரவில்லை. நாம் திருவருள் புரிந்தாலும் அவனால் அதை ஏற்றுப் பயனடைய முடியாது’’ என்றார். தேவியோ அவர் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை. அவளுக்கு அனுபவத்தால் உண்மையை உணர்த்த முற்பட்டார் பரமன். அருளாடல் தொடங்கியது.

வழக்கம்போல் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தான் அடியவன். அவன் செல்லும் வழியில் பொன் முடிப்பு ஒன்றை வீசினார் இறைவன். பார்வதி தேவி மகிழ்ந்தார். நிச்சயம் அது அடியவன் கண்ணில்படும். அதை கண்டெடுப்பவன் மிக மகிழ்ச்சியாக வாழ்வைக் கழிப்பான் என்று எண்ணினார் அவர்.

ஆனால் விதி வலியது இல்லையா?

வெகு உற்சாகமாக இயற்கையை ரசித்தபடி வந்துகொண்டிருந் தவனுக்கு, பொன் முடிப்பு கிடந்த இடத்துக்கு முன்னதாக வரும்போது விநோதமாக ஒரு சிந்தனை உதித்தது. இந்த ஒற்றையடிப் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு நடந்தால் எப்படியிருக்கும் என யோசித்தான். அதைப் பரீட்சித்துப் பார்க்க முடிவு செய்தவன், இடைக்கச்சையை அவிழ்த்து தன் கண்களைக் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பாவம் அவன், கண்களைக் கட்டிக்கொண்டு நடந்ததால் பொன் முடிப்பை அவன் பார்க்கவில்லை. அதை தாண்டிச் சென்றுவிட்டான். பரமன், பராசக்தியை நோக்கினார். அவளோ அடியவனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி பரிதாபப்பட்டாள்!

தெய்வ அனுக்கிரகத்தால் கைகூடும் வரமாக இருந்தாலும், அதோடு அதிர்ஷ்டமும் நமக்குத் துணைபுரிய வேண்டும். அப்படி அதிர்ஷ்டம் நமக்குவரும் காலத்தில் அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வல்லமையை அளிப்பவள் அதிர்ஷ்ட தேவி. இவளை வடநாட்டில் ‘லக்கி மா’ என்று போற்றுகிறார்கள்.

நமது ஞானநூல்கள் சில, அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை விவரிக்கின்றன. பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாள்களில் அதிர்ஷ்ட தேவியை வழிபடலாம்.

பூஜையறையில் அகல் விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, அதையே அதிர்ஷ்ட தேவியாகக் கருதி வழிபடலாம். மேலும், யோக சக்தியான அதிர்ஷ்ட தேவியை வர்ணித்து, கீழ்க்காணும் 26 நாமாவளிகளைக்கூறி, பூக்களால் அர்ச்சனை செய்து, பழங்கள் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம்.

தாராயை, வித்யாயை, முநின்யை ஷ்ரத்தாயை, ஜராயை, மேதாயை, ஸ்வதாயை, ஸ்வஸ்தியை, வர்மின்யை, பாலின்யை, ஜ்வாலின்யை, க்ருஷ்ணாயை, ஸ்மிருத்யை, காமாயை, உன்மத்யை, ப்ரஜாயை, சிந்தாயை, க்ரியாயை, க்ஷந்த்யை, சாந்த்யை, தாந்த்யை, தயாயை, ஸ்வஸ்திதாயை, தூத்யை, கத்யாயை, அதிர்ஷ்ட கலாயை.

ஒவ்வொரு திருநாமத்தின் முன்பு ஓம் ஸ்ரீம் என்றும், திருநாமத்தின் முடிவில் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும் (உதாரணத்துக்கு... ‘ஓம் ஸ்ரீம் தாராயை நம:’).

இங்ஙனம் அதிர்ஷ்ட தேவியை வழிபடுவதால், நம் வாழ்வில் அதிர்ஷ்ட யோகம் தேடிவரும். கடன் பிரச்னைகள் விலகியோடும்.

வறுமை நீங்க அருள்பாலிக்கும் அற்புத பதிகம்!

கீழ்க்காணும் பதிகம் திருவீழிமிழலை திருத்தலத்துக்குரியது. திருஞானசம்பந்தர் பொருள் வேண்டி, இந்தப் பதிகத்தைப் பாடி இறையருளால் பொன்னும் பொருளும் பெற்றதாக திருக்கதை உண்டு. அனுதினமும் கீழ்க்காணும் இந்தப் பதிகத்தை மனமுருகிப் பாடி சிவனாரைத் துதித்து வழிபட்டு வந்தால், பொன், பொருள் சேரும்; நம் இல்லத்தை வறுமைப்பிணி அண்டாது.

வாசிதீரவே, காசு நல்குவீர்;
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே
செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்; உய்ய நல்குமே
நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
கூறு மிழலையீர்; பேறும் அருளுமே
காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே
பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே
மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே
காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே
திருச்சிற்றம்பலம்

சுக்கிரன் உபதேசித்த செவ்வாய் ஸ்தோத்திரம்!

செவ்வாயின் திருவருள் இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை அமையுமாம். சுக்கிராச்சார்யர் உபதேசம் செய்த அற்புதமான ஸ்தோத்திரம் ஒன்று ஸ்காந்த புராணத்தில் உள்ளது. கடனைப் போக்கும் மங்கல ஸ்தோத்திரமான அதை, தினமும் பாராயணம் செய்து செவ்வாய் பகவானை வழிபட, பூமியில் குபேரனைப் போல வாழலாம். அந்த ஸ்தோத்திரத்தின் இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உங்களுக்காக...

மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாகாய: ஸர்வகர்ம விரோதக:

கருத்து: மங்களத்தைக் கொடுப்பவர், பூமியின் புத்ரன், கடனைப் போக்குபவர், பொருளைப் கொடுப்பவர், ஸ்திரமான ஆசனத்தை உடையவர், பெருத்த சரீரமுடையவர், சர்வ கர்மாக்களையும் தடுப்பவர் செவ்வாய் பகவான்.

லோஹிதோ லோஹிதாக்ஷஸ்ச
ஸாமகானாம் க்ருபாகர:
தராத்மஜ: குஜோ பௌமோ
பூதிதோ பூமிநந்தன:

கருத்து: சிவந்த நிறமுள்ளவர், சிவந்தக் கண்களையுடையவர், சாம கானம் செய்கிறவர்களுக்குக் கருணை செய்கிறவர், பூமியின் புத்திரர், பூம்ன் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவர், பூமிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவர் செவ்வாய் பகவான்.

தொகுப்பு : `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி, கே.குமார சிவாச்சாரியர், சுபா கண்ணன்