தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

வங்கிக் கடன் உதவி கிடைக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைமேஷம்: ஏட்டறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் 3-ம் இடத்தில் நிற்பதால் வழக்கு சுமுகமாகும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் மனத்தெளிவு, உற்சாகம் பிறக்கும். தோற்றப்பொலிவுக்கூடும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். கணிசமாக லாபம் உயரும். ரகசியங்களைக் காக்க வேண்டிய தருணமிது.

ஆடை ஆபரணங்கள் சேரும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை


ரிஷபம்: நியாயத்தின் பக்கம் நிற்பவர் களே! ராசிநாதன் சுக்கிரன் 12-ம் இடத்தில் மறைந்திருப்பதால் திடீர் யோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை எல்லாம் உண்டு. புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனதுக்கு இதமான செய்திகள் வரும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களுக்குக் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.

அயல்நாட்டுப் பயணம் அமையும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைமிதுனம்:
அன்புக்குத் தலை வணங்குபவர்களே! சனி 6-ம் இடத்தில் நிற்பதால் புதிதாகச் சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். வீடுகட்ட லோன் கிடைக்கும். சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பண வரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை


கடகம்: உதவும்கரங்கள் உடையவர்களே! சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். திடீர்ப் பண வரவு, செல்வாக்கு, கௌரவப் பதவிகள் தேடிவரும். புதிய வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.  சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாள்கள் பொறுப்பாகச் செயல்படுவார்கள். அதிரடி மாற்றங்கள் நிகழும் காலமிது.

சொத்துகள் வந்துசேரும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைசிம்மம்:
யார் நிழலிலும் வாழ விரும்பாதவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிட்டும். சகோதரவகையில் ஒற்றுமை பலப்படும். ராசிக்குள் ராகு நிற்பதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும்.  தந்தைவழிச் சொத்துகள் வந்துசேரும். சூரியன் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கூடி வரும்.

வியாபாரத்தில் லாபம் வரும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை


கன்னி: ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்களே! செவ்வாயின் போக்கு சாதகமாக இருப்பதால் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவலாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். சூரியனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.  வியாபாரத்தில் கணிசமாக லாபம் கிடைக்கும்.  கலைத் துறையினர்களுக்கு நழுவிச்சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வந்துசேரும்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைதுலாம்: இளகிய மனம் கொண்டவர் களே! ராசிநாதன் சுக்கிரன் 7-ம் இடத்தில் இருப்பதால் மனைவி வழியில் அனுகூலம் உண்டு. திருமணம் முடியாதவர்களுக்கு முடியும். பாதச் சனியால் முதுகுவலி, மூட்டுவலி வந்து விலகும். ராகு பகவான் லாப வீட்டில் நிற்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தூரத்துச் சொந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். திட்டமிட்ட காரியங்கள் கன்னிப் பெண்களுக்குக் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்து போகும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணமிது.

பெரிய பதவிகள் கிடைக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை


விருச்சிகம்: புரட்சிகரமான சிந்தனை உடையவர்களே! குரு வலுவாக நிற்பதால் எதிலும் வெற்றிபெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பி-க்களுக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். ஜென்மச் சனி தொடர்வதால் சோர்வு, களைப்பு, வேலைச்சுமை, சர்க்கரை நோய் வரக்கூடும். செவ்வாய் 8-ம் இடத்தில் நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், வீண் அலைச்சல், டென்ஷன், மன இறுக்கம் வந்து போகும். சூரியன் 7-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் கோபப்படுவீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.

புதிய முயற்சியில் வெற்றி!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைதனுசு: புதுமையுடன் பழைமையைப் புகுத்துபவர்களே! சூரியன் 6-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கட்டட வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சிலர் வெளிநாடு சென்றுவருவீர்கள். செவ்வாய் 7-ம் இடத்தில் தொடர்வதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சுக்கிரன் 5-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். முன்னேறும் வேளையிது.

பண வரவு உண்டு!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை


மகரம்:
சவால்களைக் கண்டு அஞ்சாதவர்களே! செவ்வாய் 6-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சகோதரவகையில் இருந்த மன வருத்தம் நீங்கும். ‘பிள்ளைகளைக் கண்டிக்கிறேன்’ என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். அன்பாகச் சொல்லிப் புரியவையுங்கள். ஆனால், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். விட்டுப்பிடிப்பது நல்லது.

முடிவுகள் எடுக்கும் தருணமிது!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைகும்பம்: சுற்றம்சூழ வாழ்வதை விரும்புபவர்களே! சூரியன் 4-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வீட்டைக்கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கேது ராசிக்குள் நிற்பதால், தலைச்சுற்றல், முன்கோபம் வந்து போகும். செவ்வாய் 5-ம் இடத்தில் தொடர்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். 3-ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணமிது.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்!

ராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை


மீனம்: மனதில்பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! 6-ம் இடத்தில் ராகு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிபிறக்கும். வழக்கில் வெற்றியுண்டு. 2-ம் இடத்தில் சுக்கிரன் நிற்பதால் கனிவாகப் பேசி சாதிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வி.ஐ.பி-க்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள் உதவுவார்கள். சாதித்துக் காட்டும் காலமிது.