தொடர்கள்
Published:Updated:

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் 

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரைதிட்டமிட்டுச் செயல்படுபவர்களே!

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 3-ல் நிற்பதால், அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்துச் சிக்கல்கள் சுமுகமாக முடியும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

புதனும் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், உற்சாகம் கூடும். பால்யகால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆனால், அஷ்டமச் சனி தொடர்வதால், எதன்பொருட்டும் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்ப தால், நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்துகொள்வீர்கள். கனிவாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தை விரிவுபடுத்துவது குறித்துச் சிந்திப்பீர்கள். கலைத் துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

தர்மச் சிந்தனையால் பாராட்டப்படும் தருணம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை


செய்நன்றி மறவாதவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். புதிய வர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைக்க முயற்சி செய்வீர்கள். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும்.

ஆனால், சனி 7-ல் கண்டகச் சனியாகத் தொடர்வதால், வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். அடிக்கடி அசதியும் சோர்வும் ஆட்கொள்ளும். செவ்வாய் 2-ல் இருப்பதால், முன்கோபம், பேச்சில் தடுமாற்றம் வந்துசெல்லும். ஒரு சொத்தை விற்றுவிட்டு, வேறு சொத்து வாங்குவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், செல்வாக்கு உயரும். பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை விமர்சித்தாலும், அனுசரித்துச் செல்லுங்கள்; தர்க்கம் வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரைநேர்மை மிகுந்தவர்களே!

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அவர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். சனி பகவான் 6-ல் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவுக்கு இடமுண்டு. மன இறுக்கம் நீங்கி, நிம்மதி கிடைக்கும். கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவீர்கள். தள்ளிப்போன வழக்கு சாதகமாகும்.

ஆனால், சூரியனும் செவ்வாயும் ராசிக்குள் இருப்பதால், வீண் டென்ஷன், கண்களில் எரிச்சல் வந்து செல்லும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். ராகு 3-ல் இருப்ப தால், மனோபலம் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். பெரிய முதலீடு களைத் தவிர்க்கவும். வேலையாட்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். மேலதிகாரிகளால் மறை முகப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும்.

போராட்டங்களைக் கடந்து முன்னேறும் தருணம் இது.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை


காலம் அறிந்து பேசுபவர்களே!

சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அரசாங்க விவகாரங்களில் பிரச்னை ஏற்படக்கூடும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், மன நிம்மதி கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். வீட்டை அழகுப் படுத்துவீர்கள்.

சனி பகவான் சாதகமாக இல்லாத தால், மன உளைச்சல், வீண் விரயம் ஏற்படக் கூடும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடியுங்கள். ராகுவும் கேதுவும் சரியாக இல்லாததால், ஒரே நாளில் வெகுதூரப் பயணத்தைத் தவிர்க்கவும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாண்டு இரட்டிப்பு லாபம் அடைவீர்கள். புதுப் பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். உத்தி  யோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் அனுசரித்துச் செல்வார்கள். கலைத் துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலம் அடைவீர்கள்.

வெற்றிகள் விடாமல் தொடரும் தருணம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரைதிடச் சிந்தனை கொண்டவர்களே!

ராசிநாதன் சூரியன் 11-ல் நிற்பதால், புகழ், கௌரவம் உயரும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பழைய வழக்குகளில் வெற்றி உண்டாகும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், ஓரளவுப் பண வரவு உண்டாகும். நண்பர்களால் ஆதாயம்  உண்டாகும்.

ஆனால், சனி 4-ல் இருப்பதால், தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. செவ்வாய் லாப வீட்டில் தொடர் வதால், உயர்கல்வி, உத்தியோகத்தின் காரணமாகப் பிள்ளைகள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குரு பகவான் சாதகமாக இருப்பதால், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள்  பாராட்டுவர். ஆனாலும், சிலர் உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவர். கலைத்துறையினரே! புதுமையான படைப்புகளால் மற்றவர் களது கவனத்தை ஈர்ப்பீர்கள்.

உறுதியுடன் நினைத்ததை முடிக்கும் காலம் இது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை


பேச்சுவளம் மிகுந்தவர்களே!

ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், வேற்று மொழி, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் திடீர் முன்னேற்றம், அதிரடி மாற்றங்கள் உண்டாகும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். சனி 3-ல் இருப்பதால், தடை கள் நீங்கும். கனிவாகவும் கம்பீரமாகவும் பேசிக் காரியம் சாதிப்பீர்கள்.

ராசிக்கு 10-ல் சூரியன் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு கௌரவப் பொறுப்புகள் தேடிவரும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனாலும், ஜன்ம குரு தொடர்வதால், அடிக்கடி கோபமும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும்; இயன்றவரையிலும் அவற்றைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார்மூலம் கசிகிறது என்பதைக் கண்டறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவர். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ்பெறுவீர்கள்.

இதமான பேச்சால் வெற்றி பெறும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரைமனசாட்சிப்படி நடப்பவர்களே!

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசி யைப் பார்ப்பதால், காரியத் தடைகள் நீங்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பி-க்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். செல்வாக்கு உயரும். சிலர் புது வாகனம் வாங்குவீர் கள். 29-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ல் மறைவதால், வீண் செலவுகள் இருந்தாலும் திடீர் பண வரவும் உண்டாகும்.

புதன் வலுவாக இருப்பதால், நண்பர்கள், உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சனி 2-ல் தொடர்வதால், கண் வலி, வீண் செலவுகள் ஏற்படும். சூரியன் 9-ல் இருப்பதால், தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். வேலையாட் களை விட்டுப்பிடிப்பது நல்லது. பங்கு தாரர்களை அனுசரித்துச் செல்லவும்.உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர் களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். கலைத்துறையினரே! கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்வது அவசியம்.

உற்சாகமாகச் செயல்படவேண்டிய தருணம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை


தன்மானம் மிகுந்தவர்களே!

குரு லாப வீட்டில் இருப்பதால், செல்வம், செல்வாக்கு கூடும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தங்க நகைகள் வாங்குவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்புண்டு.

பிள்ளைகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, ஆக்கபூர்வமாகச் செயல் படுவார்கள். சனி பகவான் ராசிக்குள் இருப்பதால், சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சூரியனும் செவ்வாயும் 8-ல் மறைந்து இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அரசாங்க வேலைகள் நல்லபடி முடியும். எதிலும் முன்யோசனையுடன் செயல் படுவது நல்லது. சகோதரர்களால் அலைச்சல் உண்டாகும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடிச் செலவுகளும் துரத்தும். சுக்கிரன் 28-ம் தேதி வரை 6-ல் மறைந்திருப்பதால், வீட்டு வகையில் பிரச்னைகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்களும் பங்கு தாரர்களும் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் அதிருப்தி, உயரதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். கலைத் துறையினரே! எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமாக முடியும்.

பொறுமையுடன்  யோசித்துச் செயல்படவேண்டிய நேரம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரைஉதவுவதில் உயரந்தவர்களே!

புதன் வலுவாக இருப்பதால், நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். நட்பு வட்டம் அதிகரிக்கும். சனி பகவான் 12-ல் இருப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பதில் கவனமாக இருக்கவும்.

சூரியன் 7-ல் இருப்பதால், டென்ஷன், வாழ்க்கைத்துணைக்கு உடல்நலக் குறைவு ஏற்படக்கூடும்; கவனம் தேவை. 28-ம் தேதி வரை சுக்கிரன் வலுவாக இருப்பதால், பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக முடியும். சிலருக்கு, தள்ளிப்போன திருமணம் கூடிவரும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆனால், 29-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வாடிக்கை யாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் ஏற்படலாம்.

சிரத்தையுடன் முன்னேறும் வேளை இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை


பிறந்த மண்ணை மறவாதவர்களே!

ராசிநாதன் சனி பகவான் சாதகமாக இருப்பதால், முடியாது என்று நினைத் திருந்த காரியத்தையும் முடித்துக் காட்டும் வல்லமை உண்டாகும். பிற மொழி பேசுபவர்களால் நன்மை உண்டாகும். நீண்டகாலமாக இழுபறி யாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.

புதன் 28-ம் தேதி வரை 6-ல் இருப்பதால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பழைய நட்பு ஒன்றை இழக்க நேரிடும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். ஆனால், சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால், சிக்கல்கள் தீரும். வழக்கில் திருப்பம் உண்டாகும். ஓரளவுக்குப் பணவரவு ஏற்படும். தாயாரின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புது டிசைனில் தங்க நகை வாங்குவீர்கள். வியாபாரம் நல்லபடி நடக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும்வந்து பணி யில் சேருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவர். கலைத்துறை யினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரைசகிப்புத்தன்மை மிகுந்தவர்களே!

ராசிநாதன் சனி பகவான் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும்.

28-ம் தேதி வரை புதன் 5-ல் இருப் பதால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். 29-ம் தேதி முதல் புதன் 6-ல் மறை வதால், புதியவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை திருத்தி அமைப்பீர்கள். சூரியன் 5-ல் இருப்பதால், பிள்ளை களால் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளை எதிர்பார்த்த பாடப் பிரிவில் சேர்ப்பதற்குப் போராட நேரிடும்.சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத் தில் பற்று-வரவு சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் அதிகாரி களால் சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்படும்.

பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை


சிந்தித்துச் செயல்படுபவர்களே!

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சனி 9-ல் இருப்பதால், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். சூரியன் 4-ல் இருப்பதால், பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர் களின் ஆதரவு பெருகும்; அவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில்  பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் முரண்பட்டாலும், அவர் களிடம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். பாராட்டுகள் கிடைக்கும்.

திடீர் நன்மைகளால் சிந்தை மகிழும் நேரம் இது.