Published:Updated:

நாளை சந்திர கிரகணம்... தோஷமுள்ள நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்! #Astrology

நாளை சந்திர கிரகணம்... தோஷமுள்ள நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்! #Astrology
நாளை சந்திர கிரகணம்... தோஷமுள்ள நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்! #Astrology

ந்திர கிரகணம் நாளை  27 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) `ஆடி வெள்ளிக்கிழமை' நாளில் ஏற்படுகிறது. இந்தச் சந்திர கிரகணம் இந்த ஆண்டில் ஏற்படும் இரண்டாவது கிரகணமாகும். (முதல் கிரகணம் ஜனவரி மாதம் ஏற்பட்டது) இதைத் தொடர்ந்து திருமலை திருப்பதிக் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் முன்கூட்டியே நடை சாத்தப்படுகிறது. இதைப் பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் ஜோதிட ரீதியாக இந்தச் சந்திரகிரகணம் என்ன வகையான மாற்றத்தைத் தரும், எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன வகையான பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பது பற்றிக் கேட்டோம். 

``சூரிய ஒளி என்பது நம் ஆத்மாவுடனும் சந்திர ஒளி என்பது நம் மனதுடனும் தொடர்புள்ளவை. சூரிய ஒளி இல்லாவிட்டால், உலகில் எந்த

ஜீவராசியும் உற்பத்தி ஆகாது, இயங்கவும் முடியாது. 

சூரிய ஒளி இருப்பதால்தான் காற்றில் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. பகலில் உயிரினங்கள் சுவாசித்து வாழவும், இரவில் தாவரங்கள் சுவாசித்து உயிர் வாழ்வதற்குமான ஏற்பாட்டை இயற்கை செய்து வைத்திருக்கிறது. இதனால்தான், `இரவில் புளியமரம், ஆலமரம் ஆகிய இடங்களில் படுத்து உறங்க வேண்டாம்' என்று கூறினார்கள்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவையெல்லாமே இயற்கையின் நிகழ்ச்சிகள்தாம். சூரியன் நம்முடைய உடல் ஆற்றலுக்கும் சக்திக்கும் உரிய கிரகம். சந்திரன் நமது மூளைக்கும் நினைவுகளுக்கும் உரிய கிரகம். 

ஜாதக ரீதியாக குரு இருக்கிறார், சனி இருக்கிறார்னு நாம் பேசலாம். ஆனால், ஒரு நாளில் ஒரு மனிதனின் செயல்கள் மற்றும் போக்குகளைத் தீர்மானிப்பது சந்திரன்தான். உதாரணமாக, ஒரு மனிதர் காலையில் ஒருவரிடம் கோபித்துக் கொண்டிருப்பார். மாலையில் அவரே அந்த மனிதரிடம் சமாதானமாகி விடுவார். இந்தச் செயலுக்குக்குக் காரணம் மனோகாரகனான சந்திரன்தான்.   

ஜோதிட ரீதியாக இன்றைக்கு கோள்சாரப்படி திருவோண நட்சத்திரத்தில் மகர ராசியில் கேது இருக்கிறார். ராகு, கேது இருவருமே நிழல் கிரகங்கள் என்பதை நாம் அறிவோம்.  நாளை  இரவு சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் இருக்கும் கேதுவைக் கடக்கிறார். இதனால் கேதுவின் நிழல் சந்திரனின் மீது விழும். நாளைக்கு ஏற்படும் சந்திர கிரகணம் பூரண கிரகணமாக நீண்ட நேரம் இருக்கும். நள்ளிரவு 11.50 மணியிலிருந்து  விடியற்காலை 3.50 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. 

கிரகணம் பிடிக்கும் நட்சத்திரம் திருவோணம். இதனால் அதிக அளவில் தாக்கத்தைக் கொடுக்கக் கூடிய நட்சத்திரம் உத்திராடம், திருவோணம், அவிட்டம். அதனால் மகர ராசிக்காரர்கள் கண்டிப்பாகப் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். உத்திராடம் தனுசு ராசியிலும், அவிட்டம் கும்ப ராசியிலும் வரும். இவர்களுக்கும் பரிகாரம் தேவை. கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிடம், உத்திரம், அஸ்தம் மற்றும் சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்களும் கண்டிப்பாகப் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். 

பரிகாரம் என்று சொன்னதும் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. அருகிலிலுள்ள கோயிலுக்குச் சென்று வந்தாலே போதுமானது. குறிப்பாக, சந்திரன் பெண் கிரகம் என்பதால் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வரலாம். உரிக்காத மட்டைத் தேங்காயைக் கோயிலுக்குக் கொடுத்து நம்மால் இயன்ற காணிக்கையைச் செலுத்தினாலே போதுமானது.  

 இது பூரண சந்திர கிரகணம் என்பதால், இரவு உணவை 8 மணிக்கு முன்பாக முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்ட உணவு ஜீரணமாக 4 மணி நேரம் தேவைப்படும் என்பதால், முன்னதாகவே இரவு உணவை முடித்துக்கொள்ளவேண்டும். பின்னர் சுவாமி வழிபாடு செய்துவிட்டு உறங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவிலேயே இந்தக் கிரகணம் நடந்து முடிவதால், காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகக் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. 

இது மனம், மூளை, மூளையின் செல்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். மனநலம், வலிப்பு நோய் குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. இரவுப் பணி புரிபவர்கள் அலுவலகத்திலேயே தங்கி விட்டு மறு நாள் இல்லம் திரும்புவது நல்லது'' என்று கூறினார்.