மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

திடீர் பண வரவு ஏற்படும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைமேஷம்:
எங்கும் எதிலும் புரட்சியை விரும்புபவர்களே! கௌரவப் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிரபலங்களின் நட்பைப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டாகும். திடீர் பண வரவு ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். எதையும் தைரியமாகச் சந்திக்க முயற்சி எடுப்பீர்கள். பயணங்களால் நன்மை கிடைக்கும்.  சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

பண வரவு நிச்சயம்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை


ரிஷபம்:
சோர்ந்திடாமல், சுமைகளைச் சுமப்பவர்களே!  உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர் கள். திரும்பக் கிடைக்காது என்று நினைத்திருந்த பணம் உங்களைத் தேடிவரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.உங்களுக்குப் பிடித்த டிசைன்களில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளுங்கள். சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது.சகிப்புத்தன்மை தேவைப்படும் வேளையிது.

புது இடம் வாங்குவீர்கள்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைமிதுனம்: சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து, அதற்கேற்ப பேசுபவர்களே! பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். அதிகச் சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்கள்.  விடாமுயற்சி தேவைப்படும் காலமிது.

புதிய முயற்சி வெற்றி தரும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை


கடகம்: ஆளுமைத்திறன் அதிகம் கொண்ட நீங்கள், அரவணைத்துப் போவதிலும் வல்லவர்கள். பேச்சில் நிதானம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். 29-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் வீட்டில் அமர்வதால் பண வரவு திருப்தி தரும். ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

புகழ், கௌரவம் உயரும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைசிம்மம்: எதிர்ப்புகள், ஏமாற்றங் களுக்கு அஞ்சாதவர்களே! செவ்வாயும், ராசிநாதன் சூரியனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. குரு பகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். இழந்ததைப் பெறும் வேளையிது.

பயணங்கள் மகிழ்ச்சி தரும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை


கன்னி:
எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர்களே! உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள்.  குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். காதல் கைகூடும். நினைத்த காரியம் நடக்கும். நல்ல நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் வளைந்துக்கொடுத்துப் போவது நல்லது. ராஜதந்திரத்தால் வெற்றி பெறும் தருணமிது.

வேலைப்பளு அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைதுலாம்: தொலைநோக்குச் சிந்தனை உடையவர்களே! உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, வாகன வசதி பெருகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகள் தீரும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். நண்பர்களால் ஆதாயமடையும் காலமிது.

பெரியவர்களின் ஆசி கிடைக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை


விருச்சிகம்: மனதில்பட்டதைப் பளிச்சென்று பேசுபவர்களே! பழைய நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று, சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குரு வலுவான இடத்தில் நிற்பதால் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும்.  உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

நட்பு வட்டம் விரியும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைதனுசு: கொள்கைக் கோட்பாடு களை விட்டுக்கொடுக்காதவர்களே! வேற்றுமொழி, மதத்தவர்களால் நன்மை உண்டு. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். 29-ம் தேதி முதல் புதன் 8-ம் வீட்டில் நிற்பதால் மறைமுகப் பண வரவு உண்டு. நட்பு வட்டம் விரியும். புதிய தொழில் தொடங்கும் வேளையிது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். குருவின் திருவருளால் முன்னேறும் வேளையிது.

பயணங்களால் செலவு அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை


மகரம்:
மனசாட்சிக்கு மாறாக எதையும் செய்யாதவர்களே! போட்டி களில் வெற்றி உண்டு. சிக்கல்கள் தீரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஓரளவு பண வரவு உண்டு. புதுத் தெம்பு பிறக்கும். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். திடீர் பயணங்களால் கட்டுக்கடங்காத செலவுகள் வரும். வியாபாரத்தில் வெளிப்படையாகப் பேசக் கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்.

வியாபாரத்தில் திடீர் லாபம்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைகும்பம்: எங்கும் எதிலும் ஒற்று மையை விரும்புபவர்களே! நிலம், வீடு வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள், ஈகோ பிரச்னைகள் வரும் வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. பணப்பிரச்னை இருந்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள்  உங்களுக்கு நண்பர்களாவார்கள். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

பெரியவர்கள் நட்பு கிடைக்கும்!

ராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை


மீனம்: விவாதத்தில் வெளுத்து வாங்குபவர்களே! பிள்ளைகளால் மதிப்புக்கூடும். புதிய சிந்தனைகள், கற்பனைகள் உருவாகும். அண்டை அயலார் உதவுவார்கள். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். குரு பகவான் வலுவாக இருப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். நினைத்ததை முடிக்கும் நேரமிது.