நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். புனித யாத்திரையும், குலதெய்வ நேர்த்திக் கடனும் நிறைவேறும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

புதிய சொத்துக்கள் சேரும். நூதனமானவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பொருள்சேர்க்கையால் மகிழ்ச்சி கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

இந்த நட்சத்திரக்காரர்களில், திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். திருமணம் ஆனவர்கள், இல்லறத்தில் நல்லறம் காண்பர். சமூகத்தில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும் தருணம் இது. 5.11.2013 முதல், உடல் நலனில் கவனம் தேவை.

விசாக நட்சத்திரத்துக்கான தேவதை- இந்திரன்; அக்னியையும் சொல்வர். இவர்களை அனுதினமும் தியானிப்பதுடன், ஸ்ரீசுப்ரமணியரை வழிபடுவது விசேஷம். மேலும், அவர் அருள்பாலிக்கும் அறுபடைவீடு தலங்களைத் தரிசித்து வருவதாலும், நற்பலன்கள் பெற்று மகிழலாம்.

வழிபட வேண்டிய தலம்

திருச்சீரலைவாய் என புராணங்கள் போற்றும் திருச்செந்தூர், தூத்துக் குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் முருகப்பெருமானின் படைவீடு. சூரபதுமனை முருகப்பெருமான் ஜெயம் கொண்டதால், ஜெயந்திபுரம் என்றும் போற்றப்படும் இந்தத் தலத்தில், முருகன் சிவபூஜை செய்ததாக ஐதீகம். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால், இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.

இங்கே, மூலவர் தவக்கோலத்தில் அருள்வதாக ஐதீகம். இவருக்கு குமாரதந்திர முறையிலும், ஸ்ரீசண்முகருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள்

நடைபெறுகின்றன. தலத்தின் சிறப்பம்சம், இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே

இலை விபூதி பிரசாதம். முருகன் தன் 12 கரங்களால் விஸ்வாமித்திரரின் பிணி நீங்க, திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என்பர். சூரபதுமன் வதம் முடிந்த பின், முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 திருக்கரங்களால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.

இங்கு வந்து நாழிக்கிணறு மற்றும் சமுத்திரத்தில் நீராடி, முருகனையும் பஞ்ச லிங்கங்களையும் தரிசித்து, இலைவிபூதி பெற்றுவந்து, தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ள, நம் இன்னல்கள் யாவும் நீங்கும்!