Published:Updated:

அனுஷம்

அனுஷம்

அனுஷம்
அனுஷம்

பிரச்னைகளை எதிர்கொள்ளும் வல்லமையை தரப்போகும் சனிப் பெயர்ச்சி இது.  10.10.12 வரை எதிர்பாராத செலவுகள், இழப்புகள், மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனினும், மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறையிருக்காது. 11.10.12 முதல் எதிர்பாராத பண வரவு உண்டாகும். தொலைதூர பயணத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு, வெளிநாட்டுப் பயணம் வாய்க்கலாம். இட மாற்றம், நிலை மாற்றம் ஆகியனவும் ஏற்படும். 5.11.13 முதல் குடும்பத்தில் குதூகலம் கூடும். மகப்பேறு  வாய்க்கப்பெறும். உங்களின் பேச்சில் திறமை வெளிப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொடுக்கல் - வாங்கல் மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். அந்த எண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேற இறை சந்தர்ப்பமும் கூடிவரும். தனவந்தர்களின் நட்பு கிடைக்கும். தெய்வ காரியங்களும் தடையின்றி நடந்தேறும்.

அனுஷ நட்சத்திரத்தின் தேவதை- மித்ரன் (சூரியன்). இந்த நட்சத்திரக்காரர்கள், திருப்பதி அலர்மேலுமங்கையைத் தரிசித்து வருவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

வழிபட வேண்டிய தலம்

அனுஷம்

பூமியில் நாராயணவனம் எனும் இடத்தில், குழந்தை வரத்துக்காக யாகம் செய்ய முனைந்திருந்தான் ஆகாசராஜன். யாக பூமியில், அவன் பொன் கலப்பை கொண்டு உழுத போது கிடைத்த பெட்டியில், தாமரை மலரின் மீது ஒரு குழந்தை தவழ்ந்தது.

அவளுக்கு பத்மாவதி எனப் பெயரிட்டு வளர்த்தான் மன்னன். பின்னாளில், வேடனாக வந்த வேங்கடவன் பத்மாவதியின் மீது மையல் கொண்டார். தொடர்ந்து வகுளாதேவியின் முயற்சியால் இருவருக்கும் இனிதே திருமணம் நடந்தேறியது. ஸ்ரீநிவாஸனின் திருமணத்தை விவரிக்கும் இந்தக் கதையைக் கேட்டாலே பெரும் புண்ணியம் என்பார்கள் பெரியோர்கள். அனுஷ நட்சத்திரக்காரர்களே... ஸ்ரீநிவாஸ கல்யாண திருக்கதையைப் படிப் பதுடன், திருப்பதிக்குச் சென்று மலையப்பனின் திருக்கல்யாண வைபவத்

தையும், அலர்மேலுமங்காபுரம் தாயாரையும் தரிசித்து வாருங்கள்.

அலர்மேலுமங்காபுரம் அல்லது திருச்சானூர், கீழ் திருப்பதியில் இருந்து சுமார் 4 கி.மீ.தூரத்தில் உள்ளது. இங்கே தாயார் கோயிலுக்கு அருகி லேயே பத்மஸரோவ தீர்த்தம் உள்ளது. வேங்கடவனின் திருவுளப்படி, இந்தத் தீர்த்தத்தில், ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் மகாலட்சுமி தோன்றி, உலக க்ஷேமத்துக்கு அருளியதாகவும் புராணம் கூறும். இங்கு வந்து தாயாரைத் தரிசிக்க, சகல மங்கலங்களும், செல்வகடாட்சமும் ஸித்திக்கும் என்பது ஐதீகம்.

அனுஷம்