Published:Updated:

கேட்டை

கேட்டை

கேட்டை
கேட்டை

ங்களுடைய மதிப்பும் அந்தஸ்தும் உயரும் நேரம் இது. எதிர்ப்புகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்ஜீனியர்களின் நிலை உயரும். சொத்துக்கள் சேரும். அவற்றால் வருமானமும் கிடைக்கும். 11-10-2012 முதல், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் செய்பவர்கள், விழிப்புடன் செயல்பட வேண்டும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

தந்தைவழி பாட்டானாருக்குச் சிறு சங்கடம் உண்டாகும். 5-11-2013 முதல், உங்களின் செல்வ நிலை உயரும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். சிலருக்கு, மகப்பேறு பாக்கியம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் நிலை உயரப் பெறுவார்கள். மனதில் உற்சாகம் பெருகும். வீட்டில், சுப காரியங்கள் நிகழும்.

கேட்டை நட்சத்திரத்துக்கான தேவதை- இந்திரன். இவர்கள், திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியை வழிபட்டு வருவது நலம்பயக்கும்.

வழிபட வேண்டிய தலம்

கேட்டை

கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடைமருதூர். ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியும், ஸ்ரீபெருமுலையாள் அம்பிகையும் கோயில்கொண்டிருக்கும் இந்தத் தலத்தை மத்தியார்ஜுனம் எனப் போற்றுவர். கொல்லூரைப் போன்றே இங்கு அருளும் ஸ்ரீமூகாம்பிகையும் வரப்பிரசாதியானவள். கர்ப்பிணிகள், சுகப்பிரசவம் நிகழ இந்த அம்மையை வேண்டி வழிபடுகின்றனர்.

திருக்கோயிலை வலம் வந்து மூலவரை வழிபட, மனநலக் குறைபாடுகள்

நீங்கும், மன அமைதி கிடைக்கும், திருமண வரமும், பிள்ளை இல்லாமல் வருந்துவோருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, திருக்குளத்தில் நீராடி, புத்தாடை அணிந்து, ஸ்வாமிக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, கருவறையை மும்முறை வலம் வந்து ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியை வழிபடவேண்டும். இதனால், பூர்வ ஜென்ம பாவங்கள், பித்ரு தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும் என்கின்றனர். அதுவும் இந்தக் கோயிலுக்குச் சென்று வந்த 45-வது நாளே தோஷங்களை நீக்கி பலன் தந்து விடுவார் மகாலிங்க ஸ்வாமி என சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் பக்தர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களும் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களைத் தந்தருள்வார் அந்த ஈஸ்வரன்!

கேட்டை