மன மகிழ்ச்சி கூடும் நேரம் இது. செல்வ வளம் பெருகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மகப்பேறும் பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டியது வரலாம். சிலருக்கு, மகான்களின் மந்திரோபதேசம் கிடைக்கும்.

11.10.2012 முதல் அயல்நாட்டு தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும்.

23.12.2012 முதல், பயணத்தால் நன்மைகள் பெருகும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு கைகூடி வரும். ஏற்றுமதி - இறக்குமதித் தொழில்கள் லாபம் தரும். நூதன விஞ்ஞானத் துறைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கறுப்பு மற்றும் நீல நிறப் பொருட்களால் ஆதாயம் உண்டு. 5-11-2013 முதல், பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகள் எழலாம். அதேபோல், பிள்ளைகள் நலனிலும் கவனம் செலுத்தவேண்டும். பெரியவர்களை அனுசரித்துப் போகவும்; அவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

மூல நட்சத்திரத்தின் தேவதை- நிருதி. இவரைத் தியானிப்பதுடன், இந்த நட்சத்திரக்காரர்கள் அனுமனை வழிபடுவதும் சிறப்பு.

வழிபட வேண்டிய தலம்

ஸ்ரீஆஞ்சநேயர் சுமார் 18 அடி உயரத்துடன், கம்பீரமாக காட்சி தரும் தலம் நாமக்கல். கண்டகி நதியில் நீராடியபோது கிடைத்த சாளக்கிராமக் கல்லை, பூஜைக்காக எடுத்துக்கொண்டு விண்ணில் பறந்து வந்தாராம் அனுமன். வழியில் இந்தத் தலத்தின் கமல தீர்த்தத்தைக் கண்டு, அதில் நீராட விரும்பி தரையிறங்கினார்.

இங்கே... ஸ்ரீநரசிம்மரின் தரிசனம் வேண்டி தவம் செய்து கொண்டிருந் தாள் திருமகள். அவளிடம் சாளக்கிராமத்தை கொடுத்துவிட்டு, நீராடி வரலாம் என விரும்பினார் அனுமன். மகாலட்சுமியோ, 'குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால், சாளக்கிராமத்தை கீழே வைத்து விடுவேன்’

என்றாள். அதற்கு ஒப்புக்கொண்டு நீராடச் சென்ற அனுமன், திரும்பி வரதாமதமானது. எனவே, சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிட்டாள் திருமகள். திரும்பி வந்த அனுமனால், சாளக்கிராமத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுக்க... அதன் மீது ஸ்ரீநரசிம்மர் தோன்றி, இருவருக்கும் அருள்புரிந்தார்; இங்கேயே கோயிலும் கொண் டார். ஸ்ரீநரசிம்மர் கோயில் கொண்டிருக்கும் திசையை நோக்கி, அஞ்சலி ஹஸ்தத்துடன் தரிசனம் தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேய பக்தர்களை சனி பகவான் தொடக்கூட மாட்டார்! நாமும், நாமக்கல் அனுமனைச் சரணடைவோம்; நலன்கள் யாவும் கைகூடும்!