Published:Updated:

ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைஎதிர்நீச்சல் போட்டுச் சாதிப்பவர்களே!

புதன் 4-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சுக்கிரன் 2-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். ஆனால், 5-ம் வீட்டில் ராகு நிற்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். உறவினர்களில் சிலர் உங்களைப் பாராட்டிப் பேசினாலும் சிலர், உங்களை உதாசீனப் படுத்துவார்கள். 11-ம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும். வழக்கில் வெற்றி கிட்டும். குருவும் சனியும் சாதகமாக இல்லாததால் எதிர்காலம் குறித்த பயம் வரும். வதந்திகளும் அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு, கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

பணிந்து போக வேண்டிய காலம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

எடுத்த முடிவில் மாறாதவர்களே!

பூர்வ புண்ணியாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்கள் தேடி வருவார்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். 11-ம் தேதி வரை ராசிக்கு 2-ல் செவ்வாய் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆனால், ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வியாபார ரகசியங்கள் கசியக்கூடும் என்பதால் கவனம் தேவை. பங்குதாரர்களால் விரயம் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில நேரங்களில் கடிந்து பேசினாலும், பல நேரங்களில் கனிவாகவும் நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். கலைத்துறையினர்களே! விடாமுயற்சியால் சாதிப்பீர்கள்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் தருணம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைமுற்போக்குச் சிந்தனை கொண்டவர்களே!

ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுக்கிரன் 12-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். ராகு 3-ல் இருப்பதால் பிறமொழி பேசுபவர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனால், செவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதரர்களுக்குள் மனவருத்தம் ஏற்படக்கூடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்துப்போடும் முன்பாகச் சட்ட நிபுணரிடம் ஆலோசிக்கவும். சொத்துகள் வாங்குவதிலும் விற்பதிலும் கவனமாக இருக்கவும். வியாபாரத்தின் சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்படும். வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத்துறையினர்களே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும் நேரம் இது.

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

மனசாட்சியைப் பெரிதும் மதிப்பவர்களே!

ராசிக்குள்ளேயே புதன் இருப்பதால் சமயோசித அறிவால் சாதிப்பீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் உதவுவார்கள். சுக்கிரன் லாப வீட்டில் இருப்பதால் கணவன்  மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ராகு 2-ல் இருப்பதால் பணப் பற்றாக்குறை வந்து நீங்கும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 11-ம் தேதி வரை செவ்வாய் 12-ல் இருப்பதால் சகோதரர்களுடன் பிரச்னை உண்டாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருக்கவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.  கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

பல வேலைகளையும் முடிக்கும் நேரம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைமனவலிமை அதிகம் உள்ளவர்களே!

புதன் 12-ல் மறைந்திருப்பதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையக்கூடும். சிறுவயது நண்பர்கள் தேடி வருவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ராசிக்குள்ளேயே ராகு நிற்பதால் சிறுநீரகக் கோளாறு, முதுகு மற்றும் மூட்டுவலி வந்துபோகும். அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். 11-ம் தேதி வரை செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

எதிலும் வெற்றி அடையும் தருணம் இது.

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

உதவும் குணம் கொண்டவர்களே!

புதன் வலுவாக இருப்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சமயோசிதமாகச் சிந்திப்பீர்கள். வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்கிரன் 9-ல் அமர்ந்திருப்பதால் வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடனுதவி கிடைக்கும். பழுதான வாகனங்களை மாற்றுவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். 11-ம் தேதி வரை செவ்வாய் வலுவாக இருப்பதால்  வழக்குகள் சாதகமாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில நேரங்களில் கடிந்து பேசினாலும் கனிவாகவும் நடந்துகொள்வார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவீர்கள்.

முன்னேற்றம் ஏற்படும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைமனதில் களங்கம் இல்லாதவர்களே!

புதன் வலுவாக இருப்பதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர்கள் உதவுவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ராசிநாதன் சுக்கிரன் 8-ல் நிற்பதால் புதிய எண்ணங்கள் மனதில் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பெரிய பொறுப்புகள் தேடிவரும்.

11-ம் தேதி வரை செவ்வாய் 9-ல் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். குரு 12-ல் தொடர்வதால் பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் துரத்தும். மனதில் குழப்பம் உண்டாகும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகம் செய்து போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். கலைத்துறையினர்களே! யதார்த்தமான படைப்புகளைக் கொடுக்கப் பாருங்கள்.

அனுபவ அறிவால் முன்னேறும் வேளை இது.

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்களே!

சுக்கிரன் 7-ல் நிற்பதால் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், 11-ம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் 8-ல் நிற்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சகோதரர்களால் சங்கடங்கள் உண்டாகும். எச்சரிக்கையாக இருக்கவும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். எதிர்பாராத பயணங்களும் உண்டாகும். புதன் வலுவாக இருப்பதால் பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குரு பகவான் லாப வீட்டில் தொடர்வதால் பிரச்னைகளைத் தகர்த்தெறியும் சாமர்த்தியம் உண்டாகும். செல்வாக்குக் கூடும். சிலருக்குப் புதிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். வியாபாரத்தில் அதிரடியாகச் சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்களும் பங்குதாரர்களும் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை நம்பிக்கையுடன் அணுகுவார்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களுடைய படைப்புகளுக்குப் பட்டிதொட்டி எங்கும் பாராட்டு கிடைக்கும்.

வேலைகளை விரைந்து முடிக்கும் தருணம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைமனதில் உறுதிமிக்கவர்களே!

புதன் 8-ல் மறைந்திருப்பதால் இதமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். மின்சார சாதனங்கள் பழுதாகும். 11-ம் தேதி வரை செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது சுமுகமாக முடியும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். குரு 10-ல் நீடிப்பதால் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் தர்மசங்கடமான சூழ்நிலை உண்டாகும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு வேறு ஒருவர் உரிமை கொண்டாடுவார்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது.

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

இரக்க குணம் கொண்டவர்களே!

புதன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் மனப் போராட்டம் ஓய்ந்து அமைதி ஏற்படும். அலட்சியப்போக்கு மாறும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். செல்வாக்கு, புகழ் கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். 11-ம் தேதி வரை செவ்வாய் 6-ல் வலுவாக இருப்பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். தாய் வழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து வியாபார யுக்திகளைக் கற்றுக்கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மாறுபட்ட சிந்தனையால் சாதிக்கும் தருணம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம் 

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரைமனதில் லட்சியத்துடன் வாழ்பவர்களே!

சுக்கிரன் 4-ல் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 11-ம் தேதி வரை செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளை அரவணைத்துச் செல்லுங்கள். சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வீடு, மனை வாங்குவது விற்பதில் அவசரம் வேண்டாம். ராசிநாதன் சனி சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாட்கள் மற்றும் பங்குதாரர்களால் நஷ்டம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினர்களே! தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் தருணம் இது.

 ராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்போதும் கற்பனையில் இருப்பவர்களே!

புதன் 5-ல் நிற்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகளும் அலைச்சலும் ஏற்படக் கூடும். உங்களால் முன்னேறியவர்களை இப்போது சந்திக்க நேரிடும். சுக்கிரன் 3-ல் நிற்பதால் நவீன ரக எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 11-ம் தேதி வரை செவ்வாய் 4-ல் நிற்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். கேது 12-ல் தொடர்வதால் வாக்குறுதி எதுவும் தர வேண்டாம். செலவுகளும் அதிகரிக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். பெரிய ஒப்பந்தங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமையை மேலதிகாரி சோதித்துப் பார்ப்பார். சக ஊழியர்களால் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! வசதி வாய்ப்புகள் பெருகும்.

புதிய முயற்சிகள் வெற்றியடையும் நேரம் இது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism