Published:Updated:

பூராடம்

பூராடம்

பூராடம்
பூராடம்

வாழ்வில் சுபிட்சம் பூத்துக் குலுங்கும் தருணம் இது. எண்ணங்கள் யாவும் இனிதே ஈடேறும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய பதவிகள், பட்டங்கள் ஆகியவற்றால் உங்களின் மதிப்பு உயரும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மைகள் உண்டு. எதிலும் வெற்றி கிட்டும். கறுப்பு மற்றும் கருநீலப் பொருட்கள் ஆதாயம் தரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரும்பு, எஃகு மற்றும் எண்ணெய் தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை ஈட்டுவார்கள். நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் செழிப்பான நிலையை அடைவார்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். வீட்டில், சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். தர்ம சிந்தனையும் செயல்பாடுகளும் அதிகரிக்கும்.

பூராட நட்சத்திரத்தின் தேவதை வாருணி. இவர்கள், ஸ்ரீவருண பகவானை வழிபடுவது சிறப்பு. திருப்பார்த்தன்பள்ளி, திருந்துதேவன்குடி ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் நன்மைகளைப் பெற்றுத் தரும்.

பூராடம்

வழிபட வேண்டிய தலம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. பயணித்தால், திருந்துதேவன்குடி திருத்தலத்தை அடையலாம். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீகற்கடேஸ்வரர். இங்கே, ஸ்ரீஅருமருந்தம்மை, ஸ்ரீஅபூர்வநாயகி என இரண்டு அம்பிகையர், தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகிறார்கள்.

சிற்ப நுட்பங்களுடன் பிரமாண்டமான தலமாகத் திகழ்கிற இந்தக் கோயிலுக்கு, அமாவாசை நாளில் வந்து வணங்கி வழிபடுவது சிறப்பு. அந்த நாளில், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, ஏழு அல்லது ஒன்பது தீபங்கள் ஏற்றி வைத்து, தாமரை மலர்களால் அலங்கரித்துப் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றிக்குத் துணையாக நிற்பார் ஸ்ரீகற்கடேஸ்வரர்.

அதேபோல், பூராட நட்சத்திரக்காரர்கள் அமாவாசை தவிர, பூராட நட்சத்திர நாளிலும் இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்வாமிக்கு வஸ்திரம் சார்த்தி, அபிஷேக-ஆராதனைகள் செய்து வழிபடலாம். மேலும் 21 அல்லது 32 பேருக்கு அன்னதானம் செய்தாலும் அந்தப் புண்ணியம், நம்மை இன்னும் இன்னும் வாழவைக்கும்; கூடுதல் பலனை அள்ளித் தரும்!

பூராடம்