Published:Updated:

உத்திராடம்

உத்திராடம்

உத்திராடம்
உத்திராடம்

வாழ்வில் முன்னேற்றம் காணும் தருணம் இது. எனினும் 10.10.12 வரை, எந்தக் காரியத்திலும் கொஞ்சம் கவனம் தேவை. சிறு காயங்கள் ஏற்படலாம். மருத்துவச் செலவு இருக்கும். பதற்றம் மற்றும் கோபத்தைக் குறைத்து செயலில் ஈடுபட்டால், வெற்றி கிட்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். புதிய நண்பர் களால் அனுகூலம் உண்டாகும். 5.11.2013 முதல் செல்வ நிலை உயரும். எடுத்த காரியத்தில் வெற்றியே கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

தொழிலாளர்கள், விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக வலம் வரும் தருணம் இது!

உத்திராட நட்சத்திரத்துக்கான தேவதை- விஸ்வம் எனும் விஸ்வே தேவர்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் விநாயகரை வழிபடுவது சிறப்பு. அவர் அருள்பாலிக்கும் தலங்களையும் தரிசித்து வருவதால், விக்னங்கள் யாவும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.

வழிபட வேண்டிய தலம்

உத்திராடம்

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது சுவாமிமலை. தம்பி முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்துக்கு அடுத்தாற்போல் அமைந்துள்ளது, அண்ணன் விநாயகரின் திருவலஞ்சுழி திருத்தலம். இந்தத் தலத்தில், தன்னை நாடி வருவோருக்கெல்லாம் நன்மைகளையும் நிம்மதியையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவெள்ளை விநாயகர்.

சதுர்த்தி திருநாளில், ஸ்ரீவிநாயகரை வணங்குவது சாலச் சிறந்தது. ஆனாலும் சதுர்த்திக்கு மறுநாளான பஞ்சமி திதி நாளில், ஸ்ரீவெள்ளைப் பிள்ளையாருக்கு, அருகம்புல் மாலை சார்த்தி, ஐந்து தீபங்களேற்றி, ஐந்து முறை வலம் வந்து பிரார்த்தித்தால், நமது சங்கடங்கள் நீங்கும்.

உத்திராட நட்சத்திரக்காரர்கள், தங்களது நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். அந்த நாளில், விநாயகருக்கு வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை அணிவித்து, ஐந்து தீபங்கள் ஏற்றி வைத்து, உங்களின் மனக்குறைகளைச் சொல்லி, மனமுருகிப் பிரார்த்தி யுங்கள். உங்கள் கவலையெல்லாம் காணாமல் போகும்! குழந்தைகள், கல்வி மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள். கேதுவுக்கு அதிபதி யான பிள்ளையாரப்பனை, வணங்கி வழிபட்டால், ராகு - கேது தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை!

உத்திராடம்