Published:Updated:

அவிட்டம்

அவிட்டம்

அவிட்டம்
அவிட்டம்

வாக்கு சாதுர்யத்தால் எதிலும் வெற்றி காணும் தருணம் இது. 10.10.2012 வரை, சின்னச் சின்ன தடைகள் வந்து நீங்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருங்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் அயல்நாட்டுத் தொடர்பால் நன்மைகள் ஏற்படும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும். கறுப்பு நிறப் பொருட்கள் ஆதாயம் தரும். போக்குவரத்து, தோல் பொருட்கள், ஏற்றுமதி - இறக்குமதி ஆகியவற்றால் லாபம் கொழிக்கும். எடுத்த காரியங்களில் தொடர்ந்து வெற்றியே கிட்டும். 5.11.2013 முதல், கொடுக்கல் - வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் நடந்தேறும். தெய்வ காரியங்களை, சில தடைகளுக்குப் பிறகு முடிப்பீர்கள்.

அவிட்ட நட்சத்திரத்துக்கான தேவதை- அஷ்டவசுக்கள். இந்த நட்சத்திக்காரர்கள் சூரிய வழிபாடு செய்வது சிறப்பு. காமதேனு வழிபாடும் செய்யலாம். சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட, சூரிய பலம் கூடும்; சுபிட்சம் நிலவும். ரத சப்தமி விரதம் கடைப்பிடித்தும் நலம் பெறலாம்.

வழிபட வேண்டிய தலம்

அவிட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது ஆடுதுறை. இந்த ஊருக்கு அருகில் உள்ள சூரியனார்கோவில், பிரசித்திபெற்ற தலம். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி உள்ள அன்பர்கள் அனைவரும் வணங்கவேண்டிய அற்புதமான தலம் இது! அத்தனை கிரகங்களும் சூரியனாரைப் பார்த்தபடி அருள்கிற இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்!

சூரியனார், தனது கதிர்களைக் கொண்டு, கருவறையில் குடிகொண்டிருக் கும் இறைத் திருமேனியின் திருப்பாதத்தில் விழுந்து வணங்குகிற ஆலயங்கள், தமிழகத்தில் நிறையவே உண்டு. அந்த நாளில், அந்தக் கோயில்களுக்குச் சென்று இறைவனுக்கு வஸ்திரம் சார்த்தி வணங்கினால், தோஷங்கள் யாவும் அகலும்! தினமும் சூரிய பகவானை நமஸ்கரித்துப் பிரார்த்தித்தால், தேக ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழலாம்.

அதேபோல், சிவனாரை பசுக்கள் பால் சொரிந்து பூஜித்த திருத்தலங் களும் தமிழகத்தில் அதிகம் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை, ஆவூர் பசுபதீஸ்வரர், கரூர் பசுபதீஸ்வரர் ஆகிய தலங்களுக்குச் சென்று ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட, இல்லம் செழிக்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

அவிட்டம்