Published:Updated:

சதயம்

சதயம்

சதயம்
சதயம்

னதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் தருணம் இது. எடுத்த காரியங்களில், திறம்பட ஈடுபட்டு, வெற்றி பெறுவீர்கள். சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள், சாதனைகள் புரிவார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் தொடர்பு உடையவர்கள், வளர்ச்சி அடைவார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் அலைச்சல் அதிகரிக்கும். நூதனமானவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவது நல்லது. பயணத்தில் பாதுகாப்பு தேவை. 5.11.2013 முதல் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் சுமுக நிலை தவழும். சேமிக்கிற அளவுக்கு பணம் தாராளமாகப் புரளும். வீட்டில், சுபகாரியங்கள் நிகழும். பெரியோர் மற்றும் பிரபலங்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும்.

சதய நட்சத்திரத்துக்கான தேவதை- வருணன். இவரை தியானிப்பதுடன், எமதருமனை துதிப்பதும் நன்மை அளிக்கும். தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம், காஞ்சி ஸ்ரீசித்திரகுப்தன் கோயில், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டால், அனைத்து வரங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்!

வழிபட வேண்டிய தலம்

சதயம்

தமிழகத்தில், தனிக்கோயிலில் ஸ்ரீசித்திரகுப்தன் அருள்பாலிக்கிற தலம் காஞ்சிபுரம். இங்கே கையில் எழுத்தாணி - ஓலைச்சுவடி, இடுப்பில் வாள் கொண்டு காட்சி தருகிற ஸ்ரீசித்திரகுப்தரைக் கண்ணாரத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு. நமது பாவ-புண்ணியத்தை கணக்கிடும் சித்திரகுப்தனை, வழிபட்டுச் செல்ல பாவங்கள் குறைந்து புண்ணிய கணக்கு கூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை!

பிரம்மாவின் ஆணைப்படி, ஸ்ரீகாளிதேவியை வணங்கி, எண் மற்றும் எழுத்துகளில் புலமை பெற்ற சித்திரகுப்தர், ஐப்பசி மாதம் எம துவிதியை நாளில், எமலோகத்தின் கணக்கராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது ஐதீகம்! கேதுவுக்கு அதிதேவதையான சித்திரகுப்தரை வணங்கினால், கேது தோஷம் நீங்கும்; சங்கடங்கள் களைந்து வளமாக வாழலாம் என்பது ஐதீகம்.

எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், சித்திரை மாத பௌர்ணமியன்று அவரை வணங்குவது சிறப்பு. அன்றைய நாள், சித்திரகுப்த ஜயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீசித்திரகுப்தருக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து, வணங்கித் தொழுதால், குழந்தைகள் கல்வி -கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, மோட்ச கதியை அடையலாம்!

சதயம்