Published:Updated:

பூரட்டாதி

பூரட்டாதி

பூரட்டாதி
பூரட்டாதி

வெற்றி வாய்ப்புகள் கூடும் நேரம் இது. உங்களின் பகைவர்கள் அடங்கிப் போவார்கள். இந்த நட்சத்திரக்காரர்களில்... விளையாட்டு மற்றும் போட்டி-பந்தயங்களில் ஆர்வம் உள்ளவர்கள், பரிசுகளும் விருதுகளும் பெறுவார்கள். செய்யும் தொழில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் உண்டாகும். இயந்திரப் பணிகளிலும் லாபம் உண்டு. புதிய சொத்துக்கள் சேரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11-10-2012 முதல், பயணங்களால் நன்மை உண்டு. அயல்நாட்டு தொடர்புகளும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் போற்றப்படுவார்கள். 5-11-2013 முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும். எனினும், அதற்காக பெரிதும் உழைக்கவேண்டும். சமுதாயத்தில் உங்களின் மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறை இருக்காது. நற்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். நல்லவர்களது தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு, அவர்களது அறிவுரைப்படி செயல்படுவது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தின் தேவதை- அஜைகபாதன். இந்த தேவியை தியானிப் பதுடன், குபேர வழிபாடு செய்வதும் விசேஷம். மேலும், சென்னை ஸ்ரீகாளி காம்பாளையும் வழிபட்டு வரலாம்.

வழிபட வேண்டிய தலம்

பூரட்டாதி

சென்னையின் முக்கிய பகுதியான பாரிமுனையில், கோயில் கொண் டிருக்கிறாள் ஸ்ரீகாளிகாம்பாள். அகத்தியர், பிருங்கி முனிவர், அஷ்டதிக் பாலகர்கள், நவக்கிரகங்கள் ஆகியோர் வழிபட்ட தலம் இது. கருவறையில், அர்த்தபத்மாசன நிலையில், வலக்காலை தாமரையில் பதித்தபடி, மேற்கு நோக்கி அருளும் ஸ்ரீகாளிகாம்பாளை ஒருமுறை தரிசித்தாலே போதும், நவக்கிரக தோஷங்களும் விலகும். அதுமட்டுமா? வீரசிவாஜியும், பாரதியாரும் போற்றி வழிபட்ட நாயகி, ஸ்ரீகாளிகாம்பாள்!

பிள்ளைப்பேறு இல்லாமல் அவதியுறும் தம்பதிகள், ஸ்ரீகாளிகாம்பாளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுவதுடன், அந்த மஞ்சளை வீட்டில் வைத்தும் வழிபட்டு வர, விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள். பௌர்ணமி தினங்களில் நடைபெறும், சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பாளை வணங்கி வழிபட்டு வர, வாழ்வில் சகல நலன்களும் பெறலாம். மேலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில், எலுமிச்சை விளக்கேற்றி ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட, திருஷ்டிகள் அகலும், வாழ்வில் மேன்மைகள் பெருகும்!

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், நாகப்பட்டினத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீஅட்சயலிங்க ஸ்வாமி கோயிலுக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீகுபேரனுக்கு, நெய் கலந்த கோதுமை பொங்கல் சமர்ப்பித்து வழிபடுவதும் விசேஷம்!

பூரட்டாதி