Published:Updated:

உத்திரட்டாதி

உத்திரட்டாதி

உத்திரட்டாதி
உத்திரட்டாதி

மதிப்பு மற்றும் கௌரவம் உங்களைத் தேடி வரும். 10.10.2012 வரை, எதிலும் விழிப்பு உணர்வுடன் செயல்படுங்கள். சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சலசலப்பு உண்டு என்றாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பதற்றமின்றிச் செயல்பட்டால், வெற்றி பெறுவது எளிது. கொடுக்கல் - வாங்கலில் முன்ஜாக்கிரதையுடன் யோசித்துச் செயல்படுங்கள். எரிபொருள், மின்சாரம், ஆயுதம், இயந்திரம் ஆகியவற்றை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் முன்னேற்றமான பாதை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வெளிநாட்டவரால் அனுகூலம் உண்டு. பயணத்தால் லாபம் அதிகரிக்கும். 5.11.2013 முதல் வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். மலை போலான பிரச்னைகளும் பனி போல் மறையும். மதிப்பு உயரும். உடல்நலம் சீராகும். பணநடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கான தேவதை-அஹிர்புத்னியன். இந்த நட்சத்திரக் காரர்கள், காமதேனுவை வழிபடுவது சிறப்பு. பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது உணவு வழங்குங்கள்.

வழிபட வேண்டிய தலம்

உத்திரட்டாதி

கும்பகோணம் அருகில் உள்ளது ஆவூர். ஒரு காலத்தில் கோ வந்த குடி என்றிருந்த ஊர், பிறகு கோவிந்தகுடி என அழைக்கப்பட்டதாம்! ஸ்ரீபார்வதி கடும் தவம் செய்து, சிவனருள் பெற்ற தலம் இது.

அதுமட்டுமா? காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு, இங்கே சிவ லிங்கத் திருமேனிக்கு பாலைச் சொரிந்து, பூஜித்த திருவிடமும் இதுவே! பசு வழிபட்டதால், இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீபசுபதீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமங்களாம்பிகை.

பஞ்ச பைரவ தலம் எனப் போற்றப்படும் இந்தத் தலத்தில் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, இந்திரன் முதலான தேவர்கள், சப்த ரிஷிகள், தசரத சக்கர வர்த்தி முதலானோர் வணங்கி வழிபட்டு, பலன் பெற்றுள்ளனர். இந்தத் தலத்துக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நஷ்டப்பட்ட வியாபாரம் சீரும் சிறப்புமாக முன்னேறும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இந்த நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீபசுபதீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, பிரார்த்தனை செய்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்! பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இங்கு வந்து அன்னதானம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

உத்திரட்டாதி