தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

நிர்வாகத் திறன் கூடும்!

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைமேஷம்: எதிர்நீச்சல் போடுபவர்களே!  21-ம் தேதி வரை புதன் 4-ம் இடத்தில் நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடை யும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வயிற்றுத் தொந்தரவு, தூக்கமின்மை வந்து செல்லும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். மகனுக்கு வேறு மாநிலத்தில் வேலை அமையும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.  தகுதி, கௌரவம் உயரும் தருணமிது.

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

எதிர்பாராத வெற்றி கிட்டும்!

ரிஷபம்: முன்வைத்த காலை பின் வைக்காதவர்களே! பழைய சொந்தபந்தங்கள் தேடிவரும். நட்புவட்டம் விரியும். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும். எதிர்பாராத வெற்றி கிட்டும். பணவரவு அதிகரிக்கும். பெரிய பதவிக்கு சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம்  லாபம் கூடும். நினைத்தது நிறைவேறும் காலமிது.

சாதிக்கும் காலமிது!

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைமிதுனம்: யதார்த்தமான முடிவுகளை எடுப்பீர்கள். மன இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாகனத்தைச் சிலர் மாற்றி அமைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலதிகாரிகளிடம் பக்குவமாகப் பேசி சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

நண்பர்கள் உதவி கிடைக்கும்!

கடகம்:
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களே! வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வலியவந்து பேசுவார்கள். நண்பர்கள் உதவுவார்கள். வேலைச்சுமை இருக்கும். கண் எரிச்சல், டென்ஷன் வந்து நீங்கும். சில ருக்குப் பெரிய பதவி தானாகத் தேடிவரும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும்.  ஒரே நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் வேளையிது.  

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைசிம்மம்:
துணிச்சல் மிக்கவர்களே! பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்த வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வரும். வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

வெளிநாட்டு வாய்ப்பு வரும்!

கன்னி: உதவி என்று வருபவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்களே! உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சமயோசிதமாக யோசிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.  ஒருபடி முன்னேறும் காலமிது.

திருமணம் கைகூடும்!

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைதுலாம்: களங்கமில்லாத பேச்சுக்குச் சொந்தக்காரர்களே! சவாலான காரியங் களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள். புதிய வேலை அமையும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் முடியும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்றுமதி மூலம் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பழைய பிரச்னைகள் தீரும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

வெளியூர் பயணம் வாய்க்கும்!

விருச்சிகம்: சொன்ன சொல் தவறாதவர் களே! பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் இருக்கும். மனக்கசப்பு நீங்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். வெளிச்சத்தை நோக்கி பயணிக்கும் வேளையிது.

நல்ல வரன் அமையும்!

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைதனுசு:
மனவலிமை மிக்கவர்களே! இதமாகப் பேசி சாதிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பீர்கள். முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார். நிதானித்து செயல்பட வேண்டிய தருணமிது.

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

வியாபாரத்தில் கவனம் தேவை!

மகரம்: தயாள குணம் கொண்டவர்களே! அலட்சியப்போக்கு மாறும். கௌரவமான பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பிரபலங்களைச் சந்திப்பீர் கள். இழுபறியான பணிகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி நிலவும். சொத்து விவகாரங்களை நிதானமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். விட்டுக்கொடுக்க வேண்டிய காலமிது.

ஜாமீன்  கையெழுத்திட வேண்டாம்!

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைகும்பம்: லட்சியக் கனவுடன் வாழ்பவர்களே! நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தடைகள் நீங்கும். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பெற்றோர் உதவுவார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைய வாய்ப்பிருக்கிறது. முக்கிய முடிவுகளைக் கவனமாகக் கையாளப் பாருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.  விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

புதிய வாகனம் வாங்குவீர்கள்!

மீனம்:
கற்பனை சக்தி மிகுந்தவர்களே! மனோபலம் அதிகரிக்கும். இங்கிதமாக, இதமாகப் பேசி பல காரியங்களைச் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். கல்யாணம் கூடி வரும்.  பிள்ளைகளால் பிரச்னை, நிம்மதியின்மை, டென்ஷன் வந்து போகும். வழக்கில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஓசைப்படாமல் வளரும் வேளையிது.