Published:Updated:

ரேவதி

ரேவதி

ரேவதி
ரேவதி

முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும் தருணம் இது. பண வரவு அதிகரிக்கும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

11.10.2012 முதல் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்காதீர்கள். பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் செய்வோருக்கு சில சங்கடங்கள் வந்து செல்லும். பக்குவமாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய தருணம் இது. 5.11.2013 முதல் உடல்நலம் சீராகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பணநடமாட்டத்துக்குக் குறைவிருக்காது. மதிப்பு மற்றும் அந்தஸ்து உயரும். நல்லவர்கள் மற்றும் பிரபலங்களால் பேருதவி கிடைக்கும்.  

ரேவதி நட்சத்திரத்துக்கான தேவதை- பூஷா. ஆதித்தர்களில் ஒருவரான இவரை தியானிப்பதுடன், சனைச்சரரையும் வழிபடலாம். குறிப்பாக... திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தலத்துக்குச் சென்று, அங்கேயுள்ள நள தீர்த்தத்தில் நீராடி, சனீஸ்வரரை வழிபட்டாலே, உங்கள் தோஷமெல்லாம் விலகிவிடும்.

வழிபட வேண்டிய தலம்

ரேவதி

தமிழகத்திலும் சனி பகவான் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிற தலங்கள் அதிகம் உள்ளன. திருநள்ளாறு திருத்தலம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு ஸ்ரீபொங்கு சனீஸ்வரர் கோயில், மதுரை அருகேயுள்ள குருவித்துறை, தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் ஆகிய தலங்களுக்குச் சென்று சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

சனிக்கிழமைகளில் சனி பகவானைத் தரிசிப்பதுடன், கறுப்பு வஸ்திரம் சார்த்தியும், எள் தீபங்கள் ஏற்றி வைத்தும், உரிய நைவேத்தியங்கள் சமர்ப்பித்தும் ஸ்ரீசனைச்சரரை வணங்கி வழிபட சங்கடங்கள் யாவும் தீரும். ஸ்ரீசனி பகவானின் கருணையாலும் அருளாலும் வியாபாரத்தில் வெற்றி, உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் நிம்மதி ஆகியவற்றைப் பெறலாம். அதேபோன்று, தினமும் காகங்களுக்கு அன்னம் இடுதலும் அளப்பரிய நன்மையைப் பெற்றுத் தரும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள், தங்களின் நட்சத்திர நாளில், அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று சனி பகவானைத் தரிசித்து, சனி காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபட்டு வாருங்கள்; சந்தோஷம் பொங்க வாழ்வீர்கள்!

ரேவதி