Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜூலை 18 முதல் 31 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜூலை 18 முதல் 31 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

திரிகளுக்கும் உதவி செய்பவர் களே! சூரியன் 4-ல் இருப்பதால் பிள்ளைகளின் கல்வி, திருமண

ராசிபலன்

விஷயங்களை முடிப்பதில் அலைச்சல் இருக்கும். உங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும். பழுதான பழைய வாகனங் களைக் கொடுத்துவிட்டு புது வாகனங்கள் வாங்குவீர்கள்.

27-ம் தேதி முதல் 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் அமர்வதால் பூர்வீகச் சொத்து விஷயங்கள் முடிவுக்கு வரும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். ஆனால், தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களை எதிர்த்தவர்கள் விலகிப்போவார்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களின் சாமர்த்தியத்தால் வியாபாரத்தின் தரம் உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சீரிய சிந்தனையால் சாதிக்கும் தருணம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம்

எதையும் திட்டமிட்டுச் செய்பவர் களே! சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் மன இறுக்கம் நீங்கும். அரசாங்க

ராசிபலன்

விஷயங்கள் சாதகமாகும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி, காரியங்களைச் சாதிப்பீர்கள். வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.

27-ம் தேதி முதல் ராகு 3-ல் இருப்ப தால் பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள். கேது 9-ல் இருப்பதால் எதிர்காலத்துக்காகச் சேமிக்கவும் செய்வீர்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் நண்பர்கள் ஆதரவாக இருப்பர். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து செல்லும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவீர்கள்.

சமயோசித அறிவால் முன்னேறும் தருணம் இது.

மிதுனம்

மற்றவர்களுக்கு உதவத் துடிப்பவர் களே! உங்களின் ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால்

ராசிபலன்

பண வரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். வீடு கட்டுவதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் வயிற்றுவலி, தலைவலி நீங்கும். எனினும், கண் மற்றும் பல் வலி வந்து போகும்.

26-ம் தேதி முதல் சுக்கிரன் ராசியில் அமர்வதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடையே செல்வாக்கு உயரும். கௌரவப் பொறுப்புகளும் பதவிகளும் உங்களைத் தேடி வரும். 27-ம் தேதி முதல் ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததால் பேச்சில் நிதானம் தேவை. அவசரப் பட்டு பேசி மற்றவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்; புது ஏஜென்சி எடுப்பீர்கள்.  வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறை யினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம் இது.

கடகம்

பண்பாட்டை மதித்து நடப்பவர்களே! சூரியன் ராசிக்குள் நிற்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். கண் எரிச்சல், டென்ஷன் வந்து நீங்கும். ஆனால், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ராசிபலன்

தேவையான பணம் கைக்கு வரும். வெளிநாட்டில் இருப்பவர்களாலும் வேற்றுமொழி பேசுபவர்களாலும் ஆதாயம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

27-ம் தேதி முதல் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்வதால் பண வரவு அதிகரிப்பதுடன் செலவு களும் அதிகரிக்கும். தலைச்சுற்றலும், முன்கோபமும் வந்து செல்லும்.  உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முடிவுகள் எடுக்க வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள். பங்குதாரர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வந்து செல்லும். கலைத்துறையினரே! உங்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும்.

பக்குவமாகப் பேசி சாதிக்கும் நேரம் இது.

சிம்மம்

மன உறுதியுடன் நினைத்ததை முடிப்பவர்களே! சூரியன் 12-ல் மறைந் திருப்பதால் அரசாங்க காரியங்களில்

ராசிபலன்

எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர் களுக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். மனக் குழப்பங்கள் நீங்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

27-ம் தேதி முதல் 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் அமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் மன இறுக்கம் நீங்கும். தைரியம் கூடும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாகக் கிடைக்கும். வேலையாட்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு மிகவும் உதவுவார்கள்.உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்ப்பாடுகளும் மறைமுக எதிர்ப்பு களும் வந்து நீங்கும். கலைத் துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

எங்கும் எதிலும் வெற்றி பெறும் தருணம் இது.

கன்னி

ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிப்பவர் களே! சூரியன் லாப வீட்டில் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும்.

ராசிபலன்

அரசாங்கத் தாலும் அதிகாரிகளாலும் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்திருக்கும் வெளிநாட்டுப் பயணம் கூடி வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர் களுக்கு வேலை கிடைக்கும்.

27-ம் தேதி முதல் ராகு 11-ல் அமர்வதால் சவாலான காரியங்களை யும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் தனித் திறமையைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். ஆனால், கேது 5-ல் இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். பழைய வேலையாட்கள், பங்குதாரர்கள் திரும்ப வந்து சேருவார்கள். உத்தியோகத்தில் குழப்பங்களும் சிக்கல்களும் நீங்கும். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

தொட்ட காரியங்கள் துலங்கும் நேரம் இது.

துலாம்

ராசிபலன்

உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருக்கும் காரியங்கள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 25-ம் தேதி வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ல் அமர்வதால் வீண் அலைச்சல், மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் கருத்து வேற்றுமை மறையும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக இருக்கும்.

27-ம் தேதி முதல் 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் அமர்வதால் பழைய கடனைத் தீர்க்கும் அளவுக்கு ஓரளவு பண வரவு உண்டு. மனதில் இருந்து வரும் தடுமாற்றம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பெரிய முதலீடு களைத் தவிர்ப்பது நல்லது. வேலையாட் களுடன் போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில நேரங்களில் கண்டிப்பாகப் பேசினா லும், கனிவாகவும் நடந்துகொள்வார். கலைத்துறையினரே! நீண்ட நாள் களாகத் தடைப்பட்ட வாய்ப்புகள், இப்போது கைகூடி வரும்.

தடுமாற்றங்கள் நீங்கும் தருணம் இது.

விருச்சிகம்

ராசிபலன்

சூழ்நிலையை அறிந்து நடப்பவர் களே! சூரியன் 9-ல் இருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் சில உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். எதிர்பாராத பண வரவு உண்டு. ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

27-ம் தேதி முதல் ராகு ஒன்பதிலும், கேது மூன்றிலும் இருப்பதால் குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்று வீர்கள். இதுவரையிலும் மந்தமாகக் காணப்பட்ட பிள்ளைகள், இனி முதல் சுறுசுறுப்பாகச் செயல்படுவர்.

புதன் வலுவான வீடுகளில் செல்வதால் வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வேலையாட்களிடமும் பங்குதாரர்களிடமும் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறை யினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

மதிப்பும் மரியாதையும் கூடும் நேரம் இது.

தனுசு

தனித்துவமாகச் செயல் படுபவர்களே! 25-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள்

ராசிபலன்

வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு  உண்டு. 26-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்வதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

27-ம் தேதி முதல் ராகு எட்டிலும் கேது இரண்டிலும் அமர்வதால் பல்வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். எதிர்பாராத வகையில் செலவுகளும் ஏற்படக்கூடும். பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளை ஊக்கப்படுத்துவீர்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் சில நெருக்கடிகளைச்  சந்திக்க வேண்டி வரும். மறைமுகத் தொந்தரவுகளும் உண்டாகும். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் மறையும்.

எதிர்நீச்சல் போடவேண்டிய காலம் இது.

மகரம்

மற்றவர்களின் கஷ்டங்களைப் போக்குபவர்களே! சூரியன் 7-ல் அமர்ந்திருப்பதால் வாழ்க்கைத் துணைக்கு

ராசிபலன்

சிறுசிறு அறுவை சிகிச்சைகள் ஏற்படக்கூடும். சுக்கிரன் 25-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள்.

26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. 27-ம் தேதி முதல் ராகு ஏழிலும் கேது ஒன்றிலும் அமர்வதால் குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு கொள் முதல் செய்வீர்கள். பங்குதாரர்களால் பிரச்னை உண்டாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக் காமல் போகும். கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகுத்தறிந்து செயல்படவேண்டிய நேரம் இது.

கும்பம்

லட்சியத்துடன் வாழ நினைப்பவர் களே! சூரியன் 6-ல் வலுவாக இருப் பதால் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த

ராசிபலன்

வேலைகள் தடையின்றி முடியும். ஆளும் தரப்பினரால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 25-ம் தேதி வரை சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். பிறகும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

27-ம் தேதி முதல் ராகு 6-லும் கேது 12-லும் அமர்வதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 21-ம் தேதி வரை புதன் 6-ல் நிற்பதால் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் பகை ஏற்படும். 22-ம் தேதி முதல் புதன் 7-ல் அமர்வதால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.

வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையாட்களும் வாடிக்கையாளர் களும் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை மனதுக்கு உற்சாகம் தரும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறை யினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிரபலங்களால் பாராட்டப்படும் நேரம் இது.

மீனம்

சுயநலச் சிந்தனை இல்லாத அன்பர்களே! சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகளால் பிரச்னைகள் ஏற்படும்.

ராசிபலன்

வீண் டென்ஷன் உண்டாகும். வழக்கு களில் பொறுமை அவசியம். சுக்கிரன் வலுவாக இருப்பதால் விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களாலும் பழைய நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும்.

27-ம் தேதி முதல் ராகு 5-ல் அமர்வதால் பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். ஆனால், கேது லாப வீட்டில் வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக் கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

22-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால் உத்தியோகம், உயர் கல்வியின் காரண மாக பிள்ளைகளைப் பிரிய நேரிடும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு வரும்.

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism