Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

Published:Updated:
ராசிபலன்!
ராசிபலன்!
ராசிபலன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிப்பவர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன்- மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்து வாங்குவது- விற்பது லாபகரமாக அமையும். புதன் சாதகமாக இருப்பதால், அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். 15-ஆம் தேதி முதல், சூரியன் 10-ல் நுழைவதால் முன்கோபம் குறையும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். தந்தையுடனான கருத்துமோதல்கள் விலகும். கன்னிப் பெண்களுக்கு, தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும்.

சனி பகவான் வலுவாக இருப்பதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். புது வாய்ப்புகள் வரும். கலைத் துறையினருக்கு, வரவேண்டிய சம்பளப் பாக்கி வந்து சேரும்.

தொட்ட காரியங்கள் துலங்கும் நேரம் இது.

ராசிபலன்!

செய்யும் தொழிலை தெய்வமாக மதிப்பவர் நீங்கள். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பகைவரும் நண்பர்களாவர். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவர். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்திகள் வரும்.

கன்னிப் பெண்களுக்கு விலையுயர்ந்த ஆடை - ஆபரணம் சேரும். செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால், நேர்மறை எண்ணங்கள் தோன்றும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். குரு பகவான் வலுவாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புண்ணிய தலங்களுக்குச் சென்று, காணிக்கையை சமர்ப்பிப்பீர்கள். புதனும், ராகுவும் 8-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் செலவு, சலிப்பு, சோர்வு, உறவினருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவர். வியாபாரத்தில், தேங்கிய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் தைரிய மாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

புது முயற்சிகளில் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்!

ழமாக யோசித்து முடிவெடுப்பவர் நீங்கள். சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வி.ஐ.பி-களின் ஆதரவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.   வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பணம் வந்தாலும், செலவுகளும் துரத்தும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், பிள்ளைகளை அன்பால் அரவணைப்பீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மனைவியுடன் மனத்தாங்கல் ஏற்படலாம்.

8-ல் செவ்வாய் நிற்பதால் மன இறுக்கம், முன்கோபம், சிறு சிறு தீக்காயம், வாகன விபத்துகள் ஏற்படலாம். சொத்து வாங்குவது- விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கன்னிப் பெண்கள், எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளே, உங்களது கோரிக்கைகள் மேலிடத்தில் ஏற்கப்படும். குரு 10-ல் தொடர்வதால், வீண் வாக்குறுதிகள் வேண்டாம். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. குலதெய்வ வழிபாட்டால் மன அமைதி கிட்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோ கத்தில் வேலைச்சுமை இருந்தாலும், அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதி உண்டு. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் தள்ளிப்போகும்.

வளைந்துகொடுக்க வேண்டிய தருணம் இது.

ராசிபலன்!

னக்கென தனிப்பாதை வகுத்துச் செயல்படுபவர் நீங்கள். 5-ஆம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தேங்கிக்கிடக்கும் வேலைகளை விரைவில் முடிப்பீர்கள். வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலைவாய்ப்பு குறித்த நல்ல சேதி வரும். சேமிக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். யோகாதிபதி செவ்வாய் 7-ல் உச்சம் பெற்றிருப்பதால் நகை வாங்குவீர்கள்.

சொத்து வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டு.மனைவிவழி உறவினர்கள், உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவர். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், அவ்வப்போது வீண் டென்ஷன், நண்பர்கள்- உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அரசியலில் செல்வாக்கு கூடும்; பெரிய பதவிகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட திருமணம் கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில், புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவசாலிகளைப் பணிக்கு அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது.

ராசிபலன்!

நீதி- நேர்மைக்காகக் குரல் கொடுப்பவர் நீங்கள். செவ்வாய் 6-ஆம் வீட்டில் அமர்ந்திருப் பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். பழைய கடன் பிரச்னை தீர புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். 15-ஆம் தேதி முதல், ராசிநாதன் சூரியன் 6-ஆம் வீட்டில் நுழைவதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசால் அனுகூலம் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு கூடும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஜனவரி 11 மற்றும் 12-ஆம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம்; எதிலும் பொறுமை தேவை. பாதச் சனி தொடர்வதால், பேச்சில் நிதானம் அவசியம். சித்தர்கள், மகான்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கமிஷன், ஷேர் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், செல்வாக்கு கூடும். கலைத் துறையினரை, பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

மூளைபலத்தால் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்!

னிமையான பேச்சால் எல்லோரது மனதிலும் இடம்பிடிப்பவர் நீங்கள். குரு பகவான் வலுவாக நிற்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். யோகாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

உங்கள் ராசிநாதன் புதன், ராகுவுடன் நிற்பதால் அவ்வப்போது வீண் டென்ஷன், இனம்புரியாத பயம் வந்து நீங்கும். சிலர், வீடு மாறவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 12-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்; வேலை அதிகரிக்கும். செவ்வாய் 5-ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், மனக்குழப்பம் வந்து நீங்கும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனை இல்லாமல் புதிய முடிவுகள் எடுக்கவேண்டாம். 15-ஆம் தேதி முதல், சூரியன் 5-ல் நுழைவதால், அரசு காரியங்கள் இழுபறியாகும். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினர், கிடைக்கும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வது சிறப்பு.

தடைகள் உடைபடும் தருணம் இது.

ராசிபலன்!

ல்லோரையும் எளிதில் நம்பிவிடும் நீங்கள், காலம்கடந்தே சிலரது குணத்தைத் தெரிந்து கொள்வீர்கள். ராசிநாதன் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், தொட்டது துலங்கும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சொத்து வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உறவினர்கள்- நண்பர்களால் நன்மை உண்டு. கன்னிப் பெண்களுக்கு, ஆடை- ஆபரணம் சேரும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழக்கு சாதகமாகும்.

சூரியன் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி கிட்டும். அதிகாரிகள் நட்பு பாராட்டு வார்கள். அரசியல்வாதிகள், மேலிடத்தால் மதிக்கப்படுவார்கள். 15, 16 மற்றும் 17-ஆம் தேதி நண்பகல் 12:30 மணி வரை சந்திராஷ்டமம்; எவரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 6-ல் குருவும், ஏழரைச் சனியும் தொடர்வதால் தாழ்வுமனப்பான்மை, வீண் பழி, செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். ரியல் எஸ்டேட், மர வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சிக்கனம் தேவைப்படும் நேரம் இது.

ராசிபலன்!

ள்ளன்று வைத்து புறமொன்று பேசாதவர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் 3-ஆம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், புதுத் தெம்பு பிறக்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவடையும். பணவரவு சரளமாக இருக்கும். மகளின் திருமணம் சிறப்பாக நடக்கும்.சகோதர வகையில், கருத்து வேறுபாடுகள் மறையும். இழுபறி வழக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, புது மனை வாங்க முன்பணம் தருவீர்கள். ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால் தோற்றப்பொலிவு, செயல்வேகம் கூடும்.

புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த உதவியுண்டு. கன்னிப் பெண்களே, பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வசதியான வீட்டுக்கு குடிபுகுவீர்கள். 15-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆம் வீட்டில் அமர்வதால், தடைகளும் அலைச்சலும் நீங்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். 17-ஆம் தேதி நண்பகல் 12:30 மணி முதல், 19-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம்; பொறுமை அவசியம். அரசியல்வாதிகளின் செல்வாக்கு கூடும். ராகு- கேது சரியில்லாததால், அவ்வப்போது பழைய பிரச்னைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு, திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

சொன்ன சொல்லை நிறைவேற்றும் வேளை இது.

ராசிபலன்!

வருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்பதில் உறுதியானவர் நீங்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால், புதிய வேலை கிடைக்கும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வ புண்ணி யாதிபதி செவ்வாய் 2-ல் உச்சம் பெற்றிருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்களின் நிர்வாகத்திறமை கூடும். அடகில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள். கன்னிப் பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வார்கள். புது வேலை கிடைக்கும். குரு பகவான் 4-ஆம் வீட்டில் நிற்பதால் வீண் டென்ஷன், சிறுசிறு விபத்துகள் வந்து போகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சூரியனால் முன்கோபம், காரிய தாமதம், மன உளைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகள், வீண் செலவுகளையும் விமர்சனத்தையும் தவிர்க்கவும். 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல், 21-ஆம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம்; எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில், பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரிகள் நெருக்கமாவர். கலைத் துறையினரே, இழந்த புகழை மீண்டும் பெற, யதார்த்தமான படைப்புகளைக் கொடுக்கப்பாருங்கள்.

ரகசியங்களை காக்க வேண்டிய தருணம் இது.  

ராசிபலன்!

வித்தியாசம் பார்க்காமல் எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகுபவர் நீங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தம்பதிக்கு இடையே கசப்பு உணர்வு மறையும். ஆடை- அணிகலன்கள் சேரும். புது வீடு, வாகன வசதி பெருகும். புதன் சாதகமாக இருப்பதால், நல்ல செய்திகள் வரும். சிலர், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் அடி வயிறு வலிக்கும்; கண் எரிச்சல் வந்து போகும். சகோதரர் உதவுவார். வழக்குகளில் அவசரம் வேண்டாம். கன்னிப் பெண்கள், எவரையும் எளிதில் நம்ப வேண்டாம். தெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

சூரியன் சாதகமாக இல்லாததால், காரியங்களில் அலைச்சல் உண்டு. கர்ப்பிணிகள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல், 23 தேதி வரை சந்திராஷ்டமம்; சிக்கனம் தேவை. அரசியல்வாதிகள், கட்சி மேலிடத்தை பகைக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத் துறையினரே, உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய நேரம் இது.

ராசிபலன்!

திலும் ஒரு நியாயத்துடன் செயல்படுபவர் நீங்கள். புதன் வலுவாக இருப்பதால் அழகு, அறிவு கூடும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வர வேண்டிய பணமும் கைக்கு வரும். புது வீடு, மனை யோகம் உண்டு. நவீன சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் உண்டு. சூரியன் சாதகமான நட்சத் திரங்களில் செல்வதால், அதிகாரிகள் அறிமுகமாவர். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சியாக அமையும். அரசு காரியங்கள் சாதகமாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குரு பகவான் வலுவாக இருப்பதால் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு  தீர்வு காண்பீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி கிடைக்கும். கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். செவ்வாய் 12-ல் நிற்பதால் வீண் செலவு, அலைச்சல், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 24-ஆம் தேதி சந்திராஷ்டமம்; எதிலும் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில், புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். இரும்பு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில், உங்களது திறமைகள் வெளிப்படும்.கலைத் துறையினருக்கு, புகழ் ஓங்கும்; சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

வெற்றிக்கு வித்திடும் காலம் இது.

ராசிபலன்!

நாளை நமதே என்று நம்பிக்கையுடன் வாழ்பவர் நீங்கள். யோகாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றியே! எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன்- மனைவிக்குள் சண்டை- சச்சரவு நீங்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணி முழுமையடைய வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெளி வட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்துடனான பூசல்கள் மறையும். வேற்று மொழி- மாநிலத்தவரால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களுக்கு சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைத் துறையினரைக் குறித்த வதந்திகள் யாவும் நீங்கும்.

அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் தருணம் இது.

ராசிபலன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism