Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஆகஸ்ட் 1 முதல் 14 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஆகஸ்ட் 1 முதல் 14 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்எதிர்பார்ப்புகள் இல்லாமல் பழகுபவர்களே!

ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். ஆனால், அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அலைச்சல், வீண் பகை, நிம்மதிக் குறைவு வந்து செல்லும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். 5-ம் தேதி வரை புதன் 5-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். 6-ம் தேதி முதல் புதன் 4-ல் வக்கிரத்தில் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ராகு 4-லும் கேது 10-லும் இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர்களே! பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

உழைப்புக்கான பலன் கிடைக்கும் நேரம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தெளிவு உண்டாகும். கணவன் மனைவி இடையில் கசப்பு உணர்வு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சனி 7-ல் நிற்பதால் வாழ்க்கைத்துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சூரியனும் செவ்வாயும் 3-ல் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இளைய சகோதர வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் சில நேரங்களில் பிடிவாதம் பிடிப்பார்கள். உத்தியோகத்தில் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

தைரியமாக முடிவுகள் எடுக்கும் நேரம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம்,திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்

கனிவாகப் பேசி சாதிப்பவர்களே!

சனி பகவான் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் பெரிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பிற மொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் நிற்பதால் பேசும்போது அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆனால், சகோதரர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ராசிக்குள் இருப்பதால் வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரு சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். 4-ல் குரு நீடிப்பதால் எதிர்காலம் பற்றிய கவலை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புது தொடர்புகள் ஏற்படும். வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும்.

முயற்சிகளால் முன்னேறும் காலம் இது.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

மற்றவர்களின் நலனுக்குப் பாடுபடுபவர்களே!


ராசிபலன்

சனி 5-ல் தொடர்வதால் பிள்ளைகள் குறித்த கவலை வந்து செல்லும். ஆனால், ராசிக்கு 12-ல் நிற்கும் சுக்கிரனால் எதிர்பாராத பணவரவு உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். ராசிக்குள் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் ஏற்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சந்தர்ப்பம் சூழ்நிலை அறிந்து நடந்துகொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டுப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி அன்பாக இருந்தாலும், சக பணியாளர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் வரக்கூடும்.

யதார்த்தமாகப் பேசி சாதிக்கும் தருணம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்எடுத்த முடிவிலிருந்து மாறாதவர்களே!

செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருக்கவும். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகக்கூடும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும். குரு பகவான் வலுவாக இருப்பதால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஒரு சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் கூடிவரும். ஆனால், சனி 4-ல் நிற்பதால் மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவு, வீண் டென்ஷன் வந்து செல்லும். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். கலைத்துறையினர்களே! புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

புரட்சிகரமான முடிவுகள் எடுக்கும் நேரம் இது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

தோல்வியிலும் துவளாத மனம்கொண்டவர்களே!

ராசிபலன்

சனி பகவான் 3-ல் தொடர்வதால் வெளிநாட்டில் இருப்பவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். சகோதரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் இனம் தெரியாத கவலைகளும், மன இறுக்கங்களும் வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

தடைகளைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

காத்திருந்து காரியம் சாதிப்பவர்களே!

ராசிபலன்


செவ்வாய் 10-ம் வீட்டில் கேந்திரபலம் பெற்று நிற்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். வி.ஐ.பி-க்களின் ஆதரவு கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால் வேலைச் சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். புதனும் சாதகமாக இருப்பதால் செல்வாக்குக் கூடும். பணவரவும் திருப்தி தருவதாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். பாகப்பிரிவினையும் சுமுகமாக முடியும். ஆனால், குரு 12-ல் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத்துறையினர்களே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

நேர்வழியில் சென்று இலக்கை அடைபவர்களே!

ராசிபலன்


சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் பணவரவு இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். குரு லாப வீட்டிலேயே நிற்பதால் மன நிம்மதி கிடைக்கும். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். சூரியன் 9-ல் நிற்பதால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். ராசிக்குள்ளேயே சனி இருப்பதால் பெரிய நோய்கள் இருப்பதைப் போன்ற மன பிரமை உண்டாகும். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும், அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

வளைந்துகொடுத்துச் செல்ல வேண்டிய காலம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

மனதில் பேதம் இல்லாமல் பழகுபவர்களே!

ராசிபலன்


செவ்வாயும் சூரியனும் சாதகமாக இல்லை என்பதால் மனதில் இனம்தெரியாத கவலை வந்து செல்லும். நெருங்கிய நண்பர்கள் விலகிச் செல்வார்கள். சின்னச் சின்ன விபத்துகள், பண இழப்பு, ஏமாற்றம், மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களை நினைத்து கவலைப்படுவீர்கள். ராசியை சுக்கிரன் பார்த்துக்கொண்டிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். பணவரவும் திருப்தி தரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மகனின் உயர்கல்வி முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில்விட்டதை மறுபடியும் மீட்பீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்ப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும்.

பிற்பகுதியில் வெற்றிகள் உண்டாகும் தருணம் இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்களே!


ராசிபலன்

சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மகனின் திருமண முயற்சிகள் சாதகமாகும். வேற்று இனத்தவர்களால் நன்மை ஏற்படும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் ஆதரவாகப் பேசியவர்கள் எல்லாம் ஒதுங்கிச் செல்வார்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வியாபாரத்தில் முனைப்பாகச் செயல்படுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி அன்புடன் நடந்துகொள்வார். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுவது நல்லது. கலைத்துறையினர்களே! படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி இருக்கும்.

எதிர்ப்புகளைக் கடந்து ஏற்றம் பெறும் நேரம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

அனுபவ அறிவால் சாதிப்பவர்களே!

ராசிபலன்


செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். ஆனால், வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5-ல் நிற்பதால் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குரு 8-ல் மறைந்திருப்பதால் உயர்கல்வி, உத்தியோகத்தின் காரணமாகப் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரிடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். 6-ம் தேதி முதல் புதன் வக்கிரத்தில் வருவதால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகை ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்கள், பங்குதாரர்களால் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் உண்டாகும். கலைத்துறையினர்களே! விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.

பொறுமையால் புகழடையும் நேரம் இது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்பான பேச்சுக்குக் கட்டுப்படுபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் தைரியமாகச் சவால்களை எதிர்கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சி களால் வீடு களை கட்டும். ஆனால், செவ்வாய் 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளின் போக்கு கவலை தரும். நெருங்கிய உறவினர் ஒருவருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கனவுத் தொல்லை ஏற்படும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சுக்கிரன் 4-ம் வீட்டில் நிற்பதால் வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். புறநகர்ப் பகுதியில் புது வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்குப் புது வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. ஆனால், சொத்து வாங்கும்போது பத்திரங்களைச் சரிபார்த்து வாங்கவும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். பங்குதாரர்களிடம் காரசாரமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களுடன் பனிப்போர் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர்களே! மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.

தன்னம்பிக்கை துளிர்விடும் நேரம் இது.