தன்னம்பிக்கை
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்!

மேஷம்: எதிர்பார்ப்புகள் இல்லாமல் எதிரிகளுக்கும் உதவுபவர்களே! பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தோற்றப் பொலிவு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வங்கியில் லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.  சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பெருந்தன்மையாகப் பேசி சாதிக்கும் தருணமிது.

எதிர்பாராத வகையில் பணம் வரும்!

ரிஷபம்: தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர்களே! அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

ராசிபலன்

தாயாரின் உடல்நலம் சீராகும். தடைப்பட்ட சில காரியங்களைப் பிரபலங்களின் உதவியால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும், எதிர்பாராத வகையில் பணம் வரும். பழைய வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினரைச் சந்திப்பீர்கள்.   விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் நேரமிது.

திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கும்!

ராசிபலன்

மிதுனம்: யதார்த்தமான முடிவுகளால், எல்லோராலும் விரும்பப்படுபவர்களே! அரசு காரியங்கள் விரைந்து முடியும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். பெரிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பிற்பகுதியில் சாதிக்கும் வேளையிது.

நட்பு வட்டம் விரியும்!

கடகம்: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! கண் எரிச்சல், கண் வலி

ராசிபலன்

வந்து நீங்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நட்பு வட்டம் விரியும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.  சில விஷயங்களைப் போராடி முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலமிது.

புதுத் தெம்பு பிறக்கும்!

ராசிபலன்

சிம்மம்: பலரும் பலவாறு பேசினாலும், எடுத்த முடிவிலிருந்து மாறாதவர்களே!  அலைச்சல்களும், செலவுகளும் இருந்தாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதுத் தெம்பு பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கணவன் வழியில் நல்ல செய்தி உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். பணத்தின் அருமையைப் புரிந்துகொள்ளும் தருணமிது.

கௌரவப் பதவி தேடி வரும்!

கன்னி: நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களைச் சிந்திக்க வைப்பவர் களே! அரசாங்க விஷயம் சாதகமாக

ராசிபலன்

முடியும். திடீர் பயணங்கள் உண்டு. எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு வாங்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகிச்சென்ற பழைய சொந்த பந்தங்கள் வலியவந்து பேசுவார்கள். புது பொறுப்புகளும், கௌரவப் பதவிகளும் தேடி வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில் யுக்திகளைக் கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். வெற்றிப் பாதையில் பயணிக்கும் காலமிது.

பண வரவு திருப்தி தரும்!

ராசிபலன்

துலாம்: காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித் தாலும், அனுசரித்துப் போங்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் வேளையிது.

வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்!

விருச்சிகம்: தாமதமானாலும் நேர்வழியிலேயே சென்று இலக்கை அடைபவர்களே! புது வேலைக்கு முயல் பவர்களுக்கு நல்ல பதில் வரும். அரசால் ஆதாயம் உண்டு. தந்தையுடனான மோதல்கள் விலகும். வராது

ராசிபலன்

என்றிருந்த பணம் வரும்.

புதிதாக டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நிம்மதி உண்டு. கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். புதிய நண்பர்களின் நட்பால் பழைய சிக்கலுக்குத் தீர்வு காணும் நேரமிது.

வாகன வசதி பெருகும்!

ராசிபலன்

தனுசு: பாகுபாடு பார்க்காமல் பழகும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவீர்கள். வீண்டென்ஷன், அலைச்சல் வந்துபோகும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் பலனடைவீர்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புண்டு. கொஞ்சம் கவனம் தேவை. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.

புதிய நட்பு மலரும்!

மகரம்: தன்னம்பிக்கையுடன் போராடி தடைகளைக் கடந்துச் செல்வீர்கள்! தடைப்பட்ட வேலைகள் முடியும்.

ராசிபலன்

அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி கிட்டும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். புதன் சாதகமாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வீட்டை விரிவு படுத்தி கட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த அதிருப்தி, மோதல்கள் விலகும். புது நட்பு மலரும்.  கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடக்கூடாத வேளையிது.

வீடு மாற்றம் நிகழும்!

ராசிபலன்

கும்பம்: அனுபவ அறிவு அதிகம் கொண்டவர்களே! அரசால் அனுகூலம் உண்டு. தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடந்த கால சுகமான அனு பவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். ஓரளவு பணம் வரும் என்றாலும், பற்றாக் குறையும் நீடிக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.  உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வரும். பூர்வீகச் சொத்து சிக்கலுக்குச் சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிக்கும் தருணமிது.

பழைய பாக்கிகள் வசூலாகும்!

மீனம்: ஆன்மிகத்தை அதிகம் அறிந்துவைத்திருப்பவர்களே! அரசு வகையில் ஆதாயம் உண்டு. உங்களின்

ராசிபலன்

செல்வாக்குக் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம் கூடி வரும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர் கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களை யார் விமர்சித்தாலும் பதற்றப்படாதீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வேளையிது.