Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஆகஸ்ட் 15 முதல் 28 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஆகஸ்ட் 15 முதல் 28 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

மேஷம்

முற்போக்குச் சிந்தனை கொண்ட வர்களே! உங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வ தால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். நவீன ரக வாகனம், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

ராகு, சூரியன், செவ்வாய் ஆகியோர் 4-ம் இடத்தில் இருப்பதால் கடன்களை நினைத்துக் கலக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சகோதர வகையில் அலைச்சல் உண்டா கும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அஷ்டமச் சனியும் சகட குருவும் தொடர்வதால் காரியங்களை முடிப்பதில் சிற்சில தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் தவறாகவும் புரிந்துகொள்ளக்கூடும். எதிலும் கவனம் தேவை.

வியாபாரத்தில் சந்தை நிலவரங் களை அறிந்து முதலீடு செய்வது அவசியம். வேலையாட்களுடன் போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடுவார்கள்; கவனத்துடன் செயல்படவும். கலைத் துறையினரே! அறிமுகமான நிறுவனங் களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

வளைந்துகொடுத்து முன்னேறும் நேரம் இது.

ரிஷபம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன்ரசிப்புத் தன்மை உடையவர்களே! குரு, ராகு, சூரியன் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். மனதில் துணிவு ஏற்படும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். சகோதரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கண்டகச் சனி தொடர்வதால் வாழ்க்கைத் துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை. கேதுவால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சமயோசித அறிவால் சாதிக்கும் தருணம் இது.

மிதுனம்

ராசிபலன்

மலர்ச்சியுடன் திகழ்பவர்களே! சனி பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்கத் துடிப்பீர்கள். தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணியை  மீண்டும் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிறமொழி பேசுபவர் களால் திருப்பம் ஏற்படும்.

17-ம் தேதி முதல் சூரியன் 3-ல் ஆட்சி பெற்று அமர்வதால் அரசாங்க விஷயம் நல்லபடியாக முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ராகு, கேது மற்றும் குரு சாதகமாக இல்லாததால் வீண் விரயம், ஏமாற்றம், பேச்சால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிக்கலான காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில், புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் சக ஊழியர்களால் இடையூறுகள் வந்து செல்லும். கலைத் துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களது நட்பால் சாதிப்பீர்கள்.

கடின உழைப்பால் முன்னேறும் தருணம் இது.

கடகம்

ராசிபலன்நன்றி மறவாதவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் போராட்டங்களைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

உங்களின் யோகாதிபதியான செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். பிள்ளைகளின் வசதி வாய்ப்புகள் கூடும். கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். சிலருக்குப் புது வேலை அமையும். குரு, சனி மற்றும் சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்தவும். முடிவுகளை எடுக்கும் போது பலமுறை யோசித்து எடுக்கவும்.

வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறு வீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும், அதிகாரிகளின் பாராட்டுகளால் உற்சாகமாகச் செயல் படுவீர்கள். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும்.

 சங்கடங்கள் குறைந்து சாதிக்கும் நேரம் இது.

சிம்மம்

ராசிபலன்

தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களே! 17-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் ஆகிவரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சொத்துகள் வகையில் வில்லங்கம் ஏற்படக்கூடும். சனி 4-ல் தொடர்வதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். தாயாருடன் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும்; உற்சாகம் பிறக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

முயற்சிகள் வெற்றி பெறும் தருணம் இது.

கன்னி

முயற்சியால் முதலிடம் பிடிப்பவர் களே! ராகுவும் சனியும் சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ்,

ராசிபலன்

கௌரவம் உயரும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங் களால் திடீர்த் திருப்பம் உண்டாகும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்குப் புது வேலை கிடைக்கும்.

17-ம் தேதி முதல் சூரியன் 12-ல் ஆட்சி பெற்று அமர்வதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். எனினும், ஜன்ம குரு தொடர்வதால் சில வேலைகளை ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்க வேண்டியிருக்கும். எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் நெளிவுசுளிவு களைக் கற்றுக்கொள்வீர்கள். புது வாடிக்கையாளர்களும் தேடி வருவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் நேரம் இது.

துலாம்

ராசிபலன்

மனிதநேயத்துடன் உதவுபவர்களே!  சூரியன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டாகும். வி.ஐ.பி-க்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள்.

செவ்வாய் பகவான் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் சகோதரர்களால் நன்மை உண்டாகும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வாகனப்பழுதை சரிசெய்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். ஆன்மிகத் தில் ஈடுபாடு உண்டாகும்.

சர்ப்ப கிரகங்களும், சனியும், குருவும் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால் சிலரால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும்; கவனம் தேவை. தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புண்டு. எந்த நிலை யிலும் மனம் தளராமல் செயல்படவும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியால் பிரச்னைகள் ஏற்படக் கூடும். கலைத் துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும்.

முயற்சியால் விட்டதைப்பிடிக்கும் வேளை இது.

விருச்சிகம்

தளராத தன்னம்பிக்கைக் கொண்ட வர்களே! குருவும் சூரியனும் சாதகமாக இருப்பதால் நினைத்தது

ராசிபலன்

நிறைவேறும்.   பணவரவு உண்டு. எதிர்பார்த்த காரியங் கள் நல்ல விதத்தில் முடியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வழக்குகள் சாதகமாகும்.

சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்; பலவிதத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மனதை வாட்டிக்கொண்டிருந்த சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமான முடிவு கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்லதொரு வாழ்க்கைத்துணைவி அமைவாள். புதிய நண்பர்களின் உதவி யால் உற்சாகம் அடைவீர்கள். எனினும் ஜன்மச் சனி தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வெளி உணவு களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் கமிஷன், உணவு வகைகளில் நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கலைத் துறை யினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்; பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சவால்களில் வெற்றி பெறும் தருணம் இது.

தனுசு

சுயமாக வாழ விரும்புபவர்களே! உங்களின் பாக்கியாதிபதியான சூரியன் 17-ம் தேதி முதல் ஆட்சிப் பெற்று

ராசிபலன்

அமர்வதால் பாதியில் தடைப்பட்டு நின்றுபோன பணிகள் எல்லாம் முழுமையடையும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவரது ஆதரவு கிடைக்கும்.

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி உண்டு. வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் ஆகிவரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கில் திருப்பம் உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குரு, சனி மற்றும் சர்ப்ப கிரகங்களின் போக்கு சாதகமாக இல்லாததால் பண விஷயத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக் காதீர்கள். கனவுத் தொல்லைகளால் தூக்கம் குறையும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுத் திணறவைக்கும்.

சில நேரங்களில் வாழ்க்கையே வெறுமையாகிவிட்டது போல் உணருவீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட் களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் உழைக்கவேண்டி வரும். கலைத் துறையினரே! வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற் கொள்வீர்கள்.

தடைகளைக் கடந்து முன்னேறும் வேளை இது.

மகரம்

உள்ளத்தில் களங்கம் இல்லாதவர் களே! குரு சாதகமாக இருப்பதால் பிரச்னைகளின் வேரைக் கண்டறிந்து

ராசிபலன்

களைவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புது வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்வீர்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 8-ல் ஆட்சி பெற்று அமர்வதால் திடீர்ப் பயணங்கள் உண்டு. தள்ளிப்போன அரசாங்க விஷயம் நல்லபடியாக முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

20-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் பணப்பற்றாக் குறை, வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். ஆனால், 21-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் சோர்வு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் மனக் குழப்பம், வீண் விரயம், உடல்நலக் குறைவு வந்து நீங்கும். வாழ்க்கைத்துணையின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத் தில் அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வர். கலைத் துறையினரே! விமர்சனங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

வளைந்து கொடுத்து முன்னேறும் நேரம் இது.

கும்பம்

யதார்த்தவாதிகளே! ராகு சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் பணிந்து போவார்கள். எதிர்பார்த்து ஏமாந்த

ராசிபலன்

தொகை கைக்கு வரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதரர்களால் பயனடைவீர்கள். சொத்து பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள். கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 17-ம் தேதி முதல் சூரியன் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்வதால் அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், சுக்கிரன் 21-ம் தேதி முதல் 6-ல் மறைவதால் சின்னச் சின்ன விவாதங் கள் ஏற்படக்கூடும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். புதனும் 6-ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்பு களுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

சிரமங்களைச் சமாளித்துச் சாதிக்கவேண்டிய நேரம் இது.

மீனம்

அன்பாகப் பேசி சாதிப்பவர்களே! ராசிநாதன் குரு சாதகமாக இருப்பதால்  சாமர்த்தியமான பேச்சால்

ராசிபலன்

தடைகளைத் தகர்த்தெறிவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

17-ம் தேதி முதல் சூரியன் ஆட்சிப் பெற்று 6-ல் மறைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். கடனாக வாங்கி இருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதரர்கள் மதிப்பார்கள்.

ராகு 5-ல் இருப்பதால் பிள்ளை களின் போக்கில் கவனம் செலுத்துவது அவசியம். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களின் கருத்துக்கும் பேச்சுக்கும் முன்னுரிமை தருவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டு. கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டிப் பேசப்படும்.

வசதி வாய்ப்புகள் பெருகும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism