Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரைஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களே!

ராசிபலன்உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் ஆட்சிப்பெற்று இருப்பதால் தைரியம் கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால் வீண் பழி விலகும்.  பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குப் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

ஆனால், செவ்வாய் 5-ல் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் கற்பனைத்திறன் வளரும்.

எதையும் சாதிக்கத் துடிக்கும் நேரம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோல்வி கண்டும் துவளாதவர்களே!

ராசிபலன்

சூரியன் வலுவாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். ராசிநாதன் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, சோர்வு ஏற்பட்டு நீங்கும். 2-ம் தேதி முதல் குரு 6-ல் மறைவதால் வீண் சந்தேகம், விரயம், கவலைகள் வந்து செல்லும்.

 மேலும், கண்டகச் சனியும் தொடர்வதால் வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள், எதிர்பாராத செலவுகள், பொருள் இழப்புகள் வரக்கூடும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைபார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கவனம் தேவை.

விடாமுயற்சியால் சாதிக்கும் நேரம் இது.

ற்றவர்கள் மதிக்கும்படி வாழ்பவர்களே!

2-ம் தேதி முதல் குரு 5-ல் அமர்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். மனதில் தெளிவு

ராசிபலன்

பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு நினைத்தது நடக்கும். 2-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் ராகுவை விட்டு விலகுவதால் உற்சாகம் பெறுவீர்கள். 

சூரியன் 3-ல் அமர்வதால் தைரியமாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் அயல்நாடு செல்வீர்கள். யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். கலைத்துறையினர்களே! புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் கவருவீர்கள்.

தொட்டது  துலங்கும் தருணம் இது.

ற்றுமையின் உயர்வை அறிந்தவர்களே!

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். பணப்பற்றாக்குறை இருக்கவே செய்யும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சம் மனதில் தோன்றும். ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் ஆறுதல் கிடைக்கும். சூரியன் சாதகமாக இருப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். என்றாலும் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் பேச்சால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

ஆனால் குரு, சனி, ராகு, கேது சாதகமாக இல்லாததால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தீர்ப்பு தள்ளிப்போகும். மன இறுக்கம் ஏற்படும். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கலைத்துறையினர்களே! போராடி ஜெயிப்பீர்கள்.

பொறுமையுடன் இருந்து சாதிக்கும் நேரம் இது. 

திலும் புதுமையை விரும்புபவர்களே!

ராசிநாதன் சூரியன் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். பெரிய பதவிகள்

ராசிபலன்

தேடிவரும். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதனும் சாதகமாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். வீடு கட்டும் பணி நிறைவுபெறும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

சுக்கிரன் நன்மை தரும் வீடுகளில் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் உடல் அசதி ஏற்படும். 2-ம் தேதி முதல் குரு 3-ல் மறைவதால் முயற்சிகளில் தடை ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். கடன்களால் கவலை உண்டாகும். ஜாமீன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

எதிர்ப்புகளைக் கடந்து வெற்றிபெறும் வேளை இது.

நினைத்ததை நினைத்தபடி முடிப்பவர்களே!

ராசிபலன்

2-ம் தேதி முதல் குரு 2-ல் அமர்வதால் தடைப்பட்ட விஷயங்கள் முடியும். மனதில் நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ராசிநாதன் புதன் 2-ம் தேதி முதல் ராகுவை விட்டு விலகுவதால் மனக் குழப்பங்கள் நீங்கும். விலகிச்சென்ற உறவினர்கள், நண்பர்கள் வலியவந்து பேசுவார்கள். 12-ல் செவ்வாய் நிற்பதால் இனம்தெரியாத கவலைகள், வீண் விரயம், மனவருத்தம் வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினர்களே! பிறமொழி வாய்ப்புகளால் புகழ் ஏற்படும்.

எதிர்பாராத யோகம் ஏற்படும் தருணம் இது.

ற்றவர்களுக்கு உதவி செய்பவர்களே!

உங்கள் பாக்கியாதிபதி புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய எண்ணங்கள் உண்டாகும்.

ராசிபலன்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட திருமணம் முடியும். சூரியன் சாதகமாக இருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செவ்வாயும் வலுவாக இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

 2-ம் தேதி முதல் குரு ராசிக்குள் அமர்வதால் உடல்நலனில் கவனம் செலுத்தவும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகக்கூடும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

சின்னச்சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரம் இது.

ற்றவர்களை வழிநடத்திச் செல்பவர்களே!

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். மோதல்கள் விலகும். உங்கள் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் தைரியம் பிறக்கும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அரசு காரியங்கள் விரைவாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள்.

 2-ம் தேதி முதல் குரு 12-ல் மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களும் செலவுகளும் ஏற்படும். அவ்வப்போது தூக்கம் கெடும். கடன் பிரச்னையால் அச்சம் வரும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் அதிகாரிகளின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! புதிய வாய்ப்புகள் வரும்.

பிரச்னைகளில் இருந்து விடுபடும் நேரம் இது.

ற்றவர்களை அன்புடன் நேசிப்பவர்களே!

ராசிபலன்உங்களின் பாக்கியாதிபதி சூரியன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். தந்தையின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

செவ்வாய் 9-ல் நிற்பதால் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வீடு, மனை சேரும். சொத்துப் பிரச்னை தீரும். 2-ம் தேதி முதல் ராசிநாதன் குரு 2-ல் அமர்வதால் தடைகள் விலகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் விட்டதைப்பிடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். கலைத்துறையினர்களே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

செல்வாக்கு உயரும் தருணம் இது.

வறுகளைத் தட்டிக்கேட்பவர்களே!

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். புது சொத்து வாங்குவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் கூடிவரும். சூரியன் வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலும் ஏமாற்றங்களும் வந்து செல்லும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். கணவன் மனைவிக்கு இடையில் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள்.

காரியத்தில் கவனம் தேவைப்படும் நேரம் இது.

விருப்புவெறுப்பு இல்லாதவர்களே!

7-ல் நிற்கும் சூரியனுடன் புதனும் 2-ம் தேதி முதல் இணைவதால் மாறுபட்ட அணுகுமுறையால்

ராசிபலன்

வெற்றிபெறுவீர்கள். வி.ஐ.பி-க்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் சுலபமாக முடியும். பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 2-ம் தேதி முதல் குரு 9-ல் அமர்வதால் தொட்டது துலங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.

புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் திருப்பம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுப் பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் புதிதாக வரும் அதிகாரியால் ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினர்களே! மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

திடீர்த் திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.

காலம் கனியக் காத்திருப்பவர்களே!

ராசிபலன்

சூரியன் 6-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரண மாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் உயரும். வீடு வாங்க, கட்ட வங்கி கடன் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது சொத்து சேரும். கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
 
2-ம் தேதி முதல் குரு 8-லும் புதன் 6-லும் மறைவதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து செல்லும். வாகனப் பழுது ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், சக ஊழியர்களுடன் மன வருத்தம் ஏற்படக்கூடும். கலைத்துறையினர்களே! நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும்.

ரகசியங்களைக் காக்கவேண்டிய நேரம் இது.