மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

செப்டம்பர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

நீண்ட கால கனவு நனவாகும்!

ராசிபலன்மேஷம்: ஏமாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சாதவர்களே! குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். நீண்ட கால கனவுகளெல்லாம் நனவாகும் நேரமிது.

நண்பர்களால் ஆதாயம்!

ராசிபலன்

ரிஷபம்: வாழ்க்கை என்பது கசந்து, துவர்த்து, புளித்து, பின்பு இனிப்பதாகும் என்பதை அறிந்தவர்களே! புதனும் சூரியனும் வலுவாக இருப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பணத் தட்டுப்பாடு இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  யாருக்காகவும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் மோதல் வரும் வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துப்போவது நல்லது. மன உறுதியால் சாதிக்கும் தருணமிது.

குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்!

ராசிபலன்மிதுனம்: வெற்றி என்பது முடிவல்ல; தோல்வி என்பது இறுதியல்ல என்பதை உணர்ந்து எதற்கும் அலட்டிக் கொள்ளாதவர்களே! சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். இழந்த சலுகைகளைப் பெறுவீர்கள். விஸ்வரூபமெடுக்கும் வேளையிது.

புதிய நபர்களிடம் கவனம் தேவை!

ராசிபலன்

கடகம்: வருங்கால கனவை நிறை வேற்றுவதில் ஆர்வம் உள்ளவர்களே!  பணப்பற்றாக்குறை இருக்கும். தூக்கம் குறையும். முன்கோபப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் நிகழ வாய்ப்பு இருப்பதால் புதிய நபர்களிடம் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் பணியிலிருந்து விலகுவார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். வீரியத்தை விட்டுவிட்டுக் காரியத்தில் கவனம்செலுத்த வேண்டிய நேரமிது.

நண்பர்களால் அனுகூலம் உண்டு!

ராசிபலன்சிம்மம்: எதையும் வெளிப்படையாகப் பேசி, அடிக்கடி வார்த்தைச் சிக்கல்களில் சிக்கிக்கொள்பவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்பார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உங்கள் ரசனைக்கேற்ற இடத்தில் வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். யோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வேளையிது.

சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும்!

ராசிபலன்

கன்னி: ஏளனமாகப் பேசுபவர் களையும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனம் செலுத்துபவர்களே! ராஜ கிரகங்களான சனியும் குருவும் வலுவாக இருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். எதிர்த்தவர்கள் உங்கள் வழிக்கு வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். தங்க நகைகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் முட்டுக்கட்டைகள் நீங்கும். உத்தியோகத்தில் மதிப்புக் கூடும். புது முயற்சிகள் வெற்றியடையும் வேளையிது.

புகழ், கௌரவம் உயரும்!

ராசிபலன்துலாம்: படிப்பாளி, பாமரன் எனப் பாகுபாடு பார்க்காமல் பலரிடமும் பாசமாகப் பழகுபவர்களே! சூரியனும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதர வகையில் பலனடைவீர்கள். பழைய காலி மனையை விற்றுவிட்டு, புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வழக்கு சாதகமாகும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். கடின உழைப்பால் உயரும் நேரமிது.

மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்!

ராசிபலன்

விருச்சிகம்: மனம்போன போக்கில் போகாமல் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிப்பவர்களே! முக்கிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்ப தால் குடும்ப வருமானம் உயரும். எதிர்பார்த்த பணம் வரும். நகைகளை புது டிசைனில் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.  பிள்ளைகள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

பூர்வீகச் சொத்து கைக்கு வரும்!

ராசிபலன்தனுசு: ஊரே கூடி நின்று எதிர்த்தாலும் முன்வைத்தக் காலை பின் வைக்காதவர்களே! ராசிநாதன் குரு பகவான் சாதகமாக இருப்பதால் உங்கள் திறமைகள் வெளிப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இழுபறியான காரியங்கள் உடனே முடியும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். வழக்கு வெற்றியடையும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கைகூடி வரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  உத்தியோகத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும் வேளையிது.

எதிர்ப்புகள் அடங்கும்!

ராசிபலன்

மகரம்: ‘கற்றது கைமண் அளவுதான்’ எனத் தன்னடக்கத்துடன் இருப்பவர்களே! புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தோல்வி மனப்பான்மை விலகும். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். ராசிநாதன் சனி பகவான் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். புதிய நபர்களிடம் கவனம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். தன்னம்பிக்கை கொள்ள வேண்டிய தருணமிது.

வியாபாரத்தில் திடீர் லாபம்!

ராசிபலன்கும்பம்: யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத நீங்கள், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கொள்கையுடன் வாழ்பவர்களே! சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் காலமிது.

திடீர் பண வரவு உண்டு!

ராசிபலன்

மீனம்: பாரம்பர்ய கலைகளை ஆதரிப்பதுடன், புதுமையையும் விரும்புபவர்களே! புதிய முயற்சிகள் வெற்றியடையும். நின்றுபோயிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். திடீர் பண வரவு உண்டு. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமிது.