Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

செப்டம்பர் 12 முதல் 25 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

செப்டம்பர் 12 முதல் 25 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்மேஷம்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே! உங்களுடைய ராசியை குரு பகவான் பார்ப்பதால் அஷ்டமத்துச் சனியின் பாதிப்பு ஓரளவு குறையும். மன நிம்மதி உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணம் வரும் என்றாலும் பற்றாக் குறையும் நீடிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப் படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக்கூடும்.

17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்தில் அமர்வதால் அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  பூர்வீகச் சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும்.  கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறு வீர்கள். கலைத்துறையினரே! உங்களது படைப்புகளுக்குப் பாராட்டுகள் குவியும்!

எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் நேரம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

ராசிபலன்


இலக்கை எட்டும் வரை ஓயாமல் போராடுபவர்களே! புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனைகளில் மாற்றம் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.

அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்கள் லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் வலியவந்து உதவுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். கன்னிப் பெண்களின் விருப்பங்களைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். அவர்களது புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள்.

3-ம் இடத்தில் ராகு பகவான் நிற்பதால் வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை உங்களது புதிய யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! நீங்கள் எதிர் பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும் தருணம் இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்

எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப் பவர்களே! குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் ஒருபடி  உயரும்.  பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

பிள்ளைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினரைச் சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சூரியன் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் வெளியூர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு எதிர்காலம் குறித்த தெளிவு பிறக்கும்.  வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில், மூத்த அதிகாரி உங்களைப் புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினரே! உங்கள் கலைத் திறன் வளரும்.

நீண்ட கால கனவுகளெல்லாம் நனவாகும் காலம் இது.

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

ராசிபலன்


உடனிருப்பவர்களை உற்சாகப் படுத்தும் அன்பர்களே! 17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். பேச்சில் அறிவு முதிர்ச்சி வெளிப்படும். தடைப் பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிவரும். சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். கலைத் துறையினரே! வேற்றுமொழி வாய்ப்பு களால் புகழடைவீர்கள்.

தடைகளையும் தாண்டி முன்னேறும் வேளையிது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்


சிம்மம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! கேது 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர் பார்த்த பணம் வரும். அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். மன இறுக்கம் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதி யைப் பைசல் செய்ய வழி பிறக்கும்.

சில நேரங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டாலும், பல நேரங்களில் அறிவு பூர்வமாக முடிவெடுத்துச் சாதிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். வீட்டை விரிவு படுத்திக் கட்டுவதற்கு முடிவெடுப்பீர்கள். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் தடைப்பட்டு முடியும். இடம், பொருள், ஏவலறிந்துப் பேசப் பாருங்கள். சின்ன சின்ன பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பது இழுபறி யாகி முடியும். உங்களது வாகனம் பழுதாக வாய்ப்புள்ளது. ஆகவே, கவனம் தேவை.

வியாபாரத்தில், முக்கிய பிரமுகர் கள் அறிமுகமாவர்கள். அவர்களுடைய உதவியால் சில பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் உங்களுக்குக் கிடைக் கும். உத்தியோகத்தில் அவ்வப்போது மூத்த அதிகாரி உங்களுடைய திறமையைப் பரிசோதிப்பார். கலைத்துறையினரே! உங்கள் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

ராசிபலன்


குலம், கோத்திரம் என்று பேதம் பார்க்காமல் அனைவருடனும்  பாசத்துடன் பழகுபவர்களே! ராகுவும் குருவும் சாதகமாக இருப்பதால் எதிர் பாராத பண வரவு உண்டு. வி.ஐ.பி-க் கள் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக் கும். பழைய பிரச்னைகளைப் பேசி தீர்ப்பீர்கள். வேற்று இனத்தைச் சேர்ந்த வர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும். ராசிநாதன் புதன், 22-ம் தேதி முதல் உங்கள் ராசியிலேயே உச்சம்பெற்று அமர்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். தைரியமாகச் சில முக்கிய முடிவு களை எடுப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்த ராசியைச் சேர்ந்த கன்னிப் பெண்களுக்குச் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறை யினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும்.

எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும் தருணமிது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

அகிம்சை வழியில் சென்று நினைத்ததை அடைபவர்களே!  செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் உங்களுடைய நிர்வாகத் திறன் கூடும். இழுபறியாக இருந்த பல வேலைகளைச் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள்.அதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாகச் செயல்படுவார்கள்.

நீங்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். நீண்ட நாள்களாகப் போக நினைத்திருந்த புண்ணிய  திருத்தலங்களுக்குக் குடும்பத்துடன்  சென்று வருவீர்கள். கூடுதலாகச் செலவு செய்து பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். பழுதாகிக் கிடக்கும் வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். கன்னிப் பெண்கள் புதியவர்களிடம் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் இதுவரை இருந்த நிலை மாறும். வணிக சூட்சுமங்களை உணர்ந்து செயல்படுவீர்கள். வாடிக்கை யாளர்களிடம் கண்டிப்பு கூடாது; கனிவுடன் பழகுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் சொந்த விஷயங் களில் தலையிட வேண்டாம். கலைத் துறையினரே! புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

ராஜதந்திரத்தால் சாதிக்க வேண்டிய நேரம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

ராசிபலன்


பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளியாமல், எதிர்த்து நின்று வெல்பவர்களே! செவ்வாயும் சூரியனும்  உங்களுக்குச் சாதகமாக இருப்பதால்  நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.

பெரிய பதவியில் இருப்பவர்களது நட்பு கிடைக்கும். அதன்மூலம் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்த அன்பர்களுக்கு, நல்லதொரு  நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அரசாங்க விஷயம் நல்லவிதமாக முடியும். வெளிவட்டாரத் தில் மதிப்பு மரியாதை கூடும். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் மதிப்புமிகு பதவிகள் உங்களைத் தேடி வரும்.

12 -ம் இடத்தில் குரு தொடர்வதால் வீண் விரயம், செலவுகள், அலைச்சல் வந்துபோகும். ஆன்மிகப் பயணங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த உயர்வு உண்டு. கலைத்துறையினரே! உங்கள் படைப்பு, பட்டித்தொட்டி யெங்கும் பாராட்டுகளைக் குவிக்கும்.

புதிய முயற்சிகள் பலிதமாகும் காலம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தனுசு

ராசிபலன்எதையும் தொலைநோக்குடன் செய்து முடிப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் கை ஓங்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பதவிகள் தேடி வரும்.

குடும்பத்தில் உங்களது ஆலோ சனையை ஏற்றுக்கொள்வார்கள். புதிய வேலை அமையும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. அரசால் ஆதாயம் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழி உறவுகளால் நன்மை உண்டு. திருமணத் தடை நீங்கும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிநாதன் குரு பகவான் லாப வீட்டில் நிற்பதால் சுப நிகழ்ச்சி களால் வீடு களை கட்டும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிதாகக் கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோ கத்தில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். கலைத்துறையினரே! உங் களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

ஆளுமைத் திறன் அதிகரிக்கும் தருணம் இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

ராசிபலன்


வாதத்திறமையால் எவரையும் வெல்பவர்களே! உங்களுடைய யோகாதிபதிகளான சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, மனை அமையும். வாகனப் பழுது நீங்கும். நட்பு வட்டம் விரியும்.

9-ம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் நிற்பதால் தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அரசு விஷயங் களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். சொத்து விஷயத்தில் கறாராக இருங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுக்காகச் சாட்சிக் கையொப்ப மிட வேண்டாம். மனைவிக்கு வயிற்று வலி, ரத்த சோகை வந்து செல்லும். கன்னிப் பெண்கள் தங்களின் பள்ளி, கல்லூரி காலத் தோழியைச் சந்தித்து மகிழ்வார்கள்.

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினரே! சம்பளப் பாக்கி உங்களைத் தேடிவரும்.

பொறுமையும் நாவடக்கமும் தேவைப்படும் வேளை இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

கும்பம்

ராசிபலன்பாரம்பர்யமான விஷயங்களில் அதீத கவனம் செலுத்துபவர்களே! குரு 9-ம் வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர் களின் நட்பால் தெளிவடைவீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிதுர்வழி சொத்து சிக்கல்கள் சுமுகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியனும் செவ்வாயும் சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சகோதர வகையில் மனக்கசப்புகள் வந்துபோகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

புதனும் சுக்கிரனும் உங்களது ராசியைப் பார்ப்பதால் பண வரவு உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். உறவினர்கள், நண்பர்கள் பாராட்டும்படி நடந்துகொள் வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத் தில் உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினரே! உங்களுக்குக்  கிடைக்கும் புதிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன் படுத்திக் கொண்டால், அதீத முன்னேற்றம் உண்டாகும்.

புகழ் வெளிச்சத்துக்கு வரும் காலம் இது.

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

ராசிபலன்


எப்போதும் மற்றவர்களுக்குச் சவாலாக விளங்குபவர்களே! செவ்வாய்  6-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும்.சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர்.

15-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம், அதனால் சச்சரவுகள் உண்டாகலாம்; விட்டுக்கொடுத்துப் போகவும். இருமல், சைனஸ்  தலைவலி, சளித் தொந்தரவு ஆகியன வந்து போகும். 22-ம் தேதி முதல் புதன் உச்சம் பெற்று 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவுள்ள தால் வாழ்க்கைத் துணைவரின் உடல்நலம் சீராகும். பூர்வீகச் சொத்தை மாற்றிவிட்டு, புது வீடு வாங்குவீர்கள்.

17-ம் தேதி முதல் 7-ல் சூரியன் நுழைவதால் அவ்வப்போது முன்கோபம் உண்டாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங் களை வெளியே சொல்ல வேண்டாம். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை வெளியிட போராட வேண்டிவரும்.

வளைந்துகொடுக்க வேண்டிய தருணம் இது.