தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை

புதிய திட்டங்கள் நிறைவேறும்!

ராசிபலன்மேஷம்: சீர்திருத்தச் சிந்தனையும் தொலைநோக்கும் கொண்டவர்களே! குரு உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பெரிய மனிதர்கள் அறிமுகமாவார்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்குக் கூடும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். லேப்டாப், நவீன ரக கைப்பேசி போன்ற எலெக்ட்ரானிக்ஸ்  பொருள்களைச் சிலர் வாங்குவீர்கள். பாராட்டு கிடைக்கும்.புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

வாக்குறுதி தர வேண்டாம்!

ராசிபலன்

ரிஷபம்: சிரிக்கப் பேசி சிந்திக்க வைப்பவர்களே! இழுபறியாக இருந்த பல வேலைகள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதரிக்குத் திருமணம் கைகூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உங்களின் குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்ப்புகளும் இடையூறுகளும் இருந்து கொண்டேயிருக்கும். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய தருணமிது.

புதிய முயற்சிகள் பலிதமாகும்!

ராசிபலன்மிதுனம்: மனசாட்சிக்கு முக்கியத்து வம் தருபவர்களே! தன்னம்பிக்கை அதிகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்ட தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புகழ்ந்து பேசுவார்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாயிருங்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். செல்வம், செல்வாக்குக் கூடும் வேளையிது.

ராசிபலன்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்!

கடகம்: செய்நன்றி மறவாதவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். திடீரென்று அறிமுகமாகிறவர்களை நம்பி கொடுக்கல் வாங்கலில் இறங்க வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில்  கவனமாகப் பணியாற்றுங்கள். போராட்டங்களைக் கடந்து முன்னேறும் தருணமிது.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்!

ராசிபலன்சிம்மம்: எப்போதும் நீதியின் பக்கம் நின்று போராடுபவர்களே! சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பழைய நகைகளை மாற்றி, புதிய டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டிய தருணமிது.

ராசிபலன்

புதிய வேலை கிடைக்கும்!

கன்னி: சாது மிரண்டால் காடு தாங்காது எனும் குணமுள்ளவர்களே! ராஜ கிரகங்களான குருவும் சனியும் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வேற்று மதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நேரமிது.

பணப்புழக்கம் கணிசமாக உயரும்!

ராசிபலன்துலாம்: கனிவான பேச்சால் அனைவரையும் கவர்பவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நல்லவிதமாக முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நல்ல வேலை அமையும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு, காசோலை தருவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் காலமிது.

புதிதாகச் சொத்து வாங்கும் யோகம்!

ராசிபலன்

விருச்சிகம்: காலத்தின் போக்கை உணர்ந்து செயல்படுபவர்களே! புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன சவாலான விஷயங்களைச் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டு பேசி, எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். புத்துணர்ச்சி ததும்பும் வேளையிது. 

உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்!

ராசிபலன்தனுசு: மன்னிக்கும் குணம் கொண்ட நீங்கள் மற்றவர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். குரு வலுவாக இருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரைக்கப்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொட்டது துலங்கும் தருணமிது.

ராசிபலன்

வங்கிக் கடன் உதவி கிடைக்கும்!

மகரம்: பிள்ளை மனம்கொண்ட  வெள்ளை உள்ளத்தினரே! உங்களது ராசிநாதனான சனி பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எத்தனை போராட்டங்கள் வந்தாலும், சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புது வேலை அமையும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பணப் பற்றாக்குறை நீடிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய காலமிது.

ஆடை, ஆபரணம் சேரும்!

ராசிபலன்கும்பம்: தொடங்கிய வேலையில் கண்ணும்கருத்தாக இருப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணம் சேரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பள்ளிப் பருவத் தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும் தருணமிது.

ராசிபலன்

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்!

மீனம்: புரட்சிக்கு வெகுண்டாலும், அன்புக்குக் கட்டுப்படுபவர்களே! ராசிக்கு 6-ம் இடத்தில் செவ்வாய் நிற்பதால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பலம், பலவீனத்தை உணர வேண்டிய வேளையிது.